ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday 18 March 2014

ஏ... ஒத்தையடிப் பாதையில..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் கிராமிய பாடல்


கிராமிய பாடலைக் கேட்டு ரொம்ப நாளாச்சு... அதை பதிவிலிட்டும் ரொம்ப நாளாச்சு இல்லையா... இன்று அந்த குறையை போக்கிடலாம். எனக்குப் பிடித்த இந்த பாடல் நிச்சயம் உங்களையும் கவரும்.

கிராமியப் பாடகர்களான விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினர் பல்வேறு பாடல்களைப் பாடியிருக்கின்றனர். அதில் இன்று ஒரு பாடலைப் பதிவிலிடுகிறேன்.

'ஏ... ஒத்தையடிப் பாதையில... அத்தை மக போகையில...' என்று துவங்கும் இந்தப்பாடல் எசப்பாட்டு வகையினைச் சேர்ந்தது. அத்தை மகள் ஒத்தையடிப் பாதையில் போவதை பார்க்கும் முறை மாமன், அவளைப் பற்றி ஒரு பாடலை எடுத்து விடுகிறான். அதற்கு பதிலாக அத்தை மகளும் எசப்பாட்டை எடுத்து விடுகிறாள்.

 எனக்குப் பிடித்த இந்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள். பிடித்திருந்தால் இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள். 





*****************************************

இப்பாடலில் நான் கண்ட சுவாரசியத் தகவல்கள்



@ கோரஸ் குரலில் வரும் வாக்கியங்கள் அந்தகால காதலை கண்முன் நிறுத்துவது போல் இருக்கும். 'ஆசை கெடக்குது ஆசை கெடக்குது அஞ்சறைப் பெட்டிக்குள்ள... சீவன் கெடக்குது சீவன் கெடக்குது செந்தூரப் பொட்டுக்குள்ள...' என்று கோரஸ் பாடுவார்கள்.

@ இதில் முதல் வரி, அந்த காலப் பெண்களின் காதலை நயமாக எடுத்துச் சொல்லும். நாள் முழுக்க ஏர்பிடித்து, உயவு செய்து,  வெள்ளாதை செய்து, வீட்டில் சேகரித்து வைக்கும் தானியங்களை வீட்டிலுள்ள பெண்கள் எடுத்து சமைப்பர். தன் வீட்டு நிலத்தில் விளைந்த தானியங்கள் என்றாலே தனிப்பெருமைதானே. அப்படிப்பட்ட தானியங்களில் சமையல் பொருட்களும் அடக்கம். அது அஞ்சறைப் பெட்டிக்குள் மூடி அடங்கியிருக்கும். அதுபோல் தனது காதலை, அப்பெண்கள் அஞ்சறைப் பெட்டிக்குள் அடக்கி வைத்திருப்பது போல் அடக்கி வைத்திருந்தனர் என பொருள் கொள்ளலாம்.

@ இரண்டாவது வரி ஆண்களின் காதலைச் சொல்வது. ஆண்மகன் ஒரு பெண்ணின் நெற்றியில் பொட்டு வைத்தால், அவள்தான் தனது மனைவி என்பதை அது அடையாளப்படுத்திவிடும். அதைத்தான் இங்கே மிக நாசூக்காக, ஆணினுடைய சீவன் (உயிர் மூச்சு) செந்தூரப் பொட்டுக்குள்ளே என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

@ இப்பாடலில் எதிரொலிப்பு முறை (எக்கோ) பயன்படுத்தியிருக்கும் அழகு, இப்பாடலுக்கு இன்னும் அழகூட்டியிருக்கிறது எனலாம். 

@ ஆண் பாடகரும், பெண் பாடகியான விஜயலட்சுமி அம்மாவின் குரலும் நம்மை நிச்சயமாக வசீகரிக்கும்

@ நையாண்டி மேளமும், உருமி சத்தமும் இப்பாடல் முழுக்க உடன்வந்து, நம்மை உற்சாகப்படுத்தும். இந்த இசையால் துள்ளாட்டம் போடாமல் இருக்கமுடியாது.

@ இதில் வரும் ட்ரம்பெட் இசையை (அது என்ன இசைக்கருவி என்று எனக்கு சரியான புரிதல் இல்லை. அதனால், என் அறிவுக்கு எட்டியவரை, இதை ட்ரம்பெட் எனக் குறிப்பிட்டிருக்கிறேன். சரியான பெயரை கூறினால் திருத்திக் கொள்வேன்), இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஈசன் படத்தில் வரும் பாடலான 'ஜில்லா விட்டு ஜில்லா வந்த...' என்ற பாடலில் அப்படியே பயன்படுத்தி இருக்கிறார் என்று தோன்றுகிறது. இப்பாடலை கேட்டுவிட்டு, இது உண்மையா இல்லையா என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்.

@ கார்த்தி நடித்த 'பருத்திவீரன்' படத்தில் இடம்பெறும் ஊரோரம் புளியமரம் என்ற பாடலில் வரும் 'ஆளில்லாத காட்டுக்குள்ள பயலே... ரவுசு பண்ணும் சின்னத்தம்பி' என்று பாடும் குரல் மதுரை எஸ். சரோஜா அவர்களின் குரல் (தகவல் சரிதானா). அவர் இந்த பாடலில் கோரஸின் அடிகளை முதலிலேயே பாடுகிறார். குரல் அவருடையதுதான் எனக் கருதுகிறேன்.

@ இப்பாடலில் ராமநாதபுரம், பட்டுக்கோட்டை பகுதி வட்டார வழக்குச் சொல்களான 'அம்மாளு..', 'அய்யாவு...' என்ற பதங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்பகுதியைச் சேர்ந்த மக்களின் பாடலாக இருக்கலாம். (இதுவும் எனக்கு தெளிவாகத் தெரியவில்லை)



நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினர்




9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பிடித்த இனிமையான பாடல்... நன்றி தோழர்...

அம்பாளடியாள் said...

அழகிய பாடல் தேர்வும் விளக்கமும் ! வாழ்த்துக்கள் சகோதரா
முடிந்தால் இதையும் கொஞ்சம் பாருங்கள்
http://rupika-rupika.blogspot.com/2014/03/blog-post_18.html

மோகனன் said...

நன்றி தனபாலரே...

மோகனன் said...

அம்பளடியாள் அவர்களே...

வருகைக்கு நன்றி. அழைப்பிற்கும் நன்றி...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/05/blog-post_10.html?showComment=1399677140300#c8026519943068079763

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தனிமரம் said...

வலைச்சர அறிமுகத்து வாழ்த்துக்கள்§

மோகனன் said...

தங்களின் அன்புக்கு நன்றி ரூபன்...

மோகனன் said...

தனிமரத்திற்கு தோப்பான நன்றிகள்

Unknown said...

GOOD