ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன். Show all posts
Showing posts with label விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன். Show all posts

Tuesday, 18 March 2014

ஏ... ஒத்தையடிப் பாதையில..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் கிராமிய பாடல்


கிராமிய பாடலைக் கேட்டு ரொம்ப நாளாச்சு... அதை பதிவிலிட்டும் ரொம்ப நாளாச்சு இல்லையா... இன்று அந்த குறையை போக்கிடலாம். எனக்குப் பிடித்த இந்த பாடல் நிச்சயம் உங்களையும் கவரும்.

கிராமியப் பாடகர்களான விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினர் பல்வேறு பாடல்களைப் பாடியிருக்கின்றனர். அதில் இன்று ஒரு பாடலைப் பதிவிலிடுகிறேன்.

'ஏ... ஒத்தையடிப் பாதையில... அத்தை மக போகையில...' என்று துவங்கும் இந்தப்பாடல் எசப்பாட்டு வகையினைச் சேர்ந்தது. அத்தை மகள் ஒத்தையடிப் பாதையில் போவதை பார்க்கும் முறை மாமன், அவளைப் பற்றி ஒரு பாடலை எடுத்து விடுகிறான். அதற்கு பதிலாக அத்தை மகளும் எசப்பாட்டை எடுத்து விடுகிறாள்.

 எனக்குப் பிடித்த இந்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள். பிடித்திருந்தால் இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள். 





*****************************************

இப்பாடலில் நான் கண்ட சுவாரசியத் தகவல்கள்



@ கோரஸ் குரலில் வரும் வாக்கியங்கள் அந்தகால காதலை கண்முன் நிறுத்துவது போல் இருக்கும். 'ஆசை கெடக்குது ஆசை கெடக்குது அஞ்சறைப் பெட்டிக்குள்ள... சீவன் கெடக்குது சீவன் கெடக்குது செந்தூரப் பொட்டுக்குள்ள...' என்று கோரஸ் பாடுவார்கள்.

@ இதில் முதல் வரி, அந்த காலப் பெண்களின் காதலை நயமாக எடுத்துச் சொல்லும். நாள் முழுக்க ஏர்பிடித்து, உயவு செய்து,  வெள்ளாதை செய்து, வீட்டில் சேகரித்து வைக்கும் தானியங்களை வீட்டிலுள்ள பெண்கள் எடுத்து சமைப்பர். தன் வீட்டு நிலத்தில் விளைந்த தானியங்கள் என்றாலே தனிப்பெருமைதானே. அப்படிப்பட்ட தானியங்களில் சமையல் பொருட்களும் அடக்கம். அது அஞ்சறைப் பெட்டிக்குள் மூடி அடங்கியிருக்கும். அதுபோல் தனது காதலை, அப்பெண்கள் அஞ்சறைப் பெட்டிக்குள் அடக்கி வைத்திருப்பது போல் அடக்கி வைத்திருந்தனர் என பொருள் கொள்ளலாம்.

@ இரண்டாவது வரி ஆண்களின் காதலைச் சொல்வது. ஆண்மகன் ஒரு பெண்ணின் நெற்றியில் பொட்டு வைத்தால், அவள்தான் தனது மனைவி என்பதை அது அடையாளப்படுத்திவிடும். அதைத்தான் இங்கே மிக நாசூக்காக, ஆணினுடைய சீவன் (உயிர் மூச்சு) செந்தூரப் பொட்டுக்குள்ளே என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

@ இப்பாடலில் எதிரொலிப்பு முறை (எக்கோ) பயன்படுத்தியிருக்கும் அழகு, இப்பாடலுக்கு இன்னும் அழகூட்டியிருக்கிறது எனலாம். 

@ ஆண் பாடகரும், பெண் பாடகியான விஜயலட்சுமி அம்மாவின் குரலும் நம்மை நிச்சயமாக வசீகரிக்கும்

@ நையாண்டி மேளமும், உருமி சத்தமும் இப்பாடல் முழுக்க உடன்வந்து, நம்மை உற்சாகப்படுத்தும். இந்த இசையால் துள்ளாட்டம் போடாமல் இருக்கமுடியாது.

@ இதில் வரும் ட்ரம்பெட் இசையை (அது என்ன இசைக்கருவி என்று எனக்கு சரியான புரிதல் இல்லை. அதனால், என் அறிவுக்கு எட்டியவரை, இதை ட்ரம்பெட் எனக் குறிப்பிட்டிருக்கிறேன். சரியான பெயரை கூறினால் திருத்திக் கொள்வேன்), இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஈசன் படத்தில் வரும் பாடலான 'ஜில்லா விட்டு ஜில்லா வந்த...' என்ற பாடலில் அப்படியே பயன்படுத்தி இருக்கிறார் என்று தோன்றுகிறது. இப்பாடலை கேட்டுவிட்டு, இது உண்மையா இல்லையா என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்.

@ கார்த்தி நடித்த 'பருத்திவீரன்' படத்தில் இடம்பெறும் ஊரோரம் புளியமரம் என்ற பாடலில் வரும் 'ஆளில்லாத காட்டுக்குள்ள பயலே... ரவுசு பண்ணும் சின்னத்தம்பி' என்று பாடும் குரல் மதுரை எஸ். சரோஜா அவர்களின் குரல் (தகவல் சரிதானா). அவர் இந்த பாடலில் கோரஸின் அடிகளை முதலிலேயே பாடுகிறார். குரல் அவருடையதுதான் எனக் கருதுகிறேன்.

@ இப்பாடலில் ராமநாதபுரம், பட்டுக்கோட்டை பகுதி வட்டார வழக்குச் சொல்களான 'அம்மாளு..', 'அய்யாவு...' என்ற பதங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்பகுதியைச் சேர்ந்த மக்களின் பாடலாக இருக்கலாம். (இதுவும் எனக்கு தெளிவாகத் தெரியவில்லை)



நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினர்




Saturday, 16 April 2011

எல்லாம் கெடக்கட்டும் வாங்க..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கிராமியப் பாடல்



விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் 'எல்லாம் கெடக்கடும் வாங்க... ரெண்டு இளசு வெத்தல தாங்க..!' என்ற அட்டகாசமான துள்ளலிசை கலந்த கிராமியப் பாடலை இன்று பதிவிலிடுகிறேன்.

விஜயலட்சுமி அம்மாவின் கணீர்க்குரலில் வரிகள் வலை விரிக்க, கோரஸ் பாடியிருக்கும் குழுவினரும் அதற்கு ஒத்திசைக்க, அதன் பின்னர் வரும் உருமி, நாதஸ்வர இசை, நையாண்டி மேள இசை
 எல்லாம் நம்மை எளிதில் வளைத்து விடுகிறது. குடுகுடுப்பை போன்ற ஒரு இசைக்கருவியும் நம்மை உசுப்பேற்றுகிறது. 

கிராமத்து மக்களுக்கு வெறும் வாயை மெல்லப் பிடிக்காது, வெத்திலை போட்டு மெல்லவது அவர்களுக்கு மெத்தப் பிடிக்கும். அதனைப் பயன்படுத்தி விவசாயம் சார்ந்து பாடலை பின்னியிருப்பார்.. அவரது குரலாலும், அவரது குழுவினரின் குதுகல இசையாலும் நம்மை பின்னலிட வைக்கிறார்கள்.



அட்டகாசமான துள்ளலிசைப் பாடலைக் கொடுத்தமைக்கு திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எனக்குப் பிடித்த இந்த கிராமியப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


எல்லாம் கெடக்கட்டும் வாங்க..! | Upload Music

நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் & குழுவினர்




Monday, 28 March 2011

வந்தா வராண்டி..! மதுரை சுண்ணாம்புதாண்டி..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கிராமியப் பாடல்


விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் 'சந்திரரே சூரியரே... சாமியே என் துரையே... என்ன சொல்லி கூப்பிடட்டும்...... வந்தா வராண்டி... மதுரை சுண்ணாம்புதாண்டி..!' என்ற அட்டகாசமான துள்ளலிசை கலந்த கிராமியப் பாடலை இன்று பதிவிலிடுகிறேன்.

வந்தா வராண்டி.. மனுசன் போனா போறாண்டி... என்ற சந்தத்தோடு பாடலின் வரிகள் ஒலிக்க, உறுமி மேளமும் நையாண்டி மேளமும் நையப்புடைக்க, சலங்கை ஒலி நம்மை ஆட வைக்க, நாதஸ்வரம் நம்மை தலையசைக்க வைக்கிறது...

அட பாட்டை கேட்டுப் பாருங்க... நீங்க ஆடலன்னா ஏன்னு கேளுங்க... நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடலிது. 'எலுமிச்சம் பழம் சிவப்பு.. அட இஞ்சிமுறப்பா ஒரப்பு..' என்ற பிரபல வரிகள் இந்த பாடலில்தான் இருக்கிறது.

அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் வெளியான சந்திரலேகா படத்தில் கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பாடாலான 'ஆத்தோரம் கொடிக்காலாம்.. அரும்பரும்பா வெத்திலையாம்..' என்ற பாடலின் நான்கு வரிகளை இப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அட்டகாசமான துள்ளலிசைப் பாடலைக் கொடுத்தமைக்கு திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எனக்குப் பிடித்த இந்த கிராமியப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


சந்திரரே சூரியரே..! | Upload Music

நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் & குழுவினர்




Monday, 5 April 2010

ஒண்ணாம் படியெடுத்து..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கிராமியப் பாடல்


கிராமியப் பாடல்களை பட்டி தொட்டியெங்கும் பரப்பியவர்களில் திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினருக்கும் பங்கு உண்டு...

அக்குழுவினரின் துள்ளலிசைப் பாடல் வரிசையில் இதோ ஒரு பாடல்... 'ஒண்ணாம் படியெடுத்து... ஒசந்த பூவாம்..' 
 
ஒண்ணாம் படியிலிருந்து மெல்லிசையாக ஆரம்பிக்கும் இப்பாடல்..ஓவ்வொரு படியாக ஏறியபடியே...துள்ளலிசையாக மாறும்... இப்பாடலை
கேட்டாலே போதும்... தானாக உங்கள் மனமும் உடலும் துள்ளாட்டாம் போடும்...

என இப்பாடலில் நையாண்டி மேளம், உருமி மேளம் போன்ற கிராமிய இசைக் கருவிகள் தனி ஆவர்த்தனம் செய்திருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும்...

திருமதி விஜயலட்சுமியும், அவரது குழுவினரும் சேர்ந்து... தமிழக கிராமத்து, காவல் தெய்வங்களின் பேர்களை ஒவ்வொரு படியிலும் சொல்லியபடியே பாடி அசத்துவார்கள்... இடையே வரும் பெண்களின் குலவை சத்தம் நம்மை உசுப்பேற்றும்... சிலிர்ப்பூட்டும்..!

அன்பான புயல் அவர்களுக்கு...

இப்பாடலை தாங்கள் என்னிடம் கேட்டு இரு மாதங்களாகி விட்டது.. எனது தேடலில்தான் இவ்வளவு தாமதம் நண்பரே... இதில் கொடுமை என்னவெனில்.. எனது சேமிப்பில் ஏறகனவே இப்பாடல் இருந்திருக்கிறது.. இது தெரியாமல் எங்கெங்கோ (இரு மாதங்களாக) தேடித் தொலைத்திருக்கிறேன்... என் பிழை பொருட்டு எனை மன்னிக்க வேண்டுகிறேன்...

இவருடன்  சேர்ந்து நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாய் பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


ஒண்ணாம் படி எடுத்து..! - கிராமியப் பாடல் | Music Upload
 
 
நன்றி: திருமதி. விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் & குழுவினர்
----------
Blogger FloraiPuyal said...
விஜயலட்சுமியின் ஒண்ணாம் படியெடுத்து என்று தொடங்கும் பாடல் கிடைக்குமா? மற்றும் வெண்பாவிலமைந்த திரைப்பாடல் ஏதும் இருக்கிறதா? நன்றி.
23 January 2010 03:30




Monday, 2 November 2009

'கரையோரம் ஆலமரம்... கரைக்குங்கீழே வேலமரம்..' - கிராமியப் பாடல்


விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரின் இதோ மற்றுமொரு துள்ளிசைப் பாடல்... 'கரையோரம் ஆலமரம்... கரைக்குங்கீழே வேலமரம்..'

இப்பாடலில் கிராமத்துப் பெண் ஒருத்தி தான் பிறந்த ஊரின் பெருமைகளை மிக அழகாகச் சொல்கிறாள்... இப்பாடலில் தவில் தனி ஆவர்த்னம் செய்ய... நாதஸ்வரம் நாதத்தோடு கலந்து வர.. உறுமி மேளம் உயிர்ப்போடு ஊடாட... விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனின் கணீர்க் குரலும்... ஆகா...

அட கேட்டுப் பாருங்க... அப்புறம் தெரியும்...


கரையோரம் ஆலமரம்... கரைக்குங்கீழே வேலமரம்..' | Upload Music

(உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்க... முடிஞ்சா பின்னுட்டமிடுங்க..>)



Wednesday, 28 October 2009

தோட்டுக்கடை ஓரத்திலே... - கிராமியப்பாடல்


விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரின் சிறந்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று...

'தோட்டுக்கடை ஓரத்திலே..... தோடு ஒண்ணாங்க...' என்றபடி... துள்ளலிசையோடு ஆரம்பிக்கும் பாடல், கடைசி வரை அந்த தாளத்தை அற்புதமாக கையாண்டிருப்பார்கள்...

கேட்டு மகிழுங்கள்... கருத்துரையிடுங்கள்...


தோட்டுக் கடை ஓரத்திலே... | Upload Music

நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினர்



Tuesday, 20 October 2009

தட்டு முட்டுப் பொட்டுக்காரா... ராசா..! - கிராமியப் பாடல்

'தன்னானே... நானன்னானே... தன்னன்னானே... தட்டு முட்டுப் பொட்டுக்காரா..!' விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் குழுவினருன் அருமையான கிராமியப் பாடல் இது…

காதலனும்… காதலியும் ஒருவரையொருவர் வர்ணித்துப் பாடும் பாங்கும்… அதற்கேற்றாற் போன்ற நமது கிராமத்து துள்ளலிசையும்… அடடா… கேட்டுப் பாருங்க…

நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினர்



தட்டு முட்டு பொட்டுக்காரா... ராசா..! | Online recorder

(முடிந்தால் பின்னூட்டமிடுங்களேன்)