கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமியின் நெஞ்சை வருடும் காதல் சோக கீதம்தான் 'ஆலமரமுறங்க.. அடிமரத்துப் பாலுறங்க..!' என்னும் இப்பாடல்...
இப்பாடலை 2004-ல் முதன் முதலாகக் கேட்டேன். (பண்ருட்டி அருகே) கண்டரக்கோட்டையில் உள்ள எனது தேவதையின் கணினி மையத்தில், அவளுடன் இருந்தபோது கேட்டேன்.. அப்போதே இப்பாடல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது...
மனதைப் பிழியும் இசையும், காதல் சோகம் இழையோடும் புஷ்பவனத்தாரின் குரலும்... உங்களையும் சோகத்தில் ஆழ்த்தும்... இது ஒரு விவசாயினுடைய காதல் தோல்வி.. அதை அந்த வயல்வெளி, ஆத்தாங்கரை போன்ற இயற்கை சூழல்களோடு பாடுகிறார்.. அவரின் சோகத்தை புல்லாங்குழல் இசையும் இப்பாடலில் கனத்த மனதோடு வெளிப்படுத்துகிறது..!
கேட்டுப் பாருங்க.. ஒரு விவசாயினுடைய காதல் தோல்வியை...!
No comments:
Post a Comment