ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Saturday, 5 March 2011

சிங்கார வேலனே தேவா..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)



கொஞ்சும் சலங்கை என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிங்கார வேலனே தேவா...' என்ற அற்புதமான பாடலை இன்று நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்.

நவம்பர் 14, 1962 அன்று வெளியான இப்படத்தினை தயாரித்து, இயக்கியவர்  திரு. எம்.வி.இராமன் அவர்கள். இசைமேதை எஸ்.எம்.சுப்பையாநாயுடு அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்பாடலின் வரிகளை கு.மா.பாலசுப்ரமணியம் எழுதிக் கொடுக்க, குரல் வழியே உயிர் கொடுத்தவர் எஸ். ஜானகி அவர்கள். இப்பாடலில் நாதஸ்வரம் மிக முக்கியமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த நாதஸ்வர இசையின் இப்பாடலுக்கு வாசித்தவர் பிரபல நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலம் அவர்கள்.

எனக்குப் பிடித்த இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட நண்பர் திரு. தாம்ஸ் அவர்களுக்கு எனது நன்றி. எங்களுக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.. உங்களுக்குப் பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!



சிங்கார வேலனே தேவா..! | Musicians Available


------------------------------

Anonymous Dhams said...



Mr. Moganan,

I was able to visit your blogspot because of Ananda Vikatan. I find your blogspot interesting.

I like to hear old songs .plz send me the song "SINGARA VELANE DEVA" from KONJUM SALANGAI and "THUKAMUM KANKALAI THALUVATUMEY " SONG.

THANK YOU
13 February 2011 11:46
----------------------------------
இப்பாடல் குறித்த சில தகவல்கள்

சாந்தா! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்? உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு, ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா! பாடு சாந்தா, பாடு! என்று நாமெல்லாம் கிண்டல் பண்ணுவோமே... அந்த புகழ் பெற்ற டயலாக் இடம் பெற்ற பாடல் இதுதான்.

இப்படத்தின் நாயகி சாவித்திரி முதலில் ஒரு வரிதான் பாடுவார்... அதைக் கேட்ட ஜெமினி கணேசன் அந்த வரியை நாதஸ்வரத்தில் வாசிப்பார். அதைக் கேட்டதும் சாவித்திரி பாடாமல் நிறுத்தி விடுவார். பாடியது யாரென்று பார்க்கும் நோக்கில் ஜெமினி சாவித்ரியைப் பார்க்க வருவார்.. உட்கார்ந்திருக்கும் சாவித்திரி ஜெமினியைக் கண்டதும் எழுந்து விடுவார்... அப்போது

ஜெமினி: சாந்தா உட்கார்...
ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்...
உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே
நீந்துவதற்க்கு ஓடோடி வந்த என்னை 
ஏமாற்றிவிடாதே சாந்தா...

சாவித்திரி: என்னங்க, உங்கள் நாதஸ்வரத்திற்கு முன்னாள்..?

ஜெமினி: தேனோடு கலந்த தெள்ளமுது, 
கோலநிலவோடு சேர்ந்த குளிர்தென்றல்,
இந்த சிங்கார வேலன் சந்நிதியில் நமது சங்கீத அருவிகள் ஒன்று சேரட்டும்
பாடு சாந்தா பாடு..!

இதுதான் அந்த டயலாக்கோட முழுவிபரம்..!

@ இப்பாடலில் ஒரு பல்லவி ஒரு சரணம் மட்டுமே மேலோங்கி நிற்கும்.. மீதமெல்லாம் சங்கீத தாள வரிகளான.. சரிகமப.... சரி நித ப... போன்ற சங்கீத மொழிகள் ஆக்கிரமித்துக் கொள்ளும்... கேட்க மிகவும் இனிமையாக இருக்கும்.

@இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, இப்பாடலில் இடம் பெற்றுள்ள நாதஸ்வரத்து ஈடு கொடுக்கக் கூடிய பெண் குரல் யாருக்கு இருக்கிறது என்று பல விதமாக ஆய்வு செய்திருக்கிறார். காரணம், நாதஸ்வரத்துக்கு ஒலிபெருக்கியே தேவையில்லை! அவ்வளவு கனம்..! அந்த இசைக்கு ஈடு கொடுக்கக் கூடிய கனமான பெண் குரல் யாருக்கு இருக்கு என்பதுதான் அவரது ஆய்வு...?

பல பாடகர்களையும் பொருத்திப் பொருத்திப் பார்த்ததில், எஸ். ஜானகி அவர்கள்தான் நாதஸ்வரத்துக்கு மிகவும் சரியாக பொருந்தினார். அதனால் அவரை இப்பாடலைப் பாடவைத்தார்.

@ இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, முதலில் இந்தப் பாட்டைப் போடுவதாக இல்லை! அவர் போட எண்ணிய பாட்டு, திரு ஞான சம்பந்தரின் தேவாரப் பாடலான- "மந்திரம் ஆவது நீறு, வானவர் மேலது நீறு"! என்ற பாடலைத்தான்.

இந்த பாடலைத்தான் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்கள் நாதஸ்வரத்தில் வாசித்து விட்டுச் சென்றாராம். அதுவும் இப்போதைய மெட்டில்! 

பின்னர்...வெறுமனே நாதமாக இல்லாமல், ஒரு பாடகியின் குரலும் சேர்ந்து ஒலித்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல, எஸ்.ஜானகி 
வரவழைக்கப்பட்டார்! தேவாரப் பாடலும் ஏனோ மாறியது! கவிஞர் கு.மா.பா "சிங்கார வேலனே தேவா" என்று மாற்றி எழுதினார்! ஜானகி பாடினார்!

ஆனால் காருக்குறிச்சியார், தேவாரம்-ன்னு நினைச்சி, ஏற்கனவே வாசித்துக் கொடுத்தது, கொடுத்தது தான்! அதை மாற்ற யாருக்கும் மனமில்லை!
பாடலையும், இசையும் பின்னர் காப்பி & பேஸ்ட் செய்தார்கள்! ஆனால் கேட்கும் போது அப்படி மிக்ஸ் செய்தார்கள் என்று சொல்லத் தான் முடியுமா?
அத்தனை நேர்த்தி! எப்போது என்றால் 1962-ல்!

@ இந்தப் பாட்டுக்கு அப்புறம் ஜானகியின் கொடி பட்டொளி வீசி பறக்கத் துவங்கி விட்டது!

பின்னூட்டத்தில் நண்பர் அருண் கொடுத்த தகவல் அப்படியே இங்கே..!

இப்படலை பற்றி எனக்கு தெரிந்த ஒரு தகவல்..

முதலில் இப்பாடல் லதா மங்கேஷ்கர் பாடுவதாகத்தான் இருந்தது.. அதற்காக திரு.S.M சுப்பையா நாயுடு மும்பை வரை சென்று பாடலின் சங்கீத சுரத்தை சொல்லியிருக்கிறார்.


சற்றே தயங்கிய லதா மங்கேஷ்கர் பிறகு கூறுகிறேன் என்றும் , பிறகு நாதஸ்வர இசையோடு பாடும் அளவிற்கு தான் இன்னும் பக்குவப்படவில்லை என்றும் திரு.S.M சுப்பையா நாயுடுவிடம் கூறியிருக்கிறார்.


பிறகு இந்த பாடலுக்கு அவரை பரிந்திரைத்த நபரே ஜானகி அம்மவை பரிந்துரைத்திருக்கிறார்.. அவரது பெயரை மறந்துவிட்டேன். பிறகு தான் ஜானகி அம்மாவை இந்த பாடலுக்காக திரு.S.M சுப்பையா நாயுடு அவர்கள் அழைத்து ட்ராக் பாட சொல்லி கேட்டிருக்கிறார்.. அவர் பாடிய அந்த முதல் ட்ராக்கே அவருக்கு பிடித்து போக படத்திலும் அவரது குரல் ஒலியிலேயே வந்தது.


இதை ஜானகி அம்மாவே சில மாதங்களுக்கு முன்னால் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “மனதோடு மனோ” நிகழ்ச்சியில் நினைவு படுத்தினார்....

உங்கள் சேவை தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்


அன்புடன்
மதுரை அருண்




8 comments:

தமிழன்பன் said...

அருமையான பாடல் ஒன்றை நினைவூட்டியமைக்கு நன்றி...

மோகனன் said...

வருகைக்கு மிக்க நன்றி தமிழன்பன்...

அடிக்கடி கேட்க வாங்க..!

Arun Kumar N said...

அருமையான பாடல் பதிவிற்கு என் முதன் நன்றி...
மோகனன் அவர்களே பாடலுக்கு தாங்கள் கொடுத்திருக்கும் பின்னூட்டம் மிக அருமை..
இப்படலை பற்றி எனக்கு தெரிந்த ஒரு தகவல்..

முதலில் இப்பாடல் லதா மங்கேஷ்கர் பாடுவதாகத்தான் இருந்தது.. அதற்காக திரு.S.M சுப்பையா நாயுடு மும்பை வரை சென்று பாடலின் சங்கீத சுரத்தை சொல்லியிருக்கிறார்.
சற்றே தயங்கிய லதா மங்கேஷ்கர் பிறகு கூறுகிறேன் என்றும் , பிறகு நாதஸ்வர இசையோடு பாடும் அளவிற்கு தான் இன்னும் பக்குவப்படவில்லை என்றும் திரு.S.M சுப்பையா நாயுடுவிடம் கூறியிருக்கிறார்.
பிறகு இந்த பாடலுக்கு அவரை பரிந்திரைத்த நபரே ஜானகி அம்மவை பரிந்துரைத்திருக்கிறார்.. அவரது பெயரை மறந்துவிட்டேன். பிறகு தான் ஜானகி அம்மாவை இந்த பாடலுக்காக திரு.S.M சுப்பையா நாயுடு அவர்கள் அழைத்து
ட்ராக் பாட சொல்லி கேட்டிருக்கிறார்.. அவர் பாடிய அந்த முதல் ட்ராக்கே அவருக்கு பிடித்து போக படத்திலும் அவரது குரல் ஒலியிலேயே வந்தது.
இதை ஜானகி அம்மாவே சில மாதங்களுக்கு முன்னால் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “மனதோடு மனோ” நிகழ்ச்சியில் நினைவு படுத்தினார்....


உங்கள் சேவை தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

அன்புடன்
மதுரை அருண்

http://www.maduraispb.blogspot.com/

மோகனன் said...

தங்களின் வருகைக்கும், அரிய தகவலிற்கும் எனது நன்றிகள்...

அடிக்கடி கேட்க வாங்க அருண்..!

Anonymous said...

நண்பரே, நான் சிறிது காலம் உங்கள் வலை தளத்தின் பக்கம் வரவில்லை. இத்தனை பாடல்களா !

அருமையான பல பாடல்களை தந்துள்ளீர்கள். "உலகம் இதிலே அடங்குது, உண்மையும் பொய்யும் விளங்குது " (இதன் திரைப்படம் தெரியவில்லை) என்று வானொலி பற்றிய ஒரு பாடலின் திரை வடிவம் கிடைத்தால் கொடுங்கள். இதன் ஒலி வடிவம் என்னிடம் உள்ளது.

நன்றி.

மோகனன் said...

அன்பான முகம் தெரியா நண்பருக்கு...

இப்பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர் குலமகள் ராதை... இது வானொலி பற்றிய பாடலல்ல... செய்தித் தாளைப் பற்றியது...

கூடிய விரைவில் தங்களது வேண்டுகோளை பூர்த்தி செய்கிறேன்...

வருகைக்கு மிக்க நன்றி..!

DHARMARAJ BHARATH said...

hey,what a pitty

மோகனன் said...

நன்றி தர்மராஜ் பரத்