ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label திரைப் பாடல். Show all posts
Showing posts with label திரைப் பாடல். Show all posts

Tuesday, 14 December 2010

மனிதா.. மனிதா... இனி உன் விழிகள்...! - திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

மனிதா.. மனிதா... இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்...! என்ற பாடலை இன்று நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1967ல் கீழ வெண்மணியில் தலித் சமுதாயத்திற்கு எதிராக நடந்த கொடூரமான சம்பவத்தை முன் வைத்து இந்திரா பார்த்தசாரதி ‘குருதிப்புனல்’ என்ற ஒரு முக்கியமான நாவலை எழுதினார். இது 1983 -ல் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்ற ஒரு திரைப்படமாக உருவானது.

இப்படத்தை இயக்கியவர் ஸ்ரீதர் ராஜன். இப்படத்திற்கு கதை வசனம் எழுதியவர் யார் தெரியுமா..? கூத்துப்பட்டறையை நடத்தி வரும் நா. முத்துசாமி அவர்கள். தென்னாட்டு ஜேம்ஸ்பாண்ட் என வர்ணிக்கப்பட்ட ஜெய்சங்கர்தான் இப்படத்தின் கதை நாயகன்.

வர்க்கப் போராட்டத்தை முன்னிறுத்திய இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருக்கும். கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு இசைஞானி இளையாராஜா இசையமைப்பில், கான தேவன் கே.ஜே. யேசுதாஸ் உணர்ச்சி பொங்க பாடியிருப்பார்...


இந்த பாடல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்
பாடலின் ஆரம்பத்தில் வயலின் இசை மெல்ல ஆரம்பமாகும், அதுவே அரை நிமிடங்கள் ஓடியதால் அதை நீக்கிவிட்டு இங்கு கொடுத்திருக்கிறேன்...


இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட லெனின்அவர்களுக்கு எனது நன்றிகள்... அவருக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேளுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்...


மனிதா... மனிதா..! | Upload Music

--------
Anonymous Lenin k said...





வைரமுத்து பாடல்” மனிதா மனிதா இனி உண் விழிகள் சிவந்தால்” அனுப்பவும்.

நன்றி
14 December 2010 11:28




Wednesday, 11 August 2010

சந்தைக்கி வந்த கிளி..! - திரைப்படப் பாடல்

தர்மதுரை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற அட்டகாசமான துள்ளலிசை பாடல்தான் இந்த "சந்தைக்கி வந்த கிளி..! சாடை சொல்லி பேசுதடி" பாடல்.

1991-ல் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் ராஜசேகர். (இவர் மலையூர் மம்பட்டியான், மாவீரன், காக்கிச் சட்டை, விக்ரம், படிக்காதவன், தம்பிக்கு எந்த ஊரு.. போன்ற படங்களை இயக்கியவர். தர்மதுரை படத்தின் நூறாவது நாளன்று மாரடைப்பால் இவர் அமரராகிவிட்டார்)

இப்பாடலுக்கு இசையமைத்தவர் நம் இசைஞானி இளையராஜா அவர்கள். பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி ஆகியோர். இப்பாடலை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. ஆனால் இப்படத்திற்கு பாடல் எழுதியவர்கள் இரண்டு பேர். பஞ்சு அருணாசலம், கங்கை அமரன் ஆகியோர். சரியான தகவல் இருப்பின் கொடுத்து உதவும்...

இப்பாடலில் இளையராஜாவின் துள்ளலிசை அட்டகாசமாக இருக்கும்... அதற்கு இணையாக பாடகர்களும் இணைந்து கலக்கியிருப்பார்கள்...

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... பிடிச்சிருந்தா இலவசமா பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க..! உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க...



சந்தைக்கி வந்த கிளி..! | Music Codes



Wednesday, 2 June 2010

ஆடி மாசம் பொறந்திருச்சு..! - திரைப்படப் பாடல்


''ஆடி மாசம் பொறந்திருச்சு..! ஏலேலோ அண்ணாத்தே..!'' கிராமிய பாணியில் வெளியான திரைப்படப் பாடல்தான் இது..! இது ஒரு துள்ளலிசைப் பாடலாகும்..!

ஆபாவாணன் தயாரிப்பு மற்றும் திரைக்கதை அமைப்பில், என்.கே. விஸ்வநாதன் இயக்கத்தில், 1990-ல்  வெளியான 'இணைந்த கைகள்' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல் இது... இப்பாடலுக்கு இசையமைத்திருப்பவர் ஆபாவாணனின் ஆஸ்தான இசையமைப்பாளரான மனோஜ் கியான் அவர்கள். அதுசரி இப்பாட்டை யார் எழுதினாங்கன்னுதான கேக்கறீங்க... இப்படத்தின் தயாரிப்பாளரான ஆபாவாணன்தான். குரல் கொடுத்தவர் நமது
கங்கை அமரன்.

இப்பாடலில் கிராமிய இசைக் கருவிகளான... நையாண்டி மேளம், நாதஸ்வரம், சலங்கை இசையென அடி பின்னியெடுத்திருப்பார்கள்..!

எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு  மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து  கொள்ளுங்கள்..! மேலும்,  உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! இயன்றவரை நான் தருகிறேன்..! 


ஆடி மாசம் பொறந்திருச்சு..! | Music Codes




Thursday, 22 April 2010

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..? - திரைப்படப் பாடல்

எனக்குப் பிடித்த பாடல் வரிசைகளில் 'பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..?' என்கிற இப்பாடலும் ஓன்று... 2000-ல் வெளிவந்த 'நீ வருவாய் என' திரைப்படத்தில் அமைந்த பாடல்கள் அத்தனையும் மெல்லிசை முத்துக்கள். அம்முத்துக்களில் சிறந்த முத்துப் பாடலென இதைச் சொல்வேன்..! இப்பாடலின் வரிகளை எழுதியவர் கவிஞர் விவேகா என்கிற விவேகானந்தன்ஆவார்.

இப்பாடல்தான் இவருக்கு திரைத்துறையில் முதல் பாடலாகும். காதலியின் ஏக்கத்தினை இப்பாடலில் மிக அழகாகச் சொல்லியிருப்பார் கவிஞர். 
இப்பாடலின் மிகப் பெரிய வெற்றி இசையைச் சாரும்... இப்பாடலில் மெல்லிசையால் மனதைக் கொள்ளை கொள்ளச் செய்திருப்பார் இசை வசந்தம் எஸ்.ஏ. ராஜ்குமார். ஹரிணி அவர்கள் தன் தேனினும் இனிய குரலில் இப்பாடலை தோய்த்துக் கொடுத்திருப்பார். அதையே கடைசியாக வரும் பல்லவியில் அருண்மொழியும் செய்திருப்பார்... 

இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்க... பிடிச்சிருந்தா இலவசமா பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க..!

உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்க..! நான் தருகிறேன்..!


பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..? | Musicians Available




Sunday, 14 February 2010

சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்… - திரைப் பாடல்


‘சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்… உன்னை நெஞ்சில் வச்சிகிட்டேன்..!’
எனை நேசித்துக் கொண்டிருக்கும் என்னுடைய கவிதைக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது…

நாங்களிருவரும் நேசித்துக் கொண்டிருக்கிறோம்... ஆனால் சேர்ந்து வாழ்கின்ற சூழல் இன்னும் அமையவில்லை… ஆதலால் இன்னொரு ஜென்மம் எடுத்தேனும் உனக்காக காத்திருப்பேன் என என்னவள் என்னிடம் கூறினாள்… இப்பாடலின் வழியாக..! உப்படாலைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு உன் நினைவுதானடா என்றாள்..!

இப்பாடல் இடம் பெற்ற படம்: தாஸ், பாடியவர்கள்: ஹரிஹரன் மற்றும் ஸ்ரேயா கோஷல், இசை: யுவன் சங்கர் ராஜா

என்னவளுக்காகவும், எனக்காகவும் எங்களைப் போன்ற காதலர்களுக்காகவும் இக்காதலர் தினத்தில் இப்படாலை பதிவிலிடுகிறேன்… கேட்டு மகிழுங்கள்..!


சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்... | Upload Music

(உலக காதலர்கள் அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்…




Tuesday, 9 February 2010

புது ரூட்டுலதான்..! - கே.ஜே யேசுதாசின் சூப்பர் ஹிட் பாடல்..!



ஏழிசை மன்னர், கான தேவன் கே.ஜே யேசுதாசின் சூப்பர் ஹிட் பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல் வரிசையில் இப்பாடலும் ஒன்று ..!

சீயான் என்று அழைக்கப்படும் விக்ரம் அறிமுகமான முதல் படம் மீரா, அப்படத்தில் இடம்பிடித்த பாடல் தான் 'புது ரூட்டுலதான்..!' பாடல்


பாடலின் வரிகள் அத்தனையும் முத்துக்கள்தான்... இசைஞானி இளையராஜாவின் இசைத் தாலாட்டில், கான தேவனின் மயக்கும் குரலில் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்...


யேசுதாஸ் மற்றும் அவரது குழுவினரும் இப்பாடலில் தனி ஆவர்த்தனமே செய்திருப்பார்கள்... கேட்டுப் பாருங்க..!



புது ரூட்டுலதான்..! | Music Upload

இப்பாடலின் திரைவடிவம் இதோ





Wednesday, 2 December 2009

தமிழுக்கும் அமுதென்று பேர்..! - திரையிசையில் பாரதிதாசன் பாடல்


''தமிழுக்கும் அமுதென்று பேர்''  பஞ்சவர்ணக்கிளி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது... புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் உணர்ச்சி மிக்க  கவிதையினை பாடலாக்கியிருப்பார்கள்...

நம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைப்பில் திருமதி. பி.சுசீலா அவர்கள், தனது கானாமிர்தக் குரலில் இப்பாடலை மிக அழகாக பாடியிருப்பார்...

துள்ள வைக்கும் இசை... துடிப்பு மிக்க வரிகள்.... அடடா... இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்...



தமிழுக்கும் அமுதென்று பேர்... | Music Upload


அன்பான திரு வே.நடனசபாபதி அவர்களே... தாங்கள் பின்னூட்டத்தில் கேட்டபடி... இதே உங்களின் வேண்டுகோளின்  முதல் பாடல் சங்கே முழங்கு பாடலை முன்பே கொடுத்தேன்... அடுத்த பாடலான 'தமிழுக்கும் அமுதென்று பேர்' பாடல் இதோ..

//மிக அருமையான பாடல். இரசித்துக்கேட்டேன். நன்றி பல. திருமதி P. சுசீலா அவர்கள் பாடிய "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடலையும், திரு T.M.S அவர்கள் பாடிய 'சங்கே முழங்கு' என்ற பாடலையும் தயை செய்து பதிவிறக்கம் செய்து தங்கள் பதிவில் தர இயலுமா?

வே.நடனசபாபதி//

இப்பாடலின் திரை வடிவம் இதோ..!






Monday, 30 November 2009

சங்கே முழங்கு..! - திரையிசையில் பாரதிதாசன் பாடல்


''சங்கே முழங்கு...'' கலங்கரை விளக்கம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது... புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் உணர்ச்சி மிக்க  கவிதையினை பாடலாக்கியிருப்பார்கள்...

நம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைப்பில் வெண்கலக் குரலார் அமரர். திரு. சீர்காழி கோவிந்தராஜன் மற்றும்  திருமதி. பி.சுசீலா அவர்களும் இணைந்து இப்பாடலை மிக அழகாக பாடியிருப்பார்கள்...

துள்ள வைக்கும் இசை... துடிப்பு மிக்க வரிகள்.... அடடா... இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்...


சங்கே முழங்கு... | Upload Music

அன்பான திரு வே.நடனசபாபதி அவர்களே... தாங்கள் பின்னூட்டத்தில் கேட்டபடி... இதே உங்களின் வேண்டுகோளின்  முதல் பாடல் சங்கே முழங்கு... அடுத்த பாடலை.. நாளை தருகிறேன்... (ஆண்குரல் T.M.S அல்ல சீர்காழி கோவிந்தராஜனுடையது...)

//மிக அருமையான பாடல். இரசித்துக்கேட்டேன். நன்றி பல. திருமதி P. சுசீலா அவர்கள் பாடிய 'தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடலையும், திரு T.M.S அவர்கள் பாடிய 'சங்கே முழங்கு' என்ற பாடலையும் தயை செய்து பதிவிறக்கம் செய்து தங்கள் பதிவில் தர இயலுமா?

வே.நடனசபாபதி//



Thursday, 5 November 2009

ஜம்புலிங்கமே ஜடாதரா… - திரைப்படப்பாடல்


காசேதான் கடவுளடா படத்தில் இடம்பெற்ற கலக்கலான நகைச்சுவைப் பாடல்… ‘ஜம்புலிங்கமே ஜடாதரா… வாயுலிங்கமே அரோகரா...’

இப்படத்தின் நாயகர்களான முத்துரானும், ஸ்ரீகாந்தும் அவர்கள் வீட்டிலுள்ள மனோரமாவை ஏமாற்ற, டீக்கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் தேங்காய் சீனிவாசனுக்கு போலிச்சாமியார் வேடமிட்டு அழைத்து வந்து விடுவார்கள்...

மூவரும் சேர்ந்து பஜனை பாடல் பாடுவார்கள்... அப்போதுதான் இந்த கலக்கலான நகைச்சுவைப் பாடல் இடம் பெறும்...  கவிஞர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இப்பாடலுக்கு இனிமையான, அருமையான இசையை வடித்தார். அதுமட்டுமின்றி...இப்படலில் மேற்கத்திய பாணி இசையை அழகாக உள்ளே நுழைத்திருப்பார் எம்.எஸ்.வி.

இப்பாடலில்... 'பஞ்சலிங்கமே மசால் வடா...', 'கோழிக்கறியைக் கேட்டவனே...' 'மதுக்கஷாயத்தைக் குடித்தவனே..' என்று வரும்... இந்த வரிகள் கொண்ட பாடலை, அப்போதிருந்த தணிக்கைத் துறையினர் கத்தரி போட்டனர். பின்பு, மசால் வடா - மடா படா என்றும்... கோழிக்கறி - ஓட்டல் கறி என்றும்... மதுக்கஷாயம் - மல கஷாயம் என்றும் மாற்றப்பட்டது...

நீங்கள் கேட்கவிருப்பது தணிக்கைக்கு முந்தைய பாடல்... கேட்டு மகிழுங்க... பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க...



ஜம்புலிங்கமே ஜடாதரா... - நகைச்சுவைத் திரைப்பாடல் | Upload Music

நன்றி : திரு எம்.கே.ஆர். சாந்தாராம்... (தகவல் மற்றும் பாடல் உதவிக்கு)

இப்பாடலின் திரைவடிவம் இங்கே...


Jambulingame Jadaadaraa
Uploaded by comeupdowngo. - More college and campus videos.




Tuesday, 3 November 2009

பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்..! - திரைப்பாடல்



1965-ல் வெளியான, எம்.ஜி.ஆரின் இனிமையான காதல் திரைப்பாடல் இது...
எம்.ஜி.ஆர் பாடலில் மகுடம் சூட்டிய காதல் பாடல் இது…. பணம் படைத்தவன் என்ற படத்தில் இடம்பெற்ற “பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்” பாட்டில் எம்ஜிஆரும் கே.ஆர். விஜயாவும் முகலாய உடையில் வந்து ஆடிப் பாடுவார்கள்.
டி எம் சௌந்தரராஜனின் கானாமிர்தக் குரலும்…. எல்.ஆர். ஈஸ்வரியின் ஹம்மிங் குரலும்…. நம் இதயத்தை ஊடுருவும்…
கவிஞர் வாலியின் வாலிப வரிகளில் அமைந்த இப்பாடலிற்கு இசையமைத்த அக்கால இசைச் சக்கரவர்த்திகளான எம்.எஸ்.விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் அவர்களுடைய இசைக்கோலங்களை நம் செவி…. இதயம் என சகலத்திலும் இட்டிருப்பார்கள் …

கேட்டு மகிழுங்க… மறக்காம உங்க கருத்தையும் பதிவு செய்யுங்க...தேவையெனில் பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க...
நன்றி:  எம்.கே.ஆர்.சாந்தாராம்




இப்பாடலின் திரை வடிவம்






Tuesday, 27 October 2009

சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி..! - திரைப்படப் பாடல்


சிறைச்சாலை படத்தில் அந்தமான் சிறையில் இருக்கும் காதற்க் கணவன், தமிழகத்தில் இருக்கும் தன் மனைவியை நினைத்துப் பாடும் பாடல்… மனைவியும் பாடுகிறாள்...

'சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி..!'

இப்பாடலில் காதல் மனைவியை சந்திக்க முடியாததால் ஏற்படும் நிகழ்வை கவிஞர் அழகான வரிகளில் கோர்த்துக் கொடுக்க... அதற்கேற்றாற் போன்ற மனதைப் பிழியும் இசையும்... தனிமையையும், ஏக்கத்தையும் காட்டும் குரல்களும்... அடடா... கேட்டு மகிழுங்கள்... தேவையெனில் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்...


சுட்டும் சுடர்விழி பார்வையிலே..! | Online recorder