ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday 26 April 2011

என்னடி முனியம்மா..! - டி.கே. எஸ். நடராஜனின் கிராமியப் பாடல்!


'அட என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி... யாரு வச்ச மையி... இது நான் வச்ச மையி...' என்ற உண்மையான கிராமியப் பாடலை இன்று என் விருப்ப பாடலாக பதிவிலிடுகிறேன்.

என்னுடைய சிறுவயதில் கேட்ட பாடல். ஊர் திருவிழாவின் போது இப்பாடலை அடிக்கடி ஒலிபரப்புவார்கள். கேட்கவே இனிமையாக இருக்கும். டி.கே.எஸ். நடராஜன் என்ற கிராமியப் பாடகர் பாடிய பாடலிது. இவர் வெளியிட்ட நாட்டுப்புற தெம்மாங்கு என்ற கிராமிய இசைத் தொகுப்பில் இப்பாடல் இடம்பெற்றிருக்கிறது.

இப்பாடல் ஏதோ ஒரு சினிமாவில் இடம் பெற்ற பாடலோ என்று என்னுடைய சிறுவயதில் நினைத்துக் கொள்வேன். அப்போதெல்லாம் யாரேனும் கண்ணில் அதிகமாக மை வைத்துக் கொண்டு தெருவில் வந்தால் (என் வயது பெண் பிள்ளைகளைத்தான்) இந்தப் பாடலைத்தான் பாடி கிண்டல் பண்ணுவோம்.

அருமையான கிராமிய இசையும், டி.கே.எஸ். நடராஜன் அவர்களின் வெண்மணிக் குரலும் நம்மை மெய்மறக்கச் செய்து விடும். தன் கிராமத்து கட்டழகியை அவர் வர்ணிக்கும் விதமே தனி அழகு.

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள். பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.


என்னடி முனியம்மா..! | Musicians Available

நன்றி: டி.கே.எஸ். நடராஜன் குழுவினர்

சுவாரசியத் தகவல்கள்


@ இப்பிரபலமான கிராமியப் பாடலை, அர்ஜுன் நடித்து வெளிவந்த 'வாத்தியார்' படத்தில் ரீமிக்ஸ் செய்திருப்பார்கள். அதில் டிகேஎஸ் நடராஜனும் இப்பாடலுக்கு பாடி, ஆடி நடித்திருப்பார்.


@ கிராமியப் பாடல்களை பாடினாலும், சினிமாவிலும் டிகேஎஸ் நடராஜன் நடித்துள்ளார். துணை கதாபாத்திரங்களாக நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.




Saturday 16 April 2011

எல்லாம் கெடக்கட்டும் வாங்க..! - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் கிராமியப் பாடல்



விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் 'எல்லாம் கெடக்கடும் வாங்க... ரெண்டு இளசு வெத்தல தாங்க..!' என்ற அட்டகாசமான துள்ளலிசை கலந்த கிராமியப் பாடலை இன்று பதிவிலிடுகிறேன்.

விஜயலட்சுமி அம்மாவின் கணீர்க்குரலில் வரிகள் வலை விரிக்க, கோரஸ் பாடியிருக்கும் குழுவினரும் அதற்கு ஒத்திசைக்க, அதன் பின்னர் வரும் உருமி, நாதஸ்வர இசை, நையாண்டி மேள இசை
 எல்லாம் நம்மை எளிதில் வளைத்து விடுகிறது. குடுகுடுப்பை போன்ற ஒரு இசைக்கருவியும் நம்மை உசுப்பேற்றுகிறது. 

கிராமத்து மக்களுக்கு வெறும் வாயை மெல்லப் பிடிக்காது, வெத்திலை போட்டு மெல்லவது அவர்களுக்கு மெத்தப் பிடிக்கும். அதனைப் பயன்படுத்தி விவசாயம் சார்ந்து பாடலை பின்னியிருப்பார்.. அவரது குரலாலும், அவரது குழுவினரின் குதுகல இசையாலும் நம்மை பின்னலிட வைக்கிறார்கள்.



அட்டகாசமான துள்ளலிசைப் பாடலைக் கொடுத்தமைக்கு திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எனக்குப் பிடித்த இந்த கிராமியப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


எல்லாம் கெடக்கட்டும் வாங்க..! | Upload Music

நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் & குழுவினர்




Wednesday 6 April 2011

முதன் முதலாக நான் நடித்த டாகுமெண்டரி படம்..!

கல்லூரி வாழ்க்கையின் போது நாடகம் எழுதி, இயக்கி, நடித்து பரிசுகள் வாங்கியது எல்லாம் பத்து வருடத்திற்கு முன்பு நடந்தவை. அவை எல்லாம் என் கலை தாகத்தை அப்போதைக்கு தீர்த்து வைத்தவை.

அதன் நீட்சியாக, தற்போது '0 Value' என்ற டாகுமெண்டரி படத்தில் முதன் முதலாக நடித்துள்ளேன். இதில் ஒரு வழக்கறிஞராக (ரவீந்திரன் என்ற பெயரில் நடித்துள்ளேன்) பேசியுள்ளேன்.

நான் திரையில் தோன்றுவதில் இதுதான் எனது முதல் பிறப்பு..!


இந்த டாகுமெண்டரியை இயக்கிய என் அன்புத் தம்பி வெங்கடேசனுக்கும், அவனுக்கு உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..!