ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday 30 November 2009

சங்கே முழங்கு..! - திரையிசையில் பாரதிதாசன் பாடல்


''சங்கே முழங்கு...'' கலங்கரை விளக்கம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது... புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் உணர்ச்சி மிக்க  கவிதையினை பாடலாக்கியிருப்பார்கள்...

நம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைப்பில் வெண்கலக் குரலார் அமரர். திரு. சீர்காழி கோவிந்தராஜன் மற்றும்  திருமதி. பி.சுசீலா அவர்களும் இணைந்து இப்பாடலை மிக அழகாக பாடியிருப்பார்கள்...

துள்ள வைக்கும் இசை... துடிப்பு மிக்க வரிகள்.... அடடா... இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்...


சங்கே முழங்கு... | Upload Music

அன்பான திரு வே.நடனசபாபதி அவர்களே... தாங்கள் பின்னூட்டத்தில் கேட்டபடி... இதே உங்களின் வேண்டுகோளின்  முதல் பாடல் சங்கே முழங்கு... அடுத்த பாடலை.. நாளை தருகிறேன்... (ஆண்குரல் T.M.S அல்ல சீர்காழி கோவிந்தராஜனுடையது...)

//மிக அருமையான பாடல். இரசித்துக்கேட்டேன். நன்றி பல. திருமதி P. சுசீலா அவர்கள் பாடிய 'தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடலையும், திரு T.M.S அவர்கள் பாடிய 'சங்கே முழங்கு' என்ற பாடலையும் தயை செய்து பதிவிறக்கம் செய்து தங்கள் பதிவில் தர இயலுமா?

வே.நடனசபாபதி//



கொல்லையிலே கொய்யாமரம்..! - கிராமியப் பாடல்


'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமியின் தேனினும் இனிய குரலில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ளலிசைப் பாடல்...

ஆரம்பத்தில் மெல்லிசையாகவும், அப்படியே துள்ளலிசையாக மாறும் பாருங்கள்.. அடடா... தமிழிசை... தமிழிசைதான்...

கேட்டுப் பாருங்க... உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...



கொல்லையிலே கொய்யாமரம்..! | Upload Music



Wednesday 25 November 2009

தேங்கா வெட்டி... தேங்கா நார் உரிச்சி...! - கிராமியப் பாடல்


'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் மனைவியான அனிதா குப்புசாமி அவர்களின் தேனினும் இனிய குரலில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் கும்மிப் பாடல்...

தமிழ்க்கீர்த்தனை போல் ஆரம்பத்தில் ஆலாபனையும், ராக தாளமும்... உங்களை நிச்சயம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்...

கேட்டுப் பாருங்க... உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...



தேங்கா வெட்டி... தேங்கா நார் உரிச்சி...! - கிராமியப் பாடல் | Music Upload


நன்றி: திருமதி அனிதா குப்புசாமி, 'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி குழுவினர்



Monday 23 November 2009

சீரகம் பாத்தி கட்டி..! - கிராமியப் பாடல்


கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் மற்றுமொரு சோக மயமான ஆனால் அற்புதமான காதல் கீதம்...

தன் காதலி பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்தவள்.. தான் ஏழை என்றறிந்தும் காதலால் அவனுக்கு மனைவியானாள்... அவள் வீட்டில் எவ்வளவு செல்வச் செழிப்போடு இருந்தாள் என்பதையும், அவளை தான் எப்படி வைத்து காக்கிறான் என்பதையும் மிக அழகாக... கிராமத்து மணம் கமழ.. கிராமிய இசையோடு ஒலிக்கும் பாடல்தான்...

'சீரகம் பாத்தி கட்டி... செடிக்குச் செடி குஞ்சம் கட்டி...'

கேட்டு மகிழுங்க.. மறக்காம உங்க கருத்தையும், வேண்டிய பாடலையும் பின்னூட்டத்துல சொல்லுங்க...


சீரகம் பாத்தி கட்டி..! | Upload Music

நன்றி: கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி



Monday 9 November 2009

தித்திரித்திரி பொம்மக்கோ…! -புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்

தித்திரித்திரி பொம்மக்கோ…! தில்லாலங்கடி பொம்மக்கோ..! -கிராமிய கீதத்தில் மன்னரான புஷ்பவனம் குப்புசாமியின் இதோ மற்றுமொரு துள்ளிலிசை கிராமியப் பாடல்...

நாம் சிறு வயதில் (கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு தெரியும்)  ' ஏர் ஓட்டும் மானுக்கு எண்ணி வையி பத்து... சும்மா இருக்கிற மாமனுக்கு சூடு போட்டு மொத்து...' போன்ற கிராமியக் கதை சொல்லாடல்களை அழகாக, இப்பாடலில் பயன் படுத்தி இருப்பார் புஷ்பவனம் குப்புசாமி..

பாடலின் ஆரம்பமே துள்ளலிசையோடு உங்களை ஆட வைக்கும் படி இருக்கும்...கேட்டுப் பாருங்களேன்...


தித்திரித்திரி பொம்மக்கோ..! | Online recorder



Thursday 5 November 2009

ஜம்புலிங்கமே ஜடாதரா… - திரைப்படப்பாடல்


காசேதான் கடவுளடா படத்தில் இடம்பெற்ற கலக்கலான நகைச்சுவைப் பாடல்… ‘ஜம்புலிங்கமே ஜடாதரா… வாயுலிங்கமே அரோகரா...’

இப்படத்தின் நாயகர்களான முத்துரானும், ஸ்ரீகாந்தும் அவர்கள் வீட்டிலுள்ள மனோரமாவை ஏமாற்ற, டீக்கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் தேங்காய் சீனிவாசனுக்கு போலிச்சாமியார் வேடமிட்டு அழைத்து வந்து விடுவார்கள்...

மூவரும் சேர்ந்து பஜனை பாடல் பாடுவார்கள்... அப்போதுதான் இந்த கலக்கலான நகைச்சுவைப் பாடல் இடம் பெறும்...  கவிஞர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இப்பாடலுக்கு இனிமையான, அருமையான இசையை வடித்தார். அதுமட்டுமின்றி...இப்படலில் மேற்கத்திய பாணி இசையை அழகாக உள்ளே நுழைத்திருப்பார் எம்.எஸ்.வி.

இப்பாடலில்... 'பஞ்சலிங்கமே மசால் வடா...', 'கோழிக்கறியைக் கேட்டவனே...' 'மதுக்கஷாயத்தைக் குடித்தவனே..' என்று வரும்... இந்த வரிகள் கொண்ட பாடலை, அப்போதிருந்த தணிக்கைத் துறையினர் கத்தரி போட்டனர். பின்பு, மசால் வடா - மடா படா என்றும்... கோழிக்கறி - ஓட்டல் கறி என்றும்... மதுக்கஷாயம் - மல கஷாயம் என்றும் மாற்றப்பட்டது...

நீங்கள் கேட்கவிருப்பது தணிக்கைக்கு முந்தைய பாடல்... கேட்டு மகிழுங்க... பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க...



ஜம்புலிங்கமே ஜடாதரா... - நகைச்சுவைத் திரைப்பாடல் | Upload Music

நன்றி : திரு எம்.கே.ஆர். சாந்தாராம்... (தகவல் மற்றும் பாடல் உதவிக்கு)

இப்பாடலின் திரைவடிவம் இங்கே...


Jambulingame Jadaadaraa
Uploaded by comeupdowngo. - More college and campus videos.




Tuesday 3 November 2009

பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்..! - திரைப்பாடல்



1965-ல் வெளியான, எம்.ஜி.ஆரின் இனிமையான காதல் திரைப்பாடல் இது...
எம்.ஜி.ஆர் பாடலில் மகுடம் சூட்டிய காதல் பாடல் இது…. பணம் படைத்தவன் என்ற படத்தில் இடம்பெற்ற “பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்” பாட்டில் எம்ஜிஆரும் கே.ஆர். விஜயாவும் முகலாய உடையில் வந்து ஆடிப் பாடுவார்கள்.
டி எம் சௌந்தரராஜனின் கானாமிர்தக் குரலும்…. எல்.ஆர். ஈஸ்வரியின் ஹம்மிங் குரலும்…. நம் இதயத்தை ஊடுருவும்…
கவிஞர் வாலியின் வாலிப வரிகளில் அமைந்த இப்பாடலிற்கு இசையமைத்த அக்கால இசைச் சக்கரவர்த்திகளான எம்.எஸ்.விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் அவர்களுடைய இசைக்கோலங்களை நம் செவி…. இதயம் என சகலத்திலும் இட்டிருப்பார்கள் …

கேட்டு மகிழுங்க… மறக்காம உங்க கருத்தையும் பதிவு செய்யுங்க...தேவையெனில் பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க...
நன்றி:  எம்.கே.ஆர்.சாந்தாராம்




இப்பாடலின் திரை வடிவம்






Monday 2 November 2009

'கரையோரம் ஆலமரம்... கரைக்குங்கீழே வேலமரம்..' - கிராமியப் பாடல்


விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரின் இதோ மற்றுமொரு துள்ளிசைப் பாடல்... 'கரையோரம் ஆலமரம்... கரைக்குங்கீழே வேலமரம்..'

இப்பாடலில் கிராமத்துப் பெண் ஒருத்தி தான் பிறந்த ஊரின் பெருமைகளை மிக அழகாகச் சொல்கிறாள்... இப்பாடலில் தவில் தனி ஆவர்த்னம் செய்ய... நாதஸ்வரம் நாதத்தோடு கலந்து வர.. உறுமி மேளம் உயிர்ப்போடு ஊடாட... விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனின் கணீர்க் குரலும்... ஆகா...

அட கேட்டுப் பாருங்க... அப்புறம் தெரியும்...


கரையோரம் ஆலமரம்... கரைக்குங்கீழே வேலமரம்..' | Upload Music

(உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்க... முடிஞ்சா பின்னுட்டமிடுங்க..>)