ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, 26 March 2010

சின்னக்குட்டி நாத்தனா... சில்லறைய மாத்துனா..! - பழைய திரைப்படப் பாடல்


மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் எண்ண வண்ணம்தான், இந்த  'சின்னக்குட்டி நாத்தனா... சில்லறைய மாத்துனா..!' பாடல்.  இடம் பெற்ற திரைப்படம்: ஆரவல்லி (1957), அட்டகாசமான பாடலுக்கு துள்ளலிசையை அமைத்தவர் திரு. ஜி. ராமநாதன் அவர்கள். குரல் வழியே குதுகலப்படுத்தியவர். திரு. திருச்சி லோகநாதன் அவர்கள்.தயாரிப்பு: டி.ஆர்.சுந்தரம்(சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்).

மிகவும் எளிமையான வரிகளும், சிறப்பான இசையும்... இப்பாடலை அக்காலத்தில் பட்டி தொட்டியெங்கும் பரப்பியது என்றால் அது மிகையில்லை. எனக்குப் பிடத்த பாடல்களில் இதுவும் ஒன்று..!

இதில் கதாநாயகியாக நடித்தவர், ஜி.வரலட்சுமி. அவருடைய தங்கையாக மைனாவதி நடித்தார் (இவர் நடிகை பண்டரிபாயின் தங்கை)... பெண்களின் ராஜாங்கம்தான் எப்படி இருக்கும். ஒரு நாட்டை பெணகளே ஆண்டு வந்தால் எப்படி இருக்கும் எனபதுதான் கதை. ஆண்கள் எல்லோரும் இப்படத்தில் வீட்டிலிருந்தபடி சமைப்பார்கள். பெண்கள் காவல் காக்க வீரர்களாகச் செல்வார்கள். (இந்த தகவல் மட்டும் சரிதானா என்பதை விபரமறிந்தவர்கள் பின்னூட்டத்தில் கூறினால் நலம்..)

இப்பாடல் உருவான விதம் ஒரு சோகம் கலந்த சுவரசியமாகும்... இதோ

ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார் நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவினருடன் பசி, பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தை தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்த பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்கள்.

'சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!'

இந்த பாடலை கேட்டு மகிழ்ந்து அவரது குழுவினர், 'அண்ணே பாட்டு ரொம்ப அருமையா இருக்கு. இந்தப் பாட்ட அப்படியே ஒரு படத்துக்கு குடுங்கண்ணே'' என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படியே அந்தப் பாடலை மாடர்ன்ஸ் தியேட்டர் தயாரித்த 'ஆரவல்லி' படத்திற்கு தந்துவிட்டார் பட்டுக்கோட்டையார்.


Wednesday, 24 March 2010

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்...! - பழைய திரைப்பாடல் (நேயர் விருப்பம்)

இரு வல்லவர்கள் படத்தில் இடம்பெற்ற அற்பதமான காதல் டூயட் பாடல்தான் இந்த... ''நான் மலரோடு தனியாக வந்தேன்..!'' அன்புத் தோழி கலா அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இப்பாடலை பதிவிலிடுகிறேன்...

1966-ல் ஜெய்சங்கர், விஜயலட்சுமி ஆகியோர் நடித்த படம் இரு வல்லவர்கள். இப்பாடலிற்கான காதல் வரிககளை தூரிகையிட்டது கவிஞர் கண்ணதாசன்... இசையமைத்தது... திரு. வேதா அவர்கள்... இப்பாடலுக்கு குரல் வழியே உயிர் கொடுத்தவர்கள் நமது டி.எம்.எஸ்ஸும், பி. சிசீலா அவர்களும்..!

இப்பாடலில் பெண் பாடுவது போன்று கவிஞர் வரியின் வைத்திருக்கிறார் பாருங்கள்... அட்டா.. கண்ணதாசனின் ரசனையே ரசனை...

'' என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக..
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற...''

அன்புத் தோழி கலாவுடன் சேர்ந்து நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவாசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! நன்றி..!

------------------------------------

கலா said...

வணக்கம் தமிழ்தோட்டம் {தளம்}வழியாக உங்கள் தளங்களைப் பார்வையிட்டேன் மிக அருமை... பழைய பாடல்களைக் கேட்கக் கூடியதாக உள்ளது நன்றி தயவு செய்து{ நான் தேடும் பாடல்} இருந்தால் உங்கள் இடுகையில் சேருங்கள் இருவல்லவர்களில்.... திரு.செளந்தரராஜன் பி.சுசிலா அவர்கள் பாடிய.... நான் மலரோடு தனியாக ஏன் .. இங்கு வந்தேன்..! நன்றிஇப்பாடலின் திரை வடிவம் இதோ..!

Sunday, 21 March 2010

காலங்களில் அவள் வசந்தம்..! - திரைப்படப் பாடல்


கவிஞர் கண்ணதாசனின் காதல் கவித்திறமைக்கு இந்த ஒரு பாடல் அவரின் மணிமகுடத்தில்... மாணிக்கக் கல் போன்றதாகும்...

'காலங்களில் அவள் வசந்தம்... கலைகளிலே அவள் ஓவியம்...' என தனது காதலியை ஒவ்வொன்றிலும் எது தலையாயமானதும், சிறப்பானதும் எது இருக்கிறதோ... அதோடு ஒப்பிட்டுக் கூறுவார்... இப்பாடல் அன்று, இன்று மட்டுமல்ல.. என்றும் மறையாக் காதல் காவியம் ஆகும்...

பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு மிகவும் இனிமையாக இசையமைத்திருப்பது எம்.எஸ்.விஸ்வநாதன்& ராமமூர்த்தி அவர்கள். குரல் வழியே இவ்வரிகளுக்கு உயிரூட்டியவர் திரு. பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள்...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் வரிசையில் இப்பாடலும் ஒன்று... என் காதல் தேவதைக்காகவும் இப்பாடலை இங்கே பதிவிலிடுகிறேன்.... கேட்டு மகிழுங்கள்... தேவையெனில் தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!

 என்னவள் என்னருகே இல்லாத நிலையில்... இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம், என்னவளின் நினைவை மீட்கும் இப்பாடல்...


காலங்களில் அவள் வசந்தம்..! | Upload Music

இப்பாடலின் திரை வடிவம் இதோ..!

Thursday, 4 March 2010

ஓராயிரம் பார்வையிலே..! - பழைய திரைப்படப் பாடல்‘ஓராயிரம் பார்வையிலே… உன் பார்வையை நானறிவேன்..!’ மிகவும் அருமையான அக்காலத்து, சோகமான காதல் பாடல் இது..!

இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம்: வல்லவனுக்கு வல்லவன், 28.05.1965-ல் வெளியான இத் திரைப்படத்தின் இயக்குனர் சுந்தரம். இப்படத்தின் கதாநாயகன் யார் தெரியுமா..? அக்கால வில்லன் நடிகரான அசோகன்தான்.

இந்த படத்தை தயாரித்தது… அக்கால மிகப்பெரிய சினிமா கம்பெனியான ‘சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்’ (இது என்னுடைய மாவட்டம் என்பதில் எனக்கு தனிப்பெருமையும் உண்டு).

இப்பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர் நம் கவியரசு கண்ணதாசன். இசையமைப்பு, திரு வேதா அவர்கள், பாடியவர்… வேற யார்... நம்முடைய டி.எம்.எஸ்தான்.

இப்பாடலின் வரிகளும், இசையும்… அதில் முகிழ்ந்து கரையும் டி.எம். சௌந்தரராஜனின் குரலும்… அத்தனையும் தமிழ்த் தேனமுது…

இப்பாடலில் காதலியின் நினைவை எப்படியெல்லாம் தேடுகிறார் கண்ணதாசன்..! காதலர்களின் இதய வலிகளுக்கு இப்பாடல் ஒரு சரியான மருந்து என்பேன் நான்..!

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இப்பாடலும் ஓன்று. எனது குருவான திருவாளர். தி.ரா. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் பிடித்த பாடல் இது..!

கேட்டுப் பாருங்க…! தேவையெனில் இலவசமா பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க..! உங்களுக்கு பிடித்த பாட்டை என்னிடம் கேளுங்க..! ஓராயிரம் பார்வையிலே..! | Upload Music

இப்பாடலின் திரைவடிவம் இதோ..!

Tuesday, 2 March 2010

ஆத்தோரம் தேக்கு மரம்..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு துள்ளிலிசைப் பாடல்... 'ஆத்தோரம் தேக்கு மரம்..!'

இப்பாடலில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, நம் மூவேந்தர்களின் காலமான பாண்டியர், சோழர், சேரர் காலத்தில் நடைபெற்ற விவசாயமும்... அதனால் விளைந்த நன்மைகளையும் பற்றி, அவரது குழுவினருடன் அழகாகப் பாடுகிறார்..!

இபுபாடலில் 'தங்கமே தை...லால..!' என சங்கதி வைத்து பாடும் புஷ்பவனம் குப்புசாமியின் குரல் கிராமியத் தேன் பாகு...!

சலங்கை இசை, குழலிசை என மிக அருமையான கிராமத்து மெல்லிசையுடன்  உங்களைத் துள்ளாட்டம் போட வைக்க வருகிறது இப்பாடல்... கேட்டு மகிழுங்க...  தேவையெனில் தரவிறக்கமும் செஞ்சிக்கோங்க..!நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்