ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday 19 July 2022

ராக்கெட் தயாரிக்கும் சென்னை ஐஐடி | ஹைபர்லூப் ரயில் தயாரிக்கும் ஐஐடி| IIT...


இந்திய அளவிலான பொறியியல் தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்களில் முதலிடம் பிடித்துள்ள கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக இப்பெருமையை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது சென்னை ஐஐடி.

இவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள்?என்ன செய்ய இருக்கிறார்கள் என்பதை அதன் இயக்குநர் பேராசிரியர் காமகோடி வீழிநாதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.

படிக்கும் மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் இந்த விளக்கம் ஒரு வழிகாட்டியாக இருக்கும்... முழுமையாகப் பாருங்கள். வாலுவாகிய நானும் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறேன்...

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #iitm 

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

central government announced IIT chennai is the number one institution in India. press meet today  i attend, IITM director kamkoti deliver excellent details... watch this video 

watch this video... put your comments... support us...

with love

vaalu






Wednesday 6 July 2022

கண்ணிமைக்கும் நேரத்துல…. காதல் கொண்டேனடி! - கிராமிய பாடல்



(பல்லவி)

கண்ணிமைக்கும் நேரத்துல…. காதல் கொண்டேனடி…

கற்கண்டு நீ கையில் வந்தா கடிச்சி தின்பேனடி

ஓஞ்சி போனேனடி உன்னை ஒரு தடவை பார்த்ததுல

காஞ்சி போறேனடி உன்னை காணாத பொழுதினிலே


கண்ணிமைக்கும் நேரத்துல…. காதல் கொண்டேனடி…

கற்கண்டு நீ கையில் வந்தா கடிச்சி தின்பேனடி...


(சரணம் - 1)


வரன் தேடி ஊரு ஊரா பார்க்காத பொண்ணு இல்ல

வரம் போல நீ கிடைச்ச உன்ன மிஞ்ச யாரும் இல்ல

வரன் தேடி ஊரு ஊரா பார்க்காத பொண்ணு இல்ல

வரம் போல நீ கிடைச்ச உன்ன மிஞ்ச யாரும் இல்ல

ஊரெல்லாம் பாக்கும்படி கல்யாணம் பண்ணிக்கலாம்

நான் ஒண்டி மட்டும் ஒன்ன பாக்க தாழ்ப்பாளை போட்டுக்கலாம்

அடி சிரிக்கும் சிங்காரியே… நூறு ரூபாய்க்கு சில்லரை கொடு

சீஸன் இல்லா மாம்பழமே… உன் கன்னத்தை  பறிக்க விடு…

நீ நிமர நிலைகொலைஞ்சேன்… அந்த நெனப்புல கைய பிசைஞ்சேன்…


(கண்ணிமைக்கும் நேரத்துல…. காதல் கொண்டேனடி…

கற்கண்டு நீ கையில் வந்தா கடிச்சி தின்பேனடி…)


சரணம் - 2 


வழவழக்கும் வாழை இலை… இடுப்புக்கு அழகானது

வண்ணங் கொண்ட நட்சத்திரம் ஒளிரும் கண்ணானது

என்ன சொல்லி நான் பாட… எதுவும் நீயானது

என் எண்ணமெல்லாம் ஒன்னத்தானே நெனச்சி அசைபோடுது

நான் திருடி பழக்கமில்ல ஆனா திருடனானேடி

நீ பாக்காத நேரத்துல ஒன்னை பாத்து ரசிச்சேனடி

இது நெலையா தொடராம என்னை நேசிக்க வேணுமடி

                                            

கண்ணிமைக்கும் நேரத்துல…. காதல் கொண்டேனடி…

கற்கண்டு நீ கையில் வந்தா கடிச்சி தின்பேனடி

ஓஞ்சி போனேனடி உன்னை ஒரு தடவை பார்த்ததுல

காஞ்சி போறேனடி உன்னை காணாத பொழுதினிலே


கண்ணிமைக்கும் நேரத்துல…. காதல் கொண்டேனடி…

கற்கண்டு நீ கையில் வந்தா கடிச்சி தின்பேனடி...


(இப்பாடலை எழுதியவர் யாரென்று அறியேன். ஆனால் எனக்கு மிகவும் பாடல் இது. சென்னையில் இருந்து ஆத்தூர் செல்லும்போது, விக்கிரவண்டி மோட்டல்களில் பேருந்தை நிறுத்தும்போது இந்த பாடலை கேட்டு ரசித்து நின்றிருக்கிறேன். அற்புதமான கிராமியப் பாடல் இது. துள்ளலான இசையும், பாடகரின் குரலும் சினிமா உலகிற்கே நம்மை இட்டுச்செல்லும்)