ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, 12 April 2010

எருமை கன்னுகுட்டி..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

அன்பு நண்பர் சிங்கப்பூர் பனசை நடராஜன் கேட்ட மற்றொரு பாடல் இது... 1950-ல் வெளிவந்த, மந்திரி குமாரி படத்தில் இடம்பெற்ற அற்புதமான பாடல்தான்... ' எருமை கன்னுகுட்டி.. என்னெருமை கன்னுகுட்டி..!'

இப்பாடலை எழுதியவர் கா.மூ.ஷெரீப் ஆக இருக்க வேண்டும், இல்லையெனில் மருதகாசியாக இருக்க வேண்டும். இசையமைப்பாளர் ஜி.ராமனாதன் அவர்களின் இசையமைப்பில் இப்பாடலுக்கு குரல் கெடுத்தது பி.எஸ்.சுப்பையா எனும் சிறுவன் ஆவான்...

குரலில் அவன் சிறுவன் என்றோ.. அக்குரல் ஒரு ஆணின் குரல் என்றோ கண்டுபிடித்தார்களேயானால் உங்களுக்கு 1000 பொற்காசுகள் பரிசு...

நீண்ட தேடல்களுக்குப் பிறகு இப்பாடல் இரைச்சல்களோடும், சில வெட்டல்களோடும்தான் கிடைத்திருக்கிறது... தெளிவான, முழுமையான ஒலிப்பேழை கிடைக்கவில்லை.. அதற்கு மன்னிக்கவும்... பிற நணபர்கள் யாரேனும் இப்பாடலினை இரைச்சல் இல்லாமல், முழுமையாக வைத்திருப்பின் கொடுத்து உதவும்படி அன்புடன் வேண்டுகிறேன்...எருமை கன்னுகுட்டி..! - பழைய திரைப்படப் பாடல் | Music Upload

பாடலை கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!

பாடல் உதவி: சுக்ரவதநீ நண்பர்கள் குழாம் 

-----------------------
அன்பு நண்பர் பனசை நடராஜன் அவர்களுக்கு...

நீண்ட நாள் தாமத்திறகு எனை மன்னிக்க வேண்டுகிறேன்... வேலைப்பளு மற்றும் பாடல் கிடைக்காமல் போன சோர்வு... இவைகளே தாமதத்திற்கான காரணம்... எருமைக் கன்னுகுட்டி பாடல் இடம் பெற்ற திரைப்படம் மருதநாட்டு இளவரசி அல்ல... மந்திரி குமாரி ஆகும்...

அன்புடன்
மோகனன்
-----------------------------------
panasai said...

நண்பரே..
அருமையான, கேட்கக் கிடைக்காத பாடல்கள்... பராசக்தி படத்தில் வரும் ‘ஓ ரசிக்கும் சீமானே’ பாடலும், மருதநாட்டு இளவரசி படத்தில் வரும் ‘எருமைக் கன்னுக்குட்டி’ பாடலும் பதிவிட முடியுமா?
-பனசை நடராஜன், சிங்கப்பூர்-
22 January 2010 21:58
 ------
'மந்திரி குமாரி' சில சுவாரஸ்யமான தகவல்கள்


* இப்படத்தை இயக்கியவர் திரு, எல்லீஸ் டங்கன் அவர்கள். அவர் தமிழில் இயக்கிய கடைசி படமும் இதுதான். அவர் பாதி படத்தை இயக்கிய பின், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அமெரிக்க சென்று விட்டார். மீதிப் படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் திரு. சுந்தரம் அவர்கள் இயக்கி முடித்தார்.

*இப்படத்தை
தயாரித்தது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ். மிகப் பெரியாக வெற்றிப் படமாக இப்படம் அமைந்தது.

*இப்படத்தினில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, எம்.என்.நம்பியார் போன்ற
கலை உலக ஜாம்பாவான்கள் ஒன்றாகப் பணி புரிந்தனர்.

*இப்படத்
தின் கதை வசனத்தை கருணாநிதி எழுதினார். இப்படத்தின் வசனங்கள் பெரிதும் பேசப்பட்டது.

*
ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான "குண்டலகேசி"யில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, "மந்திரிகுமாரி" என்ற நாடகத்தை கருணாநிதி உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க சுந்தரம் தீர்மானித்தார்.

*
திரைக்கதையை அமைத்து, வசனத்தை எழுதித் தரும்படி கருணாநிதியிடம் சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, வசனம் எழுதத் தொடங்கினார் கருணாநிதி.

*மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கருணாநிதி வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கருணாநிதி பலமாக சிபாரிசு செய்தார்.

*"ராஜகுமாரி" படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், "அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே" என்றார். "அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்" என்று கருணாநிதி எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.
-----
தகவல்கள் உதவி: மாலைமலர் இணையதளம்
8 comments:

Anonymous said...

நல்ல பாட்டை போட்டிருக்கிறீர்கள்! நன்றி!

மந்திரி குமாரி குறிப்பிடப்பட வேண்டிய தமிழ் படங்களின் ஒன்று. இதைப் பற்றி நான் எழுதிய ஒரு பதிவு இங்கே. http://awardakodukkaranga.wordpress.com/2009/03/05/மந்திரி-குமாரி/

மோகனன் said...

மிக்க நன்றி தோழரே...

கட்டாயம் வந்து பார்க்கிறேன்...

தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் பணிவான நன்றிகள்..!

அடிக்கடி கேட்க வாங்க..!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

மோகனன் said...

மிக்க நன்றி..!

மோகனன் said...

போகி குழுமத்தாருக்கு எனது நன்றிகள் பற்பல..!

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

மோகனன் said...

தலைவன் குழுமத்திற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..!