
வணக்கம்...
நம்முடைய நாட்டுப்புற, கிராமியப் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உங்களுக்குப் பிடித்த பழைய திரைப்பாடல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் இந்த வலைக்குடில்..
உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்... முடிந்தவரை எடுத்துத் தருகிறேன்... இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
தொடர்புக்கு: moganan@gmail.com
ட்விட்டரில் தொடர
Monday, 23 November 2009
சீரகம் பாத்தி கட்டி..! - கிராமியப் பாடல்
கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் மற்றுமொரு சோக மயமான ஆனால் அற்புதமான காதல் கீதம்...
தன் காதலி பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்தவள்.. தான் ஏழை என்றறிந்தும் காதலால் அவனுக்கு மனைவியானாள்... அவள் வீட்டில் எவ்வளவு செல்வச் செழிப்போடு இருந்தாள் என்பதையும், அவளை தான் எப்படி வைத்து காக்கிறான் என்பதையும் மிக அழகாக... கிராமத்து மணம் கமழ.. கிராமிய இசையோடு ஒலிக்கும் பாடல்தான்...
'சீரகம் பாத்தி கட்டி... செடிக்குச் செடி குஞ்சம் கட்டி...'
கேட்டு மகிழுங்க.. மறக்காம உங்க கருத்தையும், வேண்டிய பாடலையும் பின்னூட்டத்துல சொல்லுங்க...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஊருப்பக்கம் கேட்டது. மீண்டும் கேட்க நியாபகப்படுத்தியதற்கு நன்றி.
வாங்க நண்பரே...
நீங்க சொல்றது உண்மைதான்... இப்பெல்லாம் இந்த மாதிரி பாடல்களை தேடினாக் கூட கிடைக்க மாட்டேங்குது...
இவைகளெல்லாம் நான் என்றும் ரசித்துக் கேட்கும் பாடல்கள்...
அதான் உங்களனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்...
அடிக்கடி பாட்டு கேக்க வாங்க...
Post a Comment