"செவலக்காளை ரெண்டு பூட்டி... மாமன் சேத்துமேட்டை உழுது வாரான்..!" என்ற கிராமியப் பாடலை இன்று என் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்.
கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் மெல்லிசை கலந்த துள்ளலிசைப் பாடல்...
அக்காலத்தில் வயல்வெளிகளில் உழவு உழும் போதும், நாத்து நடும் போதும் களைப்பு தெரியாமல் இருக்க, தெம்மாங்கு பாடல்களை பாடி களைப்பு தெரியாமல் வேலையை முடிப்பார்கள். கூட இருக்கும் பெண்கள் குலவை போட்டு பாடுபவரை உற்சாகப் படுத்துவார்கள். அதை கேட்கும் சுகமே தனி சுகம்தான்.
இதுதான் இப்பாடலின் பின்னணி. எனது மாமன் உழவு செய்கிறான், அதற்கு ஏற்றாற் போல் நாற்று நடவேண்டும், சம்பா நெல் நடவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறாள் தலைவி. தலைவியின் கூற்றை கூட இருக்கும் பெண்கள் குலவை இட்டு ஆமோதிக்கிறார்கள். தலைவனோ மழை பெய்ய வேண்டும், நாடு செழிக்க வேண்டும் அதற்கும் குலவையிடுங்கள் என்கிறான். அதற்கும் குலவையிடுகிறார்கள்
நையாண்டி மேளம், உருமி, குலவை இசை, புல்லாங்குழல் என கிராமத்திற்கே உரிய வாசனையை இப்பாடலில் புகுத்தியிருப்பார் புஷ்பவனம் குப்புசாமி. கேட்க கேட்க பரவசப்படுத்தும் பாடல் இது....
எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... பிடிச்சிருந்தா இலவசமா பதிவிறக்கம் பண்ணிக்கோங்க...உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...
13 comments:
நம்ம கிராமியப் பாடல் என்றால் இருந்து
கேட்டுவிட்டுத்தான் போகச்சொல்லும்.
அதிலவேற நீங்க கருத்தையும் சேத்து
இருக்குறீங்களா சும்மா போக முடியாது
இல்லீங்களா....கருத்தையும் சொல்லீற்று
போடவேண்டியதையும் போட்டுட்டன்
சாமியோய்........
தங்களின் மேலான பதிலிற்கு எனது நன்றிகள்...
அடிக்கடி கேட்க வாங்க..!
thank you very much nanba. nice song..!
வாழ்த்தியமைக்கு நன்றி தோழா...
அடிக்கடி கேட்க வாங்க..!
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
நன்றி...
மச்சான் கவிதைகள் எல்லாம் நன்றாக இருந்தது நன்றி மச்சான்....
நன்றி செந்தில்...
அடிக்கடி கேட்க வாங்க...
திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கு...
எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்...
ரூபன் அவர்களுக்கு
எனது மகிழ்ச்சி கலந்த மத்தாப்பூ நன்றிகள்...
அடடா ... உண்மையில் பரவசப்படுத்தி தாளம்
போட வைக்கிறது பாடல். அரியதோர் முயற்சிக்கு
என் வாழ்த்துக்கள்.
[ எத்தனை எத்தனை வலைப்பூக்கள் உங்களுடையது ..
மலைக்க வைக்கிறது ]
தாளம் போட வைப்பதுதான்... நமது கிராமிய இசையின் தனிச்சிறப்பு தோழி...
மலைக்க வேண்டாம். அடியேன் சிறுதுறும்பு...
HOW TO DOWNLOAD??????
Post a Comment