ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, 20 January 2010

கையில வாங்கினேன்... பையில போடல..! - பழைய திரைப்படப் பாடல்

''கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியல...''  மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் பாடல் இது... திருச்சி லோகநாதன் அவர்கள் தன் இனிய குரலில் இப்பாடலை மிகவும் அருமையாக பாடியிருப்பார்..!

இப்பாடல் இடம் பெற்ற படம்: இரும்புத் திரை,  இசையமைப்பாளர்: எஸ்.வி. வெங்கட்ராமன், படம் வெளிவந்த ஆண்டு: 1960

வைரத்தை வெட்டி எடுத்த வரிகளைக் கொண்ட பாடல் இது... ஏழை வர்க்கத்தினருக்கும். நடுத்தர வர்க்கத்தினருக்குமான பாடல் இது... மாதச் சம்பளக்காரர்கள் படும் அவல நிலையை இப்பாடலில் தோலுரித்துக் காட்டியிருப்பார்  அமர கவி பட்டுக்கோட்டையார்..!

உதாரணத்திற்கு

''மாசம் முப்பது நாளும் உழைச்சி
வறுமை பிடிச்சி... உருவம் இளைச்சி...
காச வாங்கினாகடன்காரனெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
உனக்கு எனக்குன்னு பிக்கிறான்..!''


கையில வாங்கினேன்..பையில போடல..! | Upload Music

இப்பாடலை கேட்டுப் பாருங்க... பதிவிறக்கமும் செஞ்சி மகிழுங்க... மறக்காம  உங்க கருத்தையும் சொல்லுங்க..!


இப்பாடலின் திரைவடிவம் இதோ..!

Tuesday, 12 January 2010

மணப்பாறை மாடு கட்டி.. மாயவரம் ஏரு பூட்டி..! - பழைய திரைப்படப் பாடல்


'திரைக்கவித் திலகம்' என அழைக்கப்பட்ட கவிஞர் மருதகாசியின் வரிகளில் மின்னிய அருமையான விவசாயம் சார்ந்த சினிமாப் பாடல்தான்... இந்த
''மணப்பாறை மாடு கட்டி.. மாயவரம் ஏரு பூட்டி.. வயக்காட்டை உழுது போடு செல்லக்கண்ணு!'' பாடல்

ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து “லட்சுமி பிக்சர்ஸ்” என்ற படக்கம்பெனியை தொடங்கி, “மக்களைப் பெற்ற மகராசி” படத்தைத் தயாரித்தனர். இதில் சிவாஜிகணேசனும், பானுமதியும் இணைந்து நடித்தனர்.

இந்தப்படத்தில் இடம் பெற்ற பெரும்பாலான பாடல்களை மருதகாசி எழுதினார். குறிப்பாக, “மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏரு பூட்டி” என்ற பாட்டு, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது.

1957-ல் வெளியான இப்படத்திற்கு இசையமைத்தவர், திரை இசைத் திலகம் கே.வி. 
மகா தேவன் அவர்கள். பாடியிருப்பவர் நமது டி.எம் சௌந்திர ராஜன்தான்.
இப்பாடலில் வரும் வரிகள் அனைத்தும் வைரம்... உதாரணத்திற்கு

''ஆத்தூரு கிச்சடி சம்பா...
பாத்து வாங்கி வெதை வெதச்சி'
' நான் பிறந்த ஊர் இது என்பதில் எனக்கு ஒரு தனி சந்தோசம் 

"சேத்த பணத்தை சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக்கண்ணு" என்பார் மருதகாசி.
             


மணப்பாறை மாடு கட்டி..! | Upload Music

கேட்டுப் பாருங்க.. உங்க கருத்தைச் சொல்லுங்க..! 


(இப்பாடலை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியதாக தவறுதலாக இப்பதிவில் இட்டிருந்தேன்... இன்றுதான் அதன் உண்மை நிலை 30.11.2010 தெரிந்தது... மாற்றி விட்டேன்... தவறுக்கு மன்னிக்க வேண்டுகிறேன் தோழர்களே...)


இப்பாடலின் திரை வடிவம் இதோ..!