அன்பான வாசகர்களுக்கு...
மோகனனின் வணக்கங்கள்... 15.12.2010 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழின் விகடன் வரவேற்பறையில் 'பழமை இனிமை' என்ற தலைப்பில், நமது இணையதளத்தைப் பாராட்டி வெளியிட்டிருக்கிறார்கள். மேலே உள்ள படத்தை கிளிக்கினால் படம் பெரிதாய் விரியும். பார்த்து மகிழுங்கள்... தொடர்ந்து ஆதரவைத் தாருங்கள்...
இந்த வலைத் தளம் துவங்கியது ஏன்?
கிராமியப் பாடல்களை இணையத்தில் தேடியபோது எங்கும் கிடைக்கவில்லை.. அப்படி அரிதாகக் கிடைத்தாலும் ஒரு சில பாடல்களே இருந்தன. அனைத்தும் கிடைக்கவில்லை. அதையும் மீறி அதற்கு பணம் செலுத்தினால்தான் பாடலைக் கேட்க வேண்டும் என்ற நிபந்தனைகள்...
ஆகவேதான் இதற்கென ஒரு தளம் இருக்கவேண்டும் என முடிவு செய்தேன். 20.10.2009 அன்று இந்த தளத்தை துவக்கினேன். அன்று முதல் இன்று வரை உங்களது ஆதரவின்பால் இதனை பல சிரமங்களுக்கு இடையே நடத்தி வருகின்றேன்.
கிராமிய கீதத்தில் மன்னரான கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி, மருத்துவர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் ஆகியோரின் கிராமியப் பாடல்கள் என்னை எப்போதுமே மகிழ்ச்சியில் வைத்திருப்பவையாகும். 'யான் பெற்ற இன்ப பெறுக இவ்வையகம்' என்ற நோக்கில் செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கிறேன்.
அண்மையில் நம்பி என்ற வாசகர் ஒருவர் பின்னூட்டமிடுகையில் 'ஆனந்த விகடனில் உங்களது வலைத்தளத்தைப் பார்த்தபிறகு, உங்கள் தளத்திற்கு வந்தேன்' என குறிப்பிட்டிருந்தார்.
---

வணக்கம் மோகனன்,
உங்கள் பதிவினை ஆனந்த விகடன் வாயிலாக கண்டு கொண்டேன். உங்கள் பாடல் தேர்வு வியக்க வைக்கிறது. இவற்றை சேகரிப்பதற்கான உழைப்பு மலைக்க வைக்கிறது.
கவிஞர் தாராபாரதி எழுதிய 'வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்' என்ற பாடலை அறிவீரகளா? மிகுந்த தன்னம்பிக்கையூட்டும் பாடல். புஷ்பவனம் குப்புசாமி பாடிய ஒரு தொகுப்பில் கேட்டதாக நினைவு.
இப்பாடலை தங்கள் பதிவில் சேர்க்க இயலுமா?
நன்றிகளுடன்,
நம்பி