ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, 11 May 2011

தூண்டா மணி விளக்கு..! - நேயர் விருப்ப பாடல்!''தூண்டா மணி விளக்கு... தூண்டாம நின்னெரியும்'' என்ற பாடலை இன்றைய நேயர் விருப்ப பாடலாக பதிவிலிடுகிறேன். இப்பாடலைப் பற்றிய தகவலை  இணையத்தில்தேடித் தேடி சலித்துப் போனேன். ஆதலால் இப்படம் குறித்த சுவராசியத் தகவல்களை கொடுக்க இயலவில்லை. அதற்கு வாசகர்கள் எனை மன்னிக்க வேண்டுகிறேன்.

விஜயகிருஷ்ணராஜ் அவர்களின் இயக்கத்தில் 11.08.1987 - அன்று வெளியான, வாழ்க வளர்க திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிது. புலவர் நா.காமராசன் எழுதிய வரிகளுக்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்க, சின்னக்குயில் சித்ரா அவர்களின் குரலில் நம் செவிகளை இப்பாடல் தாலாட்ட வருகிறது. இப்படத்தில் ராதாரவி, பாண்டியராஜன், சரிதா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட அன்பு நண்பர் நக்கீரன் மகாதேவன் அவர்களுக்கு எனது நன்றிகள். அவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள். பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.தூண்டா மணிவிளக்கு..! | Online Karaoke

------------------------------------------------
Anonymous Nakkeeran Mahadevan said...

இனிய நட்பிற்கு என் விருப்ப பாடலாய் இதை அனுப்புவிர்களா அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
பாடல் விபரம்: ”துங்காமணிவிளக்கு துண்டம நின்னெறியும் காத்துபட்டு கரையாது கரைபடிச்சு கருக்காது என் துக்கமதை வெளீய சொன்னா மங்கிவிடும் மங்கிவிடும்” படம் பெயர் தெரியவில்லை .

இயக்குநர் திரு.விஜயகிருஷ்ணராஜ் நாயகன் ராதா ரவி , நாயகி சரிதா.... இது மிக தாள நயத்துடன் ,திரு இளையராஜா இசையில் உருவானது. தயவுசைது பதியவும் . நன்றி ,

நட்புடன்

நக்கீரன்
7 May 2011 16:05
---------------------------------
நன்றி: இப்பாடலை கேட்டதும் தேடி எடுத்துக் கொடுத்த சுக்ரவதனீ குழுமத்தின் அன்பு நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு..!