ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label டி. ராஜேந்தர். Show all posts
Showing posts with label டி. ராஜேந்தர். Show all posts

Wednesday, 26 February 2014

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி..! - நேயர் விருப்பப் பாடல்

எனது வலைப்பக்க நண்பர்களுக்கு... இந்த மோகனனின் வணக்கங்கள்... இந்த தளம் எப்படிப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனந்த விகடனில் பாராட்டப்பட்ட தளம் இது என்பதையும் அறிவீர்கள்.  இத்தளத்தில்கடைசியாக ஜூன் 2011-ல் பதிவிட்டதோடு சரி... இந்த வலைப்பக்கத்தை என்னால் நடத்த இயலவில்லை. பொருளாதார சிக்கல்களே இதற்கு காரணம். பல்வேறு வாசகர்கள் இந்த தளத்தை நடத்துங்கள்... நடத்துங்கள்... என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேண்டுகோள் விடுத்துக் கொண்டே இருந்தனர். உங்களின் வேண்டுகோளினை ஏற்றும் மீண்டும் இந்த தளத்திற்கு உயிரூட்டுகிறேன். இதற்கு நிதிஉதவி தேவைப்படுகிறது. பாடல்களை வாங்குவதற்கு, இணையத்தில் பதிவேற்றுவதற்கு என்று... இந்த தளத்தின்மேல் உண்மையான அக்கறை கொண்டுள்ள நண்பர்களிடமிருந்து நிதிஉதவியை இந்த தளம் எதிர்பார்க்கிறது... விளம்பரம் கொடுத்து நிதிதருவதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள சித்தமாயிருக்கிறேன். விருப்பமுள்ள நண்பர்கள் dearganesanஅட்gmail.com-ல் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்... நன்றி...

இன்று முதல் வாரத்திற்கு ஒருமுறை கிராமிய பாடலோ அல்லது வாசகர்கள் கேட்கும் அரிதான பாடல்களோ இடம் பெறும் என உறுதி கூறுகிறேன்...

*******

இனி அன்பு நண்பர் யூர்கன் கிருகியர் கேட்ட 'தட்டிப்பார்த்தேன் தொட்டாங்குச்சி' பாடல் இன்றைய நேயர் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது. (2010-ல் கேட்ட பாடல் இது... மன்னித்துக் கொள்ளுங்கள் தோழரே... நீண்ண்ண்ண்ண்ட தாமதத்திற்கு...)

1983-ல் டி. ராஜேந்தரின் இயக்கத்தில் வெளியான 'தங்கைக்கோர் கீதம்' படத்தில் இடம்பெற்ற சோகப் பாடல் இது. படத்தின் கதை என்னவென்றால், குடிகாரத்தந்தையால், அம்மா இறந்துவிட, பத்துவயது சிறுவனாக இருக்கும் டி. ராஜேந்தர் தன் தங்கையை ஒற்றை ஆளாக நின்று காப்பாற்றுகிறார். அப்படி வளர்க்கப்படும் தங்கைக்கு படாதபாடுபட்டு திருமணம் செய்து வைக்கிறார், திருமணமான பின்பு அண்ணனையே தூக்கி எறிகிறாள்... இருவரின் பாசமும் என்ன ஆயிற்று என்பதுதான் இப்படம். தங்கையாக நளினி நடித்திருப்பார்.
வரதட்சணை கொடுமையை மையமாக சித்தரித்து எடுக்கபட்ட படம் இது.

இப்படத்தின் பாடல்கள், இசை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்தும் டி. ராஜேந்தர் அவர்களேதான். இந்த பாடலைப்பாடியதும் அவரேதான்...

இனிமே பாட்டப் போடறேன் வாங்க...
இனிமையான பாட்டை கேக்கலாம் நீங்க...
கேட்டபின் சந்தோஷமா போங்க...

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட நண்பர் திரு. யூர்கன் கிருகியருக்கு எனது நன்றி. எங்களுக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.. உங்களுக்குப் பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி..! | Muziboo


--------------------------------- 


யூர்கன் க்ருகியர் said...
அடுத்த முறை டி ராஜேந்தரின் "தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி" பாடலை போடவும்.
நன்றி

@ இந்த படத்தை தயாரித்தது டி. ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர். தஞ்சை சினி ஆர்ட்ஸ் என்ற பெயரில் தயாரித்து இருக்கிறார். இதற்குப் பிறகுதான் சிம்பு சினி ஆர்ட்ஸ் உருவானது.


@ கதாநாயகனாக டி. ராஜேந்தர் நடித்திருக்க, மற்றொரு நாயகனாக சிவகுமார் நடித்திருப்பார்.


@ நடிகர் சத்யராஜ், இந்த காலகட்டத்தில் வளரத்துடிக்கும் ஒரு நடிகராக இருந்திருக்கிறார். இப்படத்தில் இவருக்கு வில்லன் வேடம். டைட்டில் கார்டில் செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, இடிச்சபுளி செல்வராஜ் ஆகியோர் பெயர்களோடு சத்யராஜ் பெயரும் இதில் இடம்பெற்றிருக்கும்.


@ இப்படத்தில் 'தஞ்சாவூரு மேளம்... தாலி கட்டும் நேரம்...' என மற்றொரு சூப்பர்ஹிட் பாடலும் இடம்பெற்றிருக்கிறது.


@ இதில்  மற்றொரு சுவரசியம் என்னவென்றால், இப்படத்தில் அறிமுகமாகும் ஒரு நடிகருக்கு டைட்டில் கார்டில் தனியாக பேரை போட்டிருப்பார்கள்.

@ அந்த அறிமுக நடிகர், மறைந்த நகைச்சுவை நடிகர் திரு. நாகேஷ் அவர்களின் மகன் ஆனந்த்பாபு. இவர் அறிமுகமான படம் இதுதான்.




Wednesday, 14 July 2010

வைகைக் கரை காற்றே நில்லு..! - திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

'உயிருள்ளவரை உஷா' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'வைகைக் கரை காற்றே நில்லு..! வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு..!' என்ற பாடல் இன்றைய நேயர் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது.

1984-ல் வெளியானது இப்படம். இப்பாடலுக்கு இசை டி. ராஜேந்தர். குரல் கொடுத்தவர் எனக்கு மிகவும் பிடித்த பாடகரான கானதேவன் கே.ஜே. யேசுதாஸ் அவர்கள்...

இப்பாடலை இயற்றியதும், இசையமைத்ததும் யார் தெரியுமா..? இப்படத்தின் இயக்குனரான டி. ராஜேந்தரேதான். காதலியைக் காணமுடியமல் தவிக்கும் தவிப்பை வரிகளிலே வடித்திருப்பார் டி. ராஜேந்தர்... அதற்கு மிகவும் அருமையான முறையில் இசையினையும் அமைத்திருப்பார்...

''நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ...
சோகமது நீங்காதோ...
காற்றே... பூங்காற்றே...
என் கண்மணி அவளைக்
கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
..''

'வைகைக் கரை காற்றே நில்லு..! வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு..!' என்ற பாடலைக் கேட்ட அன்பு நண்பர் கிறுக்கல் கிறுக்கனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

அவரோடு சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!



வைகைக் கரை காற்றே நில்லு..! | Music Codes


---------------------------------
கிறுக்கல் கிறுக்கன் said...
பாடலுக்கு நன்றி.

அடுத்து நேயர் விருப்பத்தில் “வைகைக் கரை காற்றே நில்லு, வஞ்சிதனை பார்த்தால் சொல்லு” என்னும் வரிகள் வரும் பாடல்.

நண்பரே இந்த நேயர் விருப்பம் இன்னும் வரும்...

2 June 2010 19:57




Monday, 31 May 2010

நூலுமில்லை வாலுமில்லை..! - திரைப்படப்பாடல் (நேயர் விருப்பம்)

'' நூலுமில்லை வாலுமில்லை..? வானில் பட்டம் விடுவேனா..?'' என்ற பாடல் இன்று நேயர் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது...

டி. ராஜேந்தரின் இயக்கத்தில், 1981-ல் வெளிவந்த 'இரயில் பயணங்களில்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் இந்த பாடல்...

சோகப்பாடலாக இடம்பெற்ற இப்பாடலைப் பாடியவர். திரு. டி.எம். சௌந்தரராஜன் அவர்கள். இப்பாடலை இயற்றியதும், இசையமைத்ததும் யார் தெரியுமா..? இப்படத்தின் இயக்குனரான டி. ராஜேந்தரேதான்.

காதல் தோல்வியின் வலியினை வரிகளிலே வடித்திருப்பார் டி. ராஜேந்தர்...

''பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை
காடுதன்னில் பாவி உயிர் வேகும்வரை பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும் தேவி உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே
..''

''வசந்த ஊஞ்சலிலே...,இசைந்த பூங்கொடியே'' என்ற பாடலைக் கேட்ட அன்பு நண்பர் கிறுக்கல் கிறுக்கனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

அவரோடு சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!




நூலுமில்லை வாலுமில்லை..! | Music Codes


--------

கிறுக்கல் கிறுக்கன் said...
நன்றிகள் பல நண்பரே,எனக்காகவே பாடலை வெளியிட்டமைக்கு. மேலும் ஒரு பாடல் தேவை, அது ”வசந்த ஊஞ்சலிலே...,இசைந்த பூங்கொடியே” என துவங்கும் பாடல்