ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday 5 January 2011

ஆனந்த விகடனில் நமது இனிய தமிழ்ப்பாடல்கள் தளம்..!


அன்பான வாசகர்களுக்கு...

மோகனனின் வணக்கங்கள்... 15.12.2010 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழின் விகடன் வரவேற்பறையில் 'பழமை இனிமை' என்ற தலைப்பில், நமது இணையதளத்தைப் பாராட்டி வெளியிட்டிருக்கிறார்கள். மேலே உள்ள படத்தை கிளிக்கினால் படம் பெரிதாய் விரியும். பார்த்து மகிழுங்கள்... தொடர்ந்து ஆதரவைத் தாருங்கள்...

இந்த வலைத் தளம் துவங்கியது ஏன்?

கிராமியப் பாடல்களை இணையத்தில் தேடியபோது எங்கும் கிடைக்கவில்லை.. அப்படி அரிதாகக் கிடைத்தாலும் ஒரு சில பாடல்களே இருந்தன. அனைத்தும் கிடைக்கவில்லை. அதையும் மீறி அதற்கு பணம் செலுத்தினால்தான் பாடலைக் கேட்க வேண்டும் என்ற நிபந்தனைகள்...

ஆகவேதான் இதற்கென ஒரு தளம் இருக்கவேண்டும் என முடிவு செய்தேன். 20.10.2009 அன்று இந்த தளத்தை துவக்கினேன். அன்று முதல் இன்று வரை உங்களது ஆதரவின்பால் இதனை பல சிரமங்களுக்கு இடையே நடத்தி வருகின்றேன்.

கிராமிய கீதத்தில் மன்னரான கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி, மருத்துவர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் ஆகியோரின் கிராமியப் பாடல்கள் என்னை எப்போதுமே மகிழ்ச்சியில் வைத்திருப்பவையாகும். 'யான் பெற்ற இன்ப பெறுக இவ்வையகம்' என்ற நோக்கில் செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கிறேன்.

அண்மையில் நம்பி என்ற வாசகர் ஒருவர் பின்னூட்டமிடுகையில் 'ஆனந்த விகடனில் உங்களது வலைத்தளத்தைப் பார்த்தபிறகு, உங்கள் தளத்திற்கு வந்தேன்' என குறிப்பிட்டிருந்தார்.
---

Anonymous Nambi said...

வணக்கம் மோகனன்,

உங்கள் பதிவினை ஆனந்த விகடன் வாயிலாக கண்டு கொண்டேன். உங்கள் பாடல் தேர்வு வியக்க வைக்கிறது. இவற்றை சேகரிப்பதற்கான உழைப்பு மலைக்க வைக்கிறது.



கவிஞர் தாராபாரதி எழுதிய 'வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்' என்ற பாடலை அறிவீரகளா? மிகுந்த தன்னம்பிக்கையூட்டும் பாடல். புஷ்பவனம் குப்புசாமி பாடிய ஒரு தொகுப்பில் கேட்டதாக நினைவு.

இப்பாடலை தங்கள் பதிவில் சேர்க்க இயலுமா?

நன்றிகளுடன்,

நம்பி
22 December 2010 11:17
----- 
இத்தகவலைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன். ஆனந்த விகடன் இதழ்களில் எந்த வார இதழ் என்று தெரியவில்லை. தேடி அலைந்தும் பலனில்லை... நம்பியிடம் பின்னூட்டத்தில்கேட்டும் பதிலில்லை.
மற்றொரு வாசகரான அ. சிவகுமார் என்பவர் 15.12.2010 தேதியிட்ட இதழில், 84-ம் பக்கத்தில், விகடன் வரவேற்பறை தலைப்பிட்டு, நமது வலைதளத்தினை 'பழமை இனிமை' என்று உபதலைப்பிட்டு கொடுத்திருக்கிறார்கள் என்று மின்னஞ்சலில் தகவலளித்தார்.
அதற்குள் இரண்டு வாரங்கள் ஓடி விட்டிருந்தன. நூலகத்தில் சென்று கேட்டால் 'அந்த இதழ் போன வருடத்தியது (10 நாட்களுக்குள்) அதனால் மூட்டை கட்டி வைத்து விட்டோம். வேறு நாலகத்தில் போய்ப்பாருங்கள்' என்று விட்டனர்.
தேடி அலைந்தும் கிடைக்கவில்லை. ஆனந்தவிகடன் அலுவலகத்திற்கு நேரிலே சென்றுவிடவேண்டியதுதான் என முடிவெடுத்தேன். அதன்படி இருநாட்களுக்கு முன்பு சென்று, இப்புத்தகத்தை வாங்கினேன். அந்த செய்தியைக் கண்டேன். மனதில் மகிழ்ச்சி துள்ளியது. 'என் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம், வெற்றி' என்று அங்கிருந்த நண்பரிடம் கூறினேன்.
இது ஒரு ஊக்கமூட்டுதலாக இருந்தது. இந்த வெற்றிக்கு வாசகர்களாகிய நீங்கள்தான் முதல்காரணம். தொடரும் உங்களது ஆதரவிற்கு நன்றி. திறமை கண்டு வெளியிட்ட ஆனந்த விகடனுக்கு எனது நன்றி.
(நான் ஆனந்த விகடனில் சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பத்திரிகையாளராகவும், புகைப்படக்காரராகவும் பணிபுரிந்தவன். இந்த இதழை வாங்கச் செல்லும் போது, ஆனந்த விகடன் அலுவலக நண்பர்கள், எனை இன்னும் மறக்காமல் இருந்து நலம் விசாரித்தார்கள். அவர்களுக்கும் எனது நன்றிகள்)




14 comments:

யூர்கன் க்ருகியர் said...

அப்படியா நண்பா ,, ... மிக்க மகிழ்ச்சி
பெரும்பான்மையானோருக்கு உங்கள் வலைப்பக்கம் சென்றடைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி...

யூர்கன் க்ருகியர் said...

இப்போ விகடன் ...அப்புறம் லிம்கா புக் ,,,பின்னே கின்னஸ் புத்தகம் .. முடிந்தா நோபெல் பரிசுக்கு கூட பரிந்துரைக்கலாம் .... எப்படி ஐடியா ?

Mohan said...

வாழ்த்துகள்!

மோகனன் said...

வாங்க யூர்கன்...

தங்கள் மகிழ்விற்கும்ர வாழ்த்திற்கும் எனது இனிய நன்றிகள்..!

மோகனன் said...

இன்னபா யூர்கன்...

இஷ்டத்துக்கு வுட்டு கட்டறே... இதெல்லாம் நமக்கு வேணாம்பா...

எல்லோரும் குஜாலா இருந்தா அது போதும்...

வர்ட்டுமா..!

மோகனன் said...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி மோகன்

Anonymous said...

தங்களுடைய பலன் எதிர்பார்க்காத பரந்த மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி!

மோகனன் said...

வாழ்த்தியமைக்கு நன்றி லக்சு..!

குறையொன்றுமில்லை. said...

வாழ்த்துக்கள் மோஹனன்.

மோகனன் said...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி அம்மா..!

அடிக்கடி கேட்க வாங்க..!

திவ்யாஹரி said...

வாழ்த்துக்கள் மோகனன்...

மோகனன் said...

வாங்க திவ்யா ஹரி...

நம்மையெல்லாம் மறந்துட்டீக போலருக்கு....


வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..!

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

மோகனன் said...

உங்கள் மனவலிதான் என்ன?