ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, 20 January 2010

கையில வாங்கினேன்... பையில போடல..! - பழைய திரைப்படப் பாடல்

''கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியல...''  மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் பாடல் இது... திருச்சி லோகநாதன் அவர்கள் தன் இனிய குரலில் இப்பாடலை மிகவும் அருமையாக பாடியிருப்பார்..!

இப்பாடல் இடம் பெற்ற படம்: இரும்புத் திரை,  இசையமைப்பாளர்: எஸ்.வி. வெங்கட்ராமன், படம் வெளிவந்த ஆண்டு: 1960

வைரத்தை வெட்டி எடுத்த வரிகளைக் கொண்ட பாடல் இது... ஏழை வர்க்கத்தினருக்கும். நடுத்தர வர்க்கத்தினருக்குமான பாடல் இது... மாதச் சம்பளக்காரர்கள் படும் அவல நிலையை இப்பாடலில் தோலுரித்துக் காட்டியிருப்பார்  அமர கவி பட்டுக்கோட்டையார்..!

உதாரணத்திற்கு

''மாசம் முப்பது நாளும் உழைச்சி
வறுமை பிடிச்சி... உருவம் இளைச்சி...
காச வாங்கினாகடன்காரனெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
உனக்கு எனக்குன்னு பிக்கிறான்..!''


கையில வாங்கினேன்..பையில போடல..! | Upload Music

இப்பாடலை கேட்டுப் பாருங்க... பதிவிறக்கமும் செஞ்சி மகிழுங்க... மறக்காம  உங்க கருத்தையும் சொல்லுங்க..!


இப்பாடலின் திரைவடிவம் இதோ..!

10 comments:

ராஷா said...

அருமையான பாடல், இந்த பாடல் முன்பு கேட்கும் போது காமெடியா தெரிஞ்சது, இப்ப வேலைக்கு போரதால இப்ப கேட்கும் போது காமெடியா கேட்குரதா, இல்ல சீரியசா கேட்குரதானு தெரியல.

போன பின்னுட்டத்திற்கு மன்னிக்கவும்..

மணப்பாறை மாடு கட்டி. இந்த பாடல் எழுதியது பட்டுக்கோட்டை கல்யான சுந்தரம் அவர்களே..

நான் ஒரு தடவை படம் பார்த்தபோது முதல் பெயர், மருதகாசி, ராமையாதாஸ், கா.மு. ஷரீப் கடைசியாக கல்யான சுந்தரம் னு பெயர் வரிசை இருந்தத கவனிக்காம நேர்ந்த குழப்பம்

நன்றி.

மோகனன் said...

அன்பு நண்பர் ராஷாவிற்கு...

இது காமெடியான பாடலல்ல... நம் இந்திய மக்களில் 95 சதவீதம் பேரின் உணர்ச்சிக் குமுறல் இது... இதை அன்றே சொன்ன கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்...

என்னை மிகவும் பாதித்த, யோசிக்க வைத்த பாடல்களில் இதுவும் ஒன்று...

காரணம் இப்பாடல் எக்காலத்திற்கும் நம் நாட்டில் பொருந்துவது போல் இருக்கிறதே...


மன்னிப்பெதற்கு ராஷா அவர்களே.. தகவலறிந்தால் போதும்... சில இணையதளங்கள் மருதகாசி என்றுதான் வெளியிட்டுள்ளன... அவர்களுக்கு என்றுதான் உண்மை தெரியுமோ..?

ஆகட்டும் விடுங்கள்... சூரியனை கையால் மறைத்து விட முடியுமா என்ன..!

தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள் பற்பல...

அடிக்கடி கேட்க வாங்க..!

ராஷா said...

நன்பரே நான் சொல்ல வந்தத இன்னொரு முறை படிச்சு பாருங்க,

//இந்த பாடல் முன்பு கேட்கும் போது காமெடியா தெரிஞ்சது, இப்ப வேலைக்கு போரதால இப்ப கேட்கும் போது காமெடியா கேட்குரதா, இல்ல சீரியசா கேட்குரதானு தெரியல.//

நான் காமெடியா கேட்டேனு சொன்னது என்னுடைய பள்ளி பருவத்துல....
இது நான் சமுதாயத்தோட சேர்ந்து, நிறைய கடமைய சுமந்து ஒரு வேலையில இருக்கேன்...
இன்னைக்கு இந்த பாட்ல கேட்டா எனக்கு சிரிப்பு வருமாங்க..
பட்டுக்கோட்டை அவர்கள் பாடல் என்றும் சிந்திக்க வைக்கும்..

மோகனன் said...

உண்மைதான் ராஷா அவர்களே...

உங்களை புண்படுத்தும் நோக்கில் அதை நான் சொல்லவில்லை...

என் பொதுவான ஆதங்கம் அது... அடி வாங்குவது நம் போன்ற நடுத்தர, ஏழை வர்க்கம்தானே..!

அடிக்கடி கேட்க வாங்க..!

FloraiPuyal said...

விஜயலட்சுமியின் ஒண்ணாம் படியெடுத்து என்று தொடங்கும் பாடல் கிடைக்குமா? மற்றும் வெண்பாவிலமைந்த திரைப்பாடல் ஏதும் இருக்கிறதா?

நன்றி.

மோகனன் said...

அன்பான புயல் அவர்களுக்கு..

தங்களின் வருகைக்கும்... வேண்டுகோளிற்கும் என் அன்பு கலந்த நன்றிகள்...

உங்களின் முதல் வேண்டுகோளை விரைவில் நிறைவேற்றுகிறேன்...

வெண்பாவில் அமைந்த பாடல் இல்லாமல் இருக்காது... தேடித் தருகிறேன்... அதற்கு காலம் பிடிக்கும்..!

FloraiPuyal said...

//
உங்களின் முதல் வேண்டுகோளை விரைவில் நிறைவேற்றுகிறேன்
//

நன்றி.

//
வெண்பாவில் அமைந்த பாடல் இல்லாமல் இருக்காது... தேடித் தருகிறேன்... அதற்கு காலம் பிடிக்கும்
//

காத்திருக்கிறேன்.

மோகனன் said...

அன்பான புயல் அவர்களுக்கு..

தங்களின் வருகைக்கும்... நன்றிகளுக்கும் மீண்டும் ஒரு முறை எனது நன்றிகள்...

வேலைப் பளு அதிகம்... சற்று கால அவகாசம் கொடுங்கள்...

Deepa said...

இன்று தான் வ‌ந்து உங்க‌ள‌து முழுத் தொகுப்பையும் பார்த்தேன் வாசித்தேன். எனக்குப் பிடித்த ப‌ல அரிய பாட‌ல்க‌ள் இட‌ம்பெற்றிருப்ப‌து க‌ண்டு மிக‌வும் ம‌கிழ்ச்சிய‌டைகிறேன். குறிப்பாக‌ "கையில‌ வாங்கினேன், பையில‌ போட‌ல‌" - பட்டுக்கோட்டையாரின் வரிகளில், த‌ங்க‌வேலு நகைச்சுவையாக‌ப் பாடி ஆடும் இந்த‌ப் பாட‌லை எப்போது பார்த்தாலும் க‌ண்க‌ல‌ங்கி விடும். பாடிய‌வ‌ர் இசைய‌மைப்பாள‌ர் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல் எல்லாம் ப‌கிர்ந்த‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி.
அப்புற‌ம் ஒராயிர‌ம் பார்வையிலே, சின்ன‌ ம‌ணிக் கோயிலிலே...எல்லாம் என் ஃபேவ‌ரிட்.
அருமையான‌ ப‌ணி! தொட‌ருங்க‌ள். மீண்டும் வ‌ருவேன்.

மோகனன் said...

நன்றி தோழி...

உங்களது பின்னுட்டத்தை இன்றுதான் கவனித்தேன்... மன்னிக்கவும்...

எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இங்கு வரலாம்.. ஏனெனில் இது நம்ம பூமி...