இப்பாடலுக்கு தனிச்சிறப்பு ஒன்று உண்டு... அது எதுவென்றால் சீர்காழி கோவிந்தராஜனும்,பி.சுசீலாவும் இணைந்து பாடிய முதல் பாடல் இதுவே.
1957-ல் வெளி வந்த இத்திரைப்படத்தினை இயக்கியவர் சுப்பையா ராவ் அவர்கள். இப்படத்திற்கு இசையமைத்தவர் மாஸ்டர் வேணு அவர்கள்...
அற்புதமான இப்பாடலை இயற்றிவர் உடுமலை நாராயணகவி அவர்கள்... (தகவல் உதவி: சுக்ரவதநீ நண்பர். திரு எஸ். எஸ். பேராசிரியர் கந்தசாமி அவர்கள்)
'கெட்டும் பட்டணம் சேர்' எனும் பழமொழிப்படி பட்டணம் சென்று பிழைக்கலாம் என எண்ணும் விவசாயி ஒருவனுக்கு அவனது மனைவி, பட்டணத்து வாழ்வில் உள்ள தீமைகளை விளக்கி அறிவுரை கூறுகிறாள். (பட்டணம் என்பது இங்கே அயல்நாட்டினையும் குறிக்கும் என எடுத்துக் கொள்ளுங்கள்...)
கிராமத்தை விட்டுப் பட்டணம் சென்று சீர்கெட்டு மடியாமல் கிராமத்திலேயே விவசாயம் செய்து சிறப்பாக வாழலாம் என்று மனைவி சொல்லும் அறிவுரையை செவிமடுத்து, பட்டணம் போகும் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறான் கணவன். மேலும் இப்பாடலில் தன் மனைவியை தாயே என்றும் அழைக்கிறான் கணவன்...
இச்சம்பவத்தை ஒரு நாட்டிய நாடக வடிவில் படமாக்கியுள்ளனர் இத் திரைப்படத்தில்...
வரிகள் அத்துனையும் சாட்டையடி... உதாரணத்திற்கு...
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க..
வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க - அங்கே
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க..
வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க...
காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதாம்...
பிஏ படிப்பு பெஞ்சு தொடைக்குதாம்..
ஆளை ஏச்சு ஆளு பொழைக்குதாம்..
அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம்..!''
எந்த கதாயாநகனும் தன்னை தாழ்த்தி வரும் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மாட்டான்.. ஆனால் இப்பாடலில் கதாநாயகனே தன் மனைவியின் அறிவுரையால் திருந்தி, தனது தாழ் நிலையைக் கூறுகிறான்.. அடடா என சொல்ல வைக்கும் வரிகளும் இதிலுண்டு...
''நீ ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி..
நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி - நீ
ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாகத் தோணுது''
இந்த அருமையான பாடலுக்கு கிராமிய பிண்ணனிநில் துள்ளலிசையோடு வழங்கியிருக்கும் இசையமைப்பாளருக்கும், அட்டகாசமாய்க் குரல் கொடுத்த திரு. சீர்காழி கோவிந்த ராஜன், சுசீலா அவர்களுக்கும் ஒரு சலாம் போடலாம்...
இப்பாடலுக்கு குரல் கொடுத்த பெண் பாடகி சிலர் ஜமுனா ராணி என்றும், சிலர் சுசீலா என்றும் சொல்கின்றனர். யாழ் சுதாகரும் இதே கருத்தை வழி மொழிவதால்.. நானும் அதையே வழி மொழிகிறேன்... இந்த தகவல் தவறெனில் ஆதாரத்துடன் நிரூபிக்கவும்...
என்னுடன் சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!
பட்டணம்தான் போகலாமடி பொம்பளே..! | Music Codes
8 comments:
நண்பரே, அரிய பாடல்கள் பலவற்றை கொடுத்திருக்கிறீர்கள். நன்றி. "தாய் இல்லாத பிள்ளை" என்ற படத்தில் வரும் "நீ மேகம் ஆனால் என்ன, நான் தோகை ஆன பின்னே" என்ற பாடல் கிடைக்குமா? (TMS + PS)
க. ச. குமார்
வாங்க க. ச. குமார்...
தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...
தாங்கள் கேட்ட பாடலை கண்டீப்பாக தேடி எடுத்துத் தருகிறேன்.. அது வரை காத்திருக்கவும்...
அடிக்கடி கேட்க வாங்க..!
i want themmangu song
thanks..!
19 ஜூலை, 2010 12:00 pm
வாங்க ராமசாமி...
தாங்கள் கேட்ட பாடலை கண்டீப்பாகத் தருகிறேன்.. அது வரை காத்திருக்கவும்...
அடிக்கடி கேட்க வாங்க..!
அந்த பாடல் காட்சியில், பாடி ஆடி நடித்தவர் நடன டைரக்டர் சோப்ரா.
அருமையான பாடல்கள்
சகாதேவன்
தகவலிற்கு மட்டுமல்ல தங்களது வருகைக்கும், ஙாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழரே...
அடிக்கடி கேட்க வாங்க..!
நல்ல பாடல்... நாட்டுநடப்பை நகைசுவையாக உணர்த்தும் பாடல்.... நன்றி...
நன்றி தோழரே...
Post a Comment