ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, 30 July 2010

சின்ன மணிக் கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு..! - திரைப்படப் பாடல்


வண்ண வண்ண பூக்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற சோகப் பாடலிது...

1992 - ல் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்திள்கு இசையமைத்தவர், நமது இசைஞானி இளையராஜா அவர்கள். இப்பாடலை எழுதிய கவிஞர் யார் என்று தகவல் அறித்தால் நலமாக இருக்கும்.. நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இப்பாடலைப் பாடிவர், எனக்கு மிகவும் பிடித்த பாடகரான ஏழிசை மன்னர், கானதேவன் கே.ஜே யேசுதாஸ் அவர்கள்... இப்பாடல் ஒரு சோகப்பாடிலாகும்...

கதாநாயகியுடன் கதாநாயகன் சேர நினைப்பான், ஆனால் கதாநாயகியோ அவனுடன் சேர மறுத்து விடுவாள். அதற்கான காரணத்தை (கதாநாயகிக்கு கொடும் நோய் இருப்பதால், அவள் விரைவில் இறக்கப் போகிறாள்) கதாநாயகனிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறாள். அவனை ஏற்க மளுப்பது ஏன் என கதநாயகியிடம், கதாநாயகனின் நண்பன் வினவுகிறான்... அவனிடம் உண்மையைக் கூறுகிறாள்... அச்சூழலில் அந்த நண்பன் பாடும் பாடல்தான் இது...

இப்பாடலை கேட்டுப் பாருங்கள்... உங்கள் மனதையும் இது சற்று நெகிழச் செய்து விடும்...  யேசுதாஸின் மனதைப் பிழியும் குரலும், இளையராஜாவின் இனிய மெல்லிசையும் உங்கள் மனதை உரசிப் பார்க்கும்...

எனக்குப் பிடித்த இப்பாடலை என்னுடன் சேர்ந்து நீங்களும் கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!சின்ன மணிக் கோயிலிலே..! | Upload Music

(இது என்னுடைய 50-வது பதிவு என்பதில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.. இதற்கு ஆதரவு தரும் உங்களனைவருக்கும் எனது நன்றிகள்..)Monday, 19 July 2010

பட்டணந்தான் போகலாமடி பொம்பளே..! - பழைய திரைப்பாடல்

எங்கள் வீட்டு மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'பட்டணந்தான் போகலாமடி பொம்பளே..! காசு பணம் சேக்கலாமடி..!' என்ற பாடல் என் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது.

இப்பாடலுக்கு தனிச்சிறப்பு ஒன்று உண்டு... அது எதுவென்றால் சீர்காழி கோவிந்தராஜனும்,பி.சுசீலாவும் இணைந்து பாடிய முதல் பாடல் இதுவே.
1957-ல் வெளி வந்த இத்திரைப்படத்தினை இயக்கியவர் சுப்பையா ராவ் அவர்கள். இப்படத்திற்கு இசையமைத்தவர் மாஸ்டர் வேணு அவர்கள்...

அற்புதமான இப்பாடலை இயற்றிவர் உடுமலை நாராயணகவி அவர்கள்... (தகவல் உதவி: சுக்ரவதநீ நண்பர். திரு எஸ். எஸ். பேராசிரியர் கந்தசாமி அவர்கள்)

'கெட்டும் பட்டணம் சேர்' எனும் பழமொழிப்படி பட்டணம் சென்று பிழைக்கலாம் என எண்ணும் விவசாயி ஒருவனுக்கு அவனது மனைவி, பட்டணத்து வாழ்வில் உள்ள தீமைகளை விளக்கி அறிவுரை கூறுகிறாள். (பட்டணம் என்பது இங்கே அயல்நாட்டினையும் குறிக்கும் என எடுத்துக் கொள்ளுங்கள்...)

கிராமத்தை விட்டுப் பட்டணம் சென்று சீர்கெட்டு மடியாமல் கிராமத்திலேயே விவசாயம் செய்து சிறப்பாக வாழலாம் என்று மனைவி சொல்லும் அறிவுரையை செவிமடுத்து, பட்டணம் போகும் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறான் கணவன். மேலும் இப்பாடலில் தன் மனைவியை தாயே என்றும் அழைக்கிறான் கணவன்...

இச்சம்பவத்தை ஒரு நாட்டிய நாடக வடிவில் படமாக்கியுள்ளனர் இத் திரைப்படத்தில்... 


வரிகள் அத்துனையும் சாட்டையடி... உதாரணத்திற்கு...

வேலை ஏதுங்க கூலி ஏதுங்க..
வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க - அங்கே
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க..
வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க...
காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதாம்...
பிஏ படிப்பு பெஞ்சு தொடைக்குதாம்..
ஆளை ஏச்சு ஆளு பொழைக்குதாம்..
அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம்..!''


எந்த கதாயாநகனும் தன்னை தாழ்த்தி வரும் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மாட்டான்.. ஆனால் இப்பாடலில் கதாநாயகனே தன் மனைவியின் அறிவுரையால் திருந்தி, தனது தாழ் நிலையைக் கூறுகிறான்.. அடடா என சொல்ல வைக்கும் வரிகளும் இதிலுண்டு...

''நீ ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி..
நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி - நீ
ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாகத் தோணுது''இந்த அருமையான பாடலுக்கு கிராமிய பிண்ணனிநில் துள்ளலிசையோடு வழங்கியிருக்கும் இசையமைப்பாளருக்கும், அட்டகாசமாய்க் குரல் கொடுத்த திரு. சீர்காழி கோவிந்த ராஜன், சுசீலா அவர்களுக்கும் ஒரு சலாம் போடலாம்...
இப்பாடலுக்கு குரல் கொடுத்த பெண் பாடகி சிலர் ஜமுனா ராணி என்றும், சிலர் சுசீலா என்றும் சொல்கின்றனர். யாழ் சுதாகரும் இதே கருத்தை வழி மொழிவதால்.. நானும் அதையே வழி மொழிகிறேன்... இந்த தகவல் தவறெனில் ஆதாரத்துடன் நிரூபிக்கவும்...

என்னுடன் சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!


பட்டணம்தான் போகலாமடி பொம்பளே..! | Music CodesWednesday, 14 July 2010

வைகைக் கரை காற்றே நில்லு..! - திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

'உயிருள்ளவரை உஷா' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'வைகைக் கரை காற்றே நில்லு..! வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு..!' என்ற பாடல் இன்றைய நேயர் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது.

1984-ல் வெளியானது இப்படம். இப்பாடலுக்கு இசை டி. ராஜேந்தர். குரல் கொடுத்தவர் எனக்கு மிகவும் பிடித்த பாடகரான கானதேவன் கே.ஜே. யேசுதாஸ் அவர்கள்...

இப்பாடலை இயற்றியதும், இசையமைத்ததும் யார் தெரியுமா..? இப்படத்தின் இயக்குனரான டி. ராஜேந்தரேதான். காதலியைக் காணமுடியமல் தவிக்கும் தவிப்பை வரிகளிலே வடித்திருப்பார் டி. ராஜேந்தர்... அதற்கு மிகவும் அருமையான முறையில் இசையினையும் அமைத்திருப்பார்...

''நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ...
சோகமது நீங்காதோ...
காற்றே... பூங்காற்றே...
என் கண்மணி அவளைக்
கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
..''

'வைகைக் கரை காற்றே நில்லு..! வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு..!' என்ற பாடலைக் கேட்ட அன்பு நண்பர் கிறுக்கல் கிறுக்கனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

அவரோடு சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!வைகைக் கரை காற்றே நில்லு..! | Music Codes


---------------------------------
கிறுக்கல் கிறுக்கன் said...
பாடலுக்கு நன்றி.

அடுத்து நேயர் விருப்பத்தில் “வைகைக் கரை காற்றே நில்லு, வஞ்சிதனை பார்த்தால் சொல்லு” என்னும் வரிகள் வரும் பாடல்.

நண்பரே இந்த நேயர் விருப்பம் இன்னும் வரும்...

2 June 2010 19:57