விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் 'எல்லாம் கெடக்கடும் வாங்க... ரெண்டு இளசு வெத்தல தாங்க..!' என்ற அட்டகாசமான துள்ளலிசை கலந்த கிராமியப் பாடலை இன்று பதிவிலிடுகிறேன்.
விஜயலட்சுமி அம்மாவின் கணீர்க்குரலில் வரிகள் வலை விரிக்க, கோரஸ் பாடியிருக்கும் குழுவினரும் அதற்கு ஒத்திசைக்க, அதன் பின்னர் வரும் உருமி, நாதஸ்வர இசை, நையாண்டி மேள இசை எல்லாம் நம்மை எளிதில் வளைத்து விடுகிறது. குடுகுடுப்பை போன்ற ஒரு இசைக்கருவியும் நம்மை உசுப்பேற்றுகிறது.
கிராமத்து மக்களுக்கு வெறும் வாயை மெல்லப் பிடிக்காது, வெத்திலை போட்டு மெல்லவது அவர்களுக்கு மெத்தப் பிடிக்கும். அதனைப் பயன்படுத்தி விவசாயம் சார்ந்து பாடலை பின்னியிருப்பார்.. அவரது குரலாலும், அவரது குழுவினரின் குதுகல இசையாலும் நம்மை பின்னலிட வைக்கிறார்கள்.
அட்டகாசமான துள்ளலிசைப் பாடலைக் கொடுத்தமைக்கு திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எனக்குப் பிடித்த இந்த கிராமியப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
No comments:
Post a Comment