ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday 28 April 2010

கொக்கர கொக்கரக்கோ சேவலே..! - பழைய திரைப்படப் பாடல்

கொக்கர கொக்கரக்கோ சேவலே... கொண்டிருக்கும் அன்பிலே... என்ற பழைய பாடலை கேட்டிருக்கிறீர்களா... கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான அன்பினை சேவல் மற்றும் கோழியை வைத்து மிக அழகாக விளக்கியிருப்பார் இப்பாடலின் ஆசிரியரான 'மக்கள் கவிஞர்' பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்

இப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் : பதிபக்தி (1958). மெல்லிசை மன்னர்களான எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோரின் இசையமைப்பில் டி.எம்.எஸ், ஜிக்கி ஆகியோர் பாடிய பாடலாகும்.

எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்க..! நான் தருகிறேன்..!


கொக்கர கொக்கரக்கோ சேவலே..! | Music Codes

பாடல் உதவி: சுக்ரவதனீ நண்பர்கள் குழாம்



Thursday 22 April 2010

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..? - திரைப்படப் பாடல்

எனக்குப் பிடித்த பாடல் வரிசைகளில் 'பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..?' என்கிற இப்பாடலும் ஓன்று... 2000-ல் வெளிவந்த 'நீ வருவாய் என' திரைப்படத்தில் அமைந்த பாடல்கள் அத்தனையும் மெல்லிசை முத்துக்கள். அம்முத்துக்களில் சிறந்த முத்துப் பாடலென இதைச் சொல்வேன்..! இப்பாடலின் வரிகளை எழுதியவர் கவிஞர் விவேகா என்கிற விவேகானந்தன்ஆவார்.

இப்பாடல்தான் இவருக்கு திரைத்துறையில் முதல் பாடலாகும். காதலியின் ஏக்கத்தினை இப்பாடலில் மிக அழகாகச் சொல்லியிருப்பார் கவிஞர். 
இப்பாடலின் மிகப் பெரிய வெற்றி இசையைச் சாரும்... இப்பாடலில் மெல்லிசையால் மனதைக் கொள்ளை கொள்ளச் செய்திருப்பார் இசை வசந்தம் எஸ்.ஏ. ராஜ்குமார். ஹரிணி அவர்கள் தன் தேனினும் இனிய குரலில் இப்பாடலை தோய்த்துக் கொடுத்திருப்பார். அதையே கடைசியாக வரும் பல்லவியில் அருண்மொழியும் செய்திருப்பார்... 

இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்க... பிடிச்சிருந்தா இலவசமா பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க..!

உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்க..! நான் தருகிறேன்..!


பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..? | Musicians Available




Monday 12 April 2010

எருமை கன்னுகுட்டி..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

அன்பு நண்பர் சிங்கப்பூர் பனசை நடராஜன் கேட்ட மற்றொரு பாடல் இது... 1950-ல் வெளிவந்த, மந்திரி குமாரி படத்தில் இடம்பெற்ற அற்புதமான பாடல்தான்... ' எருமை கன்னுகுட்டி.. என்னெருமை கன்னுகுட்டி..!'

இப்பாடலை எழுதியவர் கா.மூ.ஷெரீப் ஆக இருக்க வேண்டும், இல்லையெனில் மருதகாசியாக இருக்க வேண்டும். இசையமைப்பாளர் ஜி.ராமனாதன் அவர்களின் இசையமைப்பில் இப்பாடலுக்கு குரல் கெடுத்தது பி.எஸ்.சுப்பையா எனும் சிறுவன் ஆவான்...

குரலில் அவன் சிறுவன் என்றோ.. அக்குரல் ஒரு ஆணின் குரல் என்றோ கண்டுபிடித்தார்களேயானால் உங்களுக்கு 1000 பொற்காசுகள் பரிசு...

நீண்ட தேடல்களுக்குப் பிறகு இப்பாடல் இரைச்சல்களோடும், சில வெட்டல்களோடும்தான் கிடைத்திருக்கிறது... தெளிவான, முழுமையான ஒலிப்பேழை கிடைக்கவில்லை.. அதற்கு மன்னிக்கவும்... பிற நணபர்கள் யாரேனும் இப்பாடலினை இரைச்சல் இல்லாமல், முழுமையாக வைத்திருப்பின் கொடுத்து உதவும்படி அன்புடன் வேண்டுகிறேன்...



எருமை கன்னுகுட்டி..! - பழைய திரைப்படப் பாடல் | Music Upload

பாடலை கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!

பாடல் உதவி: சுக்ரவதநீ நண்பர்கள் குழாம் 

-----------------------
அன்பு நண்பர் பனசை நடராஜன் அவர்களுக்கு...

நீண்ட நாள் தாமத்திறகு எனை மன்னிக்க வேண்டுகிறேன்... வேலைப்பளு மற்றும் பாடல் கிடைக்காமல் போன சோர்வு... இவைகளே தாமதத்திற்கான காரணம்... எருமைக் கன்னுகுட்டி பாடல் இடம் பெற்ற திரைப்படம் மருதநாட்டு இளவரசி அல்ல... மந்திரி குமாரி ஆகும்...

அன்புடன்
மோகனன்
-----------------------------------
panasai said...

நண்பரே..
அருமையான, கேட்கக் கிடைக்காத பாடல்கள்... பராசக்தி படத்தில் வரும் ‘ஓ ரசிக்கும் சீமானே’ பாடலும், மருதநாட்டு இளவரசி படத்தில் வரும் ‘எருமைக் கன்னுக்குட்டி’ பாடலும் பதிவிட முடியுமா?
-பனசை நடராஜன், சிங்கப்பூர்-
22 January 2010 21:58
 ------
'மந்திரி குமாரி' சில சுவாரஸ்யமான தகவல்கள்


* இப்படத்தை இயக்கியவர் திரு, எல்லீஸ் டங்கன் அவர்கள். அவர் தமிழில் இயக்கிய கடைசி படமும் இதுதான். அவர் பாதி படத்தை இயக்கிய பின், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அமெரிக்க சென்று விட்டார். மீதிப் படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் திரு. சுந்தரம் அவர்கள் இயக்கி முடித்தார்.

*இப்படத்தை
தயாரித்தது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ். மிகப் பெரியாக வெற்றிப் படமாக இப்படம் அமைந்தது.

*இப்படத்தினில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, எம்.என்.நம்பியார் போன்ற
கலை உலக ஜாம்பாவான்கள் ஒன்றாகப் பணி புரிந்தனர்.

*இப்படத்
தின் கதை வசனத்தை கருணாநிதி எழுதினார். இப்படத்தின் வசனங்கள் பெரிதும் பேசப்பட்டது.

*
ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான "குண்டலகேசி"யில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, "மந்திரிகுமாரி" என்ற நாடகத்தை கருணாநிதி உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க சுந்தரம் தீர்மானித்தார்.

*
திரைக்கதையை அமைத்து, வசனத்தை எழுதித் தரும்படி கருணாநிதியிடம் சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, வசனம் எழுதத் தொடங்கினார் கருணாநிதி.

*மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கருணாநிதி வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கருணாநிதி பலமாக சிபாரிசு செய்தார்.

*"ராஜகுமாரி" படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், "அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே" என்றார். "அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்" என்று கருணாநிதி எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.
-----
தகவல்கள் உதவி: மாலைமலர் இணையதளம்




Thursday 8 April 2010

ஓ ரசிக்கும் சீமானே..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

அன்பு நண்பர் சிங்கப்பூர் பனசை நடராஜன் கேட்ட பாடல் இது... 1952-ல் வெளிவந்த, பராசக்தி படத்தில் இடம்பெற்ற அட்டகாசமான பாடல்தான்... ' ஓ ரசிக்கும் சீமானே வா...!'

இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் அவர்களின் இசையமைப்பில் இப்பாடலுக்கு குரல் கெடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்கள்...



ஒ ரசிக்கும் சீமானே... | Upload Music

பாடலை கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
நன்றி: சுக்ரவதநீ நண்பர்கள் குழாம்
----------------------------------- 
அன்பு நண்பர் பனசை நடராஜன் அவர்களுக்கு...

நீண்ட நாள் தாமத்திறகு எனை மன்னிக்க வேண்டுகிறேன்... வேலூப்பளு மற்றும் பாடல் கிடைக்காமல் போன சோர்வு... இவைகளே தாமதத்திற்கான காரணம்... எருமைக் கன்னுகுட்டி பாடல் அடுத்த பதிவில் இடம்பெறும்...
அன்புடன்
மோகனன்
-----------------------------------
Blogger panasai said...
நண்பருக்கு... மீரா படத்தில் வரும் ‘புது ரோட்டுலதான்’ கேட்க கேட்க திகட்டாத பாடல். அந்த படம் விக்ரமுக்கு முதல் படமல்ல. அவர் அறிமுகமானது ஸ்ரீதரின் படத்தில்னு நினைக்கிறேன். அப்புறம் நான் கேட்ட ’பராசக்தி’ படத்தில் வரும் ‘ஓ ரசிக்கு சீமானே’ பாடல் பதிவிட முடியுமா? - பனசை நடராஜன், சிங்கப்பூர்
20 February 2010 14:42

panasai said...

நண்பரே..
அருமையான, கேட்கக் கிடைக்காத பாடல்கள்... பராசக்தி படத்தில் வரும் ‘ஓ ரசிக்கும் சீமானே’ பாடலும், மருதநாட்டு இளவரசி படத்தில் வரும் ‘எருமைக் கன்னுக்குட்டி’ பாடலும் பதிவிட முடியுமா?
-பனசை நடராஜன், சிங்கப்பூர்-
22 January 2010 21:58




Tuesday 6 April 2010

தாயிற் சிறந்த கோவிலுமில்லை..! - பழைய திரைப்படப் பாடல்

அகத்தியர் திரைப்படத்தில் இடம் பெற்ற அற்புதமான பழைய பாடல் இது. தாய். தந்தையரைப் பற்றி அவ்வை சொன்னதை... அப்படியே பாட்டின் வடிவில் கேட்கலாம்..!

1972-ல் வெளிவந்த இப்படத்தில் அகத்தியராக நடித்திருப்பவர் அமரர். சீர்காழி கோவிந்தராஜன். இயக்கம் மற்றும் தயாரிப்பு: திரு. ஏ.கே. சுப்புரமன் அவர்கள். . இப்படத்திற்கு இசையமைத்தவர் யாரென்று தெரியுமா..? திரு. குன்னக்குடி வைத்தியநாதன். இப்பாடலைப் பாடியவர். டி.கே.கலா அவர்கள்.

என்னுடைய சிறு வயதில் இப்பாடலைக் கேட்டிருக்கிறேன்... இன்றும் என் மனதில் பசுமையாக நிற்கும் பாடல் இது..! இன்று எனை பூமிக்கு ஈந்த என் பெற்றோர்களுக்காக இப்பாடலை சமர்ப்பிக்கிறேன்..!

கேட்டு மகிழுங்கள்..! உங்களுக்குப் பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


தாயிற் சிறந்த கோவிலுமில்லை..! | Upload Music

நன்றி: சுக்ரவதனீ  நண்பர்கள் குழாம்

இப்பாடலின் திரை வடிவம் இதோ..!





Monday 5 April 2010

ஒண்ணாம் படியெடுத்து..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கிராமியப் பாடல்


கிராமியப் பாடல்களை பட்டி தொட்டியெங்கும் பரப்பியவர்களில் திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினருக்கும் பங்கு உண்டு...

அக்குழுவினரின் துள்ளலிசைப் பாடல் வரிசையில் இதோ ஒரு பாடல்... 'ஒண்ணாம் படியெடுத்து... ஒசந்த பூவாம்..' 
 
ஒண்ணாம் படியிலிருந்து மெல்லிசையாக ஆரம்பிக்கும் இப்பாடல்..ஓவ்வொரு படியாக ஏறியபடியே...துள்ளலிசையாக மாறும்... இப்பாடலை
கேட்டாலே போதும்... தானாக உங்கள் மனமும் உடலும் துள்ளாட்டாம் போடும்...

என இப்பாடலில் நையாண்டி மேளம், உருமி மேளம் போன்ற கிராமிய இசைக் கருவிகள் தனி ஆவர்த்தனம் செய்திருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும்...

திருமதி விஜயலட்சுமியும், அவரது குழுவினரும் சேர்ந்து... தமிழக கிராமத்து, காவல் தெய்வங்களின் பேர்களை ஒவ்வொரு படியிலும் சொல்லியபடியே பாடி அசத்துவார்கள்... இடையே வரும் பெண்களின் குலவை சத்தம் நம்மை உசுப்பேற்றும்... சிலிர்ப்பூட்டும்..!

அன்பான புயல் அவர்களுக்கு...

இப்பாடலை தாங்கள் என்னிடம் கேட்டு இரு மாதங்களாகி விட்டது.. எனது தேடலில்தான் இவ்வளவு தாமதம் நண்பரே... இதில் கொடுமை என்னவெனில்.. எனது சேமிப்பில் ஏறகனவே இப்பாடல் இருந்திருக்கிறது.. இது தெரியாமல் எங்கெங்கோ (இரு மாதங்களாக) தேடித் தொலைத்திருக்கிறேன்... என் பிழை பொருட்டு எனை மன்னிக்க வேண்டுகிறேன்...

இவருடன்  சேர்ந்து நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாய் பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


ஒண்ணாம் படி எடுத்து..! - கிராமியப் பாடல் | Music Upload
 
 
நன்றி: திருமதி. விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் & குழுவினர்
----------
Blogger FloraiPuyal said...
விஜயலட்சுமியின் ஒண்ணாம் படியெடுத்து என்று தொடங்கும் பாடல் கிடைக்குமா? மற்றும் வெண்பாவிலமைந்த திரைப்பாடல் ஏதும் இருக்கிறதா? நன்றி.
23 January 2010 03:30