ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, 31 December 2009

செந்தமிழ் தேன் மொழியாள்..! - பழைய திரைப்படப் பாடல்

1958 -ல் வந்த படம் மாலையிட்ட மங்கை... அப்படத்தில் இடம்பெற்றதுதான் இந்த எவர்கிரீன் ஹிட் சாங்கான 'செந்தமிழ் தேன் மொழியாள்..!'

இப்படத்தின் நாயகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள். அக்காலத்தில் கதாநாயகனாக நடிப்பவரே பாடலை பாடவும் செய்ய வேண்டும். அதாவது பாடியபடியே நடிக்க வேண்டும்...


பாடுவதில் டி.ஆர்.மகாலிங்கம் ஒரு தனி முத்திரை பதித்தவர்... அக்காலத்தில்... மிக ராகமாக இழுத்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்துதான் பாடுவார்கள்... அதை தகர்த்தெறிந்து, எளிமையான சொற்களை வைத்து மிக இனிமையாகப் பாடி எல்லோர் மனிதில் அப்போது சிம்மாசனமிட்டு அமர்ந்த பாடல்தான் இந்த 'செந்தமிழ் தேன்மொழியாள்... நிலாவெனச் சிரிக்கும் மலர்கொடியாள்...' பாடல்...

இப்படத்தை இயக்கியவர் G.R.நாதன். இப்பாடலுக்கு இசைச்சக்கரவர்த்திகளான எம்.எஸ். விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துக் கலக்கினர். இப்பாடல் அன்று மட்டுமல்ல, இன்றும், ஏன் என்றென்றும் மிகச் சிறந்த பாடலாக ரசித்துக் கேட்கப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்..!

இப்பாடலை எழுதியது யார் தெரியுமா..?. இப்படத்தின் கதை வசனம், பாடல், தயாரிப்பு எல்லாம் நமது கவியரசு கண்ணதாசன்தான். மற்றொரு தகவல் என்னவென்றால் ஆச்சி மனோரமா இப்படத்தில்தான் அறிமுகமானார். அவரும் கண்ணதாசனின் கண்டுபிடிப்புதான்.

என்ன ஆச்சர்யமா இருக்கா...! உண்மைதான்... எல்லோரும் நம்மை மெட்டுக்கே பாட்டு எழுத சொல்கிறார்களே, நாமே படம் எடுத்தால் நமக்கு பிடித்த பாடல்களை எழுதிக் கொடுத்து இசையமைக்க சொல்லலாமே என்பதற்க்காக கண்ணதாசன் அவர்கள் தயாரித்த படம் இப்படம் என்றும் சொல்வார்கள்


இப்பாடலின் திரை வடிவம் (இதில் மூன்று சரணங்களும் இருக்கிறது என்பது தனிச் சிறப்பு)Senthamizh Then Mozhiyal
Uploaded by justinraj. - College experience videos.


நன்றி: டெய்லி மோடன்இப்படாலின் விருத்தம் பற்றிய சிறப்புத் தகவல்

'சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே 
நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே' என்பது தமிழ்நாட்டில் கண்ணதாசனுக்கு முன்னே நீண்ட நெடுங்காலமாக வழங்கிவந்த ஒப்பாரிப் பாடலாகும். கவியரசு அதைத் தன் பாட்டில் இணைத்தது எப்படி..?

இதோ அதற்கான பதில்...

'இப்பாடலிற்கான பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது. அந்த நேரம், 'தென்றல்' பத்திரிகை அலுவலகத்தில், கண்ணதாசன் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது, எம்.எஸ்.விசுவநாதனிடமிருந்து போன் வந்தது. "அண்ணே... பாட்டு நல்லா வந்திருக்கு... இருந்தும், ஏதோ ஒரு குறை தெரியுது... மனநிறைவா இல்லை. நேர்ல வாங்க... பாட்டைக் கேட் டுட்டு என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம்...'' என்றார். உடனே புறப்பட்டார் கவிஞர். பாடலைக் கேட் டார். பிரமாதமாக பாடியிருந்தார் டி.ஆர்.மகாலிங் கம். இருந்தாலும், ஒரு, 'பெப்' இல்லை என்பதை உணர்ந்து கொண்டார் கவிஞர்.


"விசு... கொஞ்சம் பொறு!'' என்றபடி வெளியே வந்து, மரத்தடியில் இங்குமங்கும் நடந்தபடி இருந்தார். அப் போது, அவர் காலில் ஒரு நெரிஞ்சி முள் குத்திவிட்டது; குனிந்து முள்ளை பிடுங்கி எறிந்து விட்டு நிமிர்ந்தவர், "விசு... விசு...'' என, கூவியபடி ஒலிப் பதிவு அறைக்கு வந்து, எழுதச் சொன்னார்...


"சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே, நில் லென்று கூறி நிறுத்தி வழி போனாளே! நின்றது போல் நின்றாள், நெடுந்தூரம் பறந் தாள், நிற்குமோ ஆவி, நிலைக்குமோ நெஞ்சம்! மணம் பெறுமோ வாழ்வே...'' என்று விருத்தம் பாடி, "அவள் செந்தமிழ்த் தேன் மொழியாள் என, பாடலைத் துவங்கச் சொல்!'' என்றார்.


ஒப்பாரிப் பாடலை...அழகான காதலிக்கு பாடலாக்கியது கவிஞரின் புலமைக்கு சான்றல்லவா..!

அன்பு நண்பர் திரு. ராஷா அவர்களின் வேண்டுகோளின்படி இப்பாடலை இங்கே பதிவிலிடுகிறேன்.. கேட்டு மகிழுங்கள்..!

Blogger ராஷா said...
"செந்தமிழ் தேன் மொழியாள்" - இந்த பாடல் இருந்தா பதிவிடுங்க நன்பா - நன்றி
28 December 2009 13:49

Tuesday, 29 December 2009

திருப்பதிக்கு போயி வந்தேன் நாராயணா..! - கிராமியப் பாடல்


'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமியின் துள்ளலிசைப் பாடல்களில் ஒன்றுதான் இந்த 'திருப்பதிக்கு போயி வந்தேன் நாராயணா..!'

துள்ளலிசை மட்டுமின்றி, ஒரு கிராமத்து மனிதனின் கோழைத்தனத்தை எவ்வளவு நையாண்டித்தனமாக, கேலித்தனமாக தன் பாடல் வழியே எவ்வளவு எளிமையாகக் கூறுகிறார் என்பதை நீங்களே கேளுங்கள்...


திருப்பதிக்கு போயி வந்தேன்..! | Upload Music

நன்றி:  'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்Sunday, 27 December 2009

தாத்தா தாத்தா கொஞ்சம் பொடி குடு..! - கானா பாடல்


அன்பு நண்பர் சுப்பு அவர்களுக்கு...

இதோ நீங்கள் கேட்ட பாடல்... இது நாட்டுப்புற பாடல் அல்ல... சென்னையின் பூர்வீக மக்களின் பாடலான.. கானா பாடல்.. இதைப் பாடியவர் பழனி என்கிற கானா பாடகர். அவர் இன்னும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்...

'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் ''மாம்பழம் விக்கிற கண்ணம்மா... உன் மனசுக்குள்ள என்னம்மா..'' என்ற பாடலை (லுங்கியை மடித்துக் கட்டியபடியே, சற்று குள்ளமாக இருப்பவர்) பாடுவாரல்லவா.. அவர்தான் இப்பாடலைப் பாடிய பழனி...

உங்களின் ஆவலைப் பூர்த்தி செய்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.. கேட்டு மகிழுங்க... மறக்காம உங்க கருத்தைச் சொல்லுங்க..!


தாத்தா தாத்தா கொஞ்சம் பொடி குடு..! | Music Upload

 நன்றி: (இப்பாடலைப் பாடிய) திரு. 'கானா' பழனி, (இப்பாடலை எனக்கு தேடிக் கொடுத்த) 'கானா' எட்வின் இன்பராஜ்
************************

//Blogger SUBBU said...

      அருமை நண்பரே, எனக்கொரு உதவி வேண்டும், ’தாத்தா தாத்தா கொஞ்சம்         பொடி குடு எந்தன் பேரா பேரா என் தடி எடு’ இந்த கிராமிய பாடல் வேண்டும்..!
8 December 2009 12:18 //
//Blogger மோகனன் said...


அன்பு நண்பர் சுப்பு அவர்களுக்கு... தங்களின் வருகைக்கு மிக்க நன்றி... கருத்திற்கும் மிக்க நன்றி... நீங்கள் கேட்ட பாடல் யார் பாடியது... திரைப்படத்தில் வந்த பாடலா... இதுபோன்ற கூடுதல் தகவல் எனக்குத் தேவை... இவைகளிருந்தால் என்னால் அப்பாடலை எடுத்துத் தர இயலும்... கொடுப்பீர்கள் என நம்புகிறேன்... அடிக்கடி கேட்க வாங்க..! 8 December 2009 12:31//
//Blogger SUBBU said...
கிட்டதட்ட ஒரு பத்து வருடத்திற்கு முன்னால் வந்த பாடல், சின்ன பையன் பாடிய பாடல், பேர் ஞாபகம் இல்லை, அந்த பையனை அடித்து கொன்று விட்டார்கள் :(( இது ஒரு நாட்டுபுற பாடல், எந்த படத்திலும் இடம் பெற வில்லை!//
Wednesday, 23 December 2009

ஆலமரமுறங்க...! அடிமரத்துப் பாலுறங்க..! - கிராமியப் பாடல்


கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமியின் நெஞ்சை வருடும் காதல் சோக கீதம்தான்  'ஆலமரமுறங்க.. அடிமரத்துப் பாலுறங்க..!' என்னும் இப்பாடல்...

இப்பாடலை 2004-ல் முதன் முதலாகக் கேட்டேன். (பண்ருட்டி அருகே) கண்டரக்கோட்டையில் உள்ள எனது தேவதையின் கணினி மையத்தில், அவளுடன் இருந்தபோது கேட்டேன்.. அப்போதே இப்பாடல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது...

மனதைப் பிழியும் இசையும், காதல் சோகம் இழையோடும் புஷ்பவனத்தாரின் குரலும்...  உங்களையும் சோகத்தில் ஆழ்த்தும்... இது ஒரு விவசாயினுடைய காதல் தோல்வி.. அதை அந்த வயல்வெளி, ஆத்தாங்கரை போன்ற இயற்கை சூழல்களோடு பாடுகிறார்.. அவரின் சோகத்தை புல்லாங்குழல் இசையும் இப்பாடலில் கனத்த மனதோடு வெளிப்படுத்துகிறது..!

கேட்டுப் பாருங்க.. ஒரு விவசாயினுடைய காதல் தோல்வியை...!ஆலமரமுறங்க..! | Upload Music

நன்றி: கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்
Thursday, 3 December 2009

ஏற்றமுன்னா ஏற்றம்... - பழைய திரைப்பாடல்..!


எம்.ஜி.ஆர் அவர்கள் 1961-ல் நடித்து வெளிவந்த படம் 'அரசிளங்குமரி'. இப்படத்தில் இடம்பெற்ற புகழ் பெற்ற பாடல் ''சின்னப் பயலே..சின்னப்பயலே.. சேதி கேளடா..'', இதே படத்தில் உழவுத் தொழிலாளர்களைப் பற்றிய மற்றொரு சிறப்பு மிக்க பாடல்தான் இங்கு நான் பதிவிலிட்டிருப்பது... ''ஏற்றமுன்னா.. ஏற்றம்.. இதுல இருக்குது முன்னேற்றம்...'' என்ற பாடலைத்தான் இங்கே நான் குறிப்பிடுகிறேன்...

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டு வரிகளுக்கு திரு. ஜி. ராமநாதன் அவர்கள் கிராமிய இசை கலந்த மெட்டினை இப்பாடலில் இழையோட விட்டார்.  இப்பாடலை திரு. டி.எம். சௌந்திர ராஜனும், வெண்கலக் குரலோன் அமரர் திரு. சீர்காழி கோவிந்த ராஜனும் இணைந்து பாடியிருப்பார்கள்...

இருவரும் சேர்ந்து இப்பாடலில் ''தந்தனத்தானே.... ஏலேலோ... தந்தனத்தானே.... ஏலேலோ...'' என்றபடி
கோரஸாக ஹம்மிங் கொடுத்திருப்பார்கள்... அடடா..நான் சிறுவயதில் கேட்ட ஹம்மிங் அது...
இன்றும் என் காதில்  ஒலித்துக் கொண்டே இருக்கிறது...

இப்பாடலில் வரும் வரிகள் ஒவ்வொன்றும் வைரம்... உதாரணத்திற்கு...

''விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும் 
வீணரெல்லாம் மாறனும் 
வேலை செஞ்சா உயர்வோமென்ற 
விபரம் மண்டையில் ஏறனும் ...''

(இப்படத்திற்கு முன்பு வரை ராமநாதன் அவர்கள் கர்நாடக பாணியில்தான் இசையமைத்து வந்தார். இப்படத்தில் நம் கிராமிய மண இசையைக் கையெலெடுத்தார்... மனிதர் பட்டையைக் கிளப்பி விட்டார்... அத்துனையும் முத்துக்கள்...)ஏற்றமுன்னா ஏற்றம்..! | Online recorderகேட்டுப் பாருங்க.. உங்க கருத்தைச் சொல்லுங்க..!
இப்பாடலின் திரைவடிவம் இதோ..!
Wednesday, 2 December 2009

தமிழுக்கும் அமுதென்று பேர்..! - திரையிசையில் பாரதிதாசன் பாடல்


''தமிழுக்கும் அமுதென்று பேர்''  பஞ்சவர்ணக்கிளி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது... புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் உணர்ச்சி மிக்க  கவிதையினை பாடலாக்கியிருப்பார்கள்...

நம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைப்பில் திருமதி. பி.சுசீலா அவர்கள், தனது கானாமிர்தக் குரலில் இப்பாடலை மிக அழகாக பாடியிருப்பார்...

துள்ள வைக்கும் இசை... துடிப்பு மிக்க வரிகள்.... அடடா... இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்...தமிழுக்கும் அமுதென்று பேர்... | Music Upload


அன்பான திரு வே.நடனசபாபதி அவர்களே... தாங்கள் பின்னூட்டத்தில் கேட்டபடி... இதே உங்களின் வேண்டுகோளின்  முதல் பாடல் சங்கே முழங்கு பாடலை முன்பே கொடுத்தேன்... அடுத்த பாடலான 'தமிழுக்கும் அமுதென்று பேர்' பாடல் இதோ..

//மிக அருமையான பாடல். இரசித்துக்கேட்டேன். நன்றி பல. திருமதி P. சுசீலா அவர்கள் பாடிய "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடலையும், திரு T.M.S அவர்கள் பாடிய 'சங்கே முழங்கு' என்ற பாடலையும் தயை செய்து பதிவிறக்கம் செய்து தங்கள் பதிவில் தர இயலுமா?

வே.நடனசபாபதி//

இப்பாடலின் திரை வடிவம் இதோ..!


Tuesday, 1 December 2009

கொல்லையிலே கம்பெடுத்து..! - கிராமியப் பாடல்


'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமியும் அவரது மனைவி திருமதி அனிதா குப்புசாமி அவர்களும் சேர்ந்து பாடும் எசப்பாட்டுதான் இந்த 'கொல்லையிலே கம்பெடுத்து' பாடல்... தேமதுரத் தமிழின்  தேனினும் இனிய குரலில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் எசப்பாட்டு பாடல்...


கணவனிடம் வயல் காட்டில் பணி செய்யலாம் வாங்க என மனைவி அழைக்க... கணவனோ...சில காரணங்களை சொல்லி வரமுடியாது என்கிறான்... ஏட்டிக்குப் போட்டியாக பாடலில் இருவரும் விளையாடும் அழகு... அசத்தல் போங்க...


ஆரம்பத்தில் பழைய சினிமாவில் வரும் இசையைப் போல் வரும்..பிறகு துள்ளலிசையாக மாறும்... கேட்டுப் பாருங்க... கருத்தைச் சொல்லுங்க...கொல்லையிலே கம்பெடுத்து..! | Online recorder

நன்றி: கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்