விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் 'சந்திரரே சூரியரே... சாமியே என் துரையே... என்ன சொல்லி கூப்பிடட்டும்...... வந்தா வராண்டி... மதுரை சுண்ணாம்புதாண்டி..!' என்ற அட்டகாசமான துள்ளலிசை கலந்த கிராமியப் பாடலை இன்று பதிவிலிடுகிறேன்.
வந்தா வராண்டி.. மனுசன் போனா போறாண்டி... என்ற சந்தத்தோடு பாடலின் வரிகள் ஒலிக்க, உறுமி மேளமும் நையாண்டி மேளமும் நையப்புடைக்க, சலங்கை ஒலி நம்மை ஆட வைக்க, நாதஸ்வரம் நம்மை தலையசைக்க வைக்கிறது...
அட பாட்டை கேட்டுப் பாருங்க... நீங்க ஆடலன்னா ஏன்னு கேளுங்க... நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடலிது. 'எலுமிச்சம் பழம் சிவப்பு.. அட இஞ்சிமுறப்பா ஒரப்பு..' என்ற பிரபல வரிகள் இந்த பாடலில்தான் இருக்கிறது.
அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் வெளியான சந்திரலேகா படத்தில் கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பாடாலான 'ஆத்தோரம் கொடிக்காலாம்.. அரும்பரும்பா வெத்திலையாம்..' என்ற பாடலின் நான்கு வரிகளை இப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அட்டகாசமான துள்ளலிசைப் பாடலைக் கொடுத்தமைக்கு திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எனக்குப் பிடித்த இந்த கிராமியப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
11 comments:
என்ன அழகான கிராமியப்பாடல்கள். அருமை. நல்லா இருக்கு.
வாங்க லக்ஷ்மி அம்மா..
ரசித்துக் கேட்டமைக்கு மிக்க நன்றி...
அடிக்கிட கேட்க வாங்க..!
Dear Moganan,
I liked this song very much. But I could not download this song.
For downloading, what should I do? Please guide me.
T P Selvam
அன்பு நண்பருக்கு...
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...
பாடல் ஒலிக்கும் பெட்டியில் கீழ்நோக்கிய அம்புக்குறி சின்னம் இருக்கிறதல்லவா.. அதை கிளிக்கினால் தரவிறக்கம் செய்ய வழிகிடைக்கும்...
அடிக்கடி கேட்க வாங்க..!
மன்னிக்கவும் அம்மா...
இப்போதுதான் இதை பார்க்கிறேன்...
எனை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி..!
A Clear version of this great song is here.
http://www.no1tamilsongs.com/Giramathu%20Padalgal/Vijayalakshmi%20Navaneetha%20Krishnan/Chandirare%20Sooriyare.mp3?l=12
For more:
http://www.no1tamilsongs.com/Giramathu%20Padalgal/Vijayalakshmi%20Navaneetha%20Krishnan
நன்றி...
thank you very much !
நன்றி திரு வேலப்பன் அவர்களே...
Iron Man - The Watches of Steel - Titanium Frame Hammer
Iron Man, microtouch titanium trim as seen on tv The Watches titanium spork of Steel solo titanium razor is a steel, 2" high-performance graphite (3"") 4 piece high performance graphite ford edge titanium 2021 (3") barber pole top with micro touch titanium trimmer a premium
rc921 supra shoes chile,supra shoes hungary,clarks shoes australia,aldo suomi,aldobolsasmexico,clarks boots nz,inov-8 jälleenmyyjät,pit viper hungary,gabor uk sv360
Post a Comment