ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label Tamil songs. Show all posts
Showing posts with label Tamil songs. Show all posts

Wednesday, 26 February 2014

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி..! - நேயர் விருப்பப் பாடல்

எனது வலைப்பக்க நண்பர்களுக்கு... இந்த மோகனனின் வணக்கங்கள்... இந்த தளம் எப்படிப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனந்த விகடனில் பாராட்டப்பட்ட தளம் இது என்பதையும் அறிவீர்கள்.  இத்தளத்தில்கடைசியாக ஜூன் 2011-ல் பதிவிட்டதோடு சரி... இந்த வலைப்பக்கத்தை என்னால் நடத்த இயலவில்லை. பொருளாதார சிக்கல்களே இதற்கு காரணம். பல்வேறு வாசகர்கள் இந்த தளத்தை நடத்துங்கள்... நடத்துங்கள்... என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேண்டுகோள் விடுத்துக் கொண்டே இருந்தனர். உங்களின் வேண்டுகோளினை ஏற்றும் மீண்டும் இந்த தளத்திற்கு உயிரூட்டுகிறேன். இதற்கு நிதிஉதவி தேவைப்படுகிறது. பாடல்களை வாங்குவதற்கு, இணையத்தில் பதிவேற்றுவதற்கு என்று... இந்த தளத்தின்மேல் உண்மையான அக்கறை கொண்டுள்ள நண்பர்களிடமிருந்து நிதிஉதவியை இந்த தளம் எதிர்பார்க்கிறது... விளம்பரம் கொடுத்து நிதிதருவதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள சித்தமாயிருக்கிறேன். விருப்பமுள்ள நண்பர்கள் dearganesanஅட்gmail.com-ல் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்... நன்றி...

இன்று முதல் வாரத்திற்கு ஒருமுறை கிராமிய பாடலோ அல்லது வாசகர்கள் கேட்கும் அரிதான பாடல்களோ இடம் பெறும் என உறுதி கூறுகிறேன்...

*******

இனி அன்பு நண்பர் யூர்கன் கிருகியர் கேட்ட 'தட்டிப்பார்த்தேன் தொட்டாங்குச்சி' பாடல் இன்றைய நேயர் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது. (2010-ல் கேட்ட பாடல் இது... மன்னித்துக் கொள்ளுங்கள் தோழரே... நீண்ண்ண்ண்ண்ட தாமதத்திற்கு...)

1983-ல் டி. ராஜேந்தரின் இயக்கத்தில் வெளியான 'தங்கைக்கோர் கீதம்' படத்தில் இடம்பெற்ற சோகப் பாடல் இது. படத்தின் கதை என்னவென்றால், குடிகாரத்தந்தையால், அம்மா இறந்துவிட, பத்துவயது சிறுவனாக இருக்கும் டி. ராஜேந்தர் தன் தங்கையை ஒற்றை ஆளாக நின்று காப்பாற்றுகிறார். அப்படி வளர்க்கப்படும் தங்கைக்கு படாதபாடுபட்டு திருமணம் செய்து வைக்கிறார், திருமணமான பின்பு அண்ணனையே தூக்கி எறிகிறாள்... இருவரின் பாசமும் என்ன ஆயிற்று என்பதுதான் இப்படம். தங்கையாக நளினி நடித்திருப்பார்.
வரதட்சணை கொடுமையை மையமாக சித்தரித்து எடுக்கபட்ட படம் இது.

இப்படத்தின் பாடல்கள், இசை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்தும் டி. ராஜேந்தர் அவர்களேதான். இந்த பாடலைப்பாடியதும் அவரேதான்...

இனிமே பாட்டப் போடறேன் வாங்க...
இனிமையான பாட்டை கேக்கலாம் நீங்க...
கேட்டபின் சந்தோஷமா போங்க...

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட நண்பர் திரு. யூர்கன் கிருகியருக்கு எனது நன்றி. எங்களுக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.. உங்களுக்குப் பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி..! | Muziboo


--------------------------------- 


யூர்கன் க்ருகியர் said...
அடுத்த முறை டி ராஜேந்தரின் "தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி" பாடலை போடவும்.
நன்றி

@ இந்த படத்தை தயாரித்தது டி. ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர். தஞ்சை சினி ஆர்ட்ஸ் என்ற பெயரில் தயாரித்து இருக்கிறார். இதற்குப் பிறகுதான் சிம்பு சினி ஆர்ட்ஸ் உருவானது.


@ கதாநாயகனாக டி. ராஜேந்தர் நடித்திருக்க, மற்றொரு நாயகனாக சிவகுமார் நடித்திருப்பார்.


@ நடிகர் சத்யராஜ், இந்த காலகட்டத்தில் வளரத்துடிக்கும் ஒரு நடிகராக இருந்திருக்கிறார். இப்படத்தில் இவருக்கு வில்லன் வேடம். டைட்டில் கார்டில் செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, இடிச்சபுளி செல்வராஜ் ஆகியோர் பெயர்களோடு சத்யராஜ் பெயரும் இதில் இடம்பெற்றிருக்கும்.


@ இப்படத்தில் 'தஞ்சாவூரு மேளம்... தாலி கட்டும் நேரம்...' என மற்றொரு சூப்பர்ஹிட் பாடலும் இடம்பெற்றிருக்கிறது.


@ இதில்  மற்றொரு சுவரசியம் என்னவென்றால், இப்படத்தில் அறிமுகமாகும் ஒரு நடிகருக்கு டைட்டில் கார்டில் தனியாக பேரை போட்டிருப்பார்கள்.

@ அந்த அறிமுக நடிகர், மறைந்த நகைச்சுவை நடிகர் திரு. நாகேஷ் அவர்களின் மகன் ஆனந்த்பாபு. இவர் அறிமுகமான படம் இதுதான்.




Wednesday, 11 May 2011

தூண்டா மணி விளக்கு..! - நேயர் விருப்ப பாடல்!



''தூண்டா மணி விளக்கு... தூண்டாம நின்னெரியும்'' என்ற பாடலை இன்றைய நேயர் விருப்ப பாடலாக பதிவிலிடுகிறேன். இப்பாடலைப் பற்றிய தகவலை  இணையத்தில்தேடித் தேடி சலித்துப் போனேன். ஆதலால் இப்படம் குறித்த சுவராசியத் தகவல்களை கொடுக்க இயலவில்லை. அதற்கு வாசகர்கள் எனை மன்னிக்க வேண்டுகிறேன்.

விஜயகிருஷ்ணராஜ் அவர்களின் இயக்கத்தில் 11.08.1987 - அன்று வெளியான, வாழ்க வளர்க திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிது. புலவர் நா.காமராசன் எழுதிய வரிகளுக்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்க, சின்னக்குயில் சித்ரா அவர்களின் குரலில் நம் செவிகளை இப்பாடல் தாலாட்ட வருகிறது. இப்படத்தில் ராதாரவி, பாண்டியராஜன், சரிதா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட அன்பு நண்பர் நக்கீரன் மகாதேவன் அவர்களுக்கு எனது நன்றிகள். அவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள். பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.



தூண்டா மணிவிளக்கு..! | Online Karaoke

------------------------------------------------
Anonymous Nakkeeran Mahadevan said...

இனிய நட்பிற்கு என் விருப்ப பாடலாய் இதை அனுப்புவிர்களா அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
பாடல் விபரம்: ”துங்காமணிவிளக்கு துண்டம நின்னெறியும் காத்துபட்டு கரையாது கரைபடிச்சு கருக்காது என் துக்கமதை வெளீய சொன்னா மங்கிவிடும் மங்கிவிடும்” படம் பெயர் தெரியவில்லை .

இயக்குநர் திரு.விஜயகிருஷ்ணராஜ் நாயகன் ராதா ரவி , நாயகி சரிதா.... இது மிக தாள நயத்துடன் ,திரு இளையராஜா இசையில் உருவானது. தயவுசைது பதியவும் . நன்றி ,

நட்புடன்

நக்கீரன்
7 May 2011 16:05
---------------------------------
நன்றி: இப்பாடலை கேட்டதும் தேடி எடுத்துக் கொடுத்த சுக்ரவதனீ குழுமத்தின் அன்பு நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு..!




Wednesday, 30 March 2011

நாடே இதயம் எங்கள் நாடே உதிரம்..! - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சிறப்பு பாடல்


1999 உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணியை உற்சாகப் படுத்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய 'நாடே இதயம்.. எங்கள் நாடே உதிரம்...' என்ற பாடலை இன்று சிறப்புப் பாடலாக பதிவிலிடுகிறேன்.

இன்று 2011 உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் நமது பரம வைரியான பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோத இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்.

இப்பாடலை எழுதியவர், இசையமைத்தவர் யார் என்ற விபரத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவருடைய கணீர்க் குரலில் இப்பாடல் நமது நாடி நரம்புகளை முறுக்கேற்றும்...

இந்தியா கிரிக்கெட்டில் மட்டுமல்ல எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே 120 கோடி மக்களின் ஆசை. அதில் கிரிக்கெட் தனியிடம் பெறுகிறது. இந்த உலகக் கோப்பையினை வெல்ல இந்திய அணிக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

சாதனை நாயகன் சச்சினுக்கு சாதனை மகுடம் சூட்ட இந்த போட்டி நிச்சயம் உதவும்.. இந்தியா கோப்பையை வெல்லும். வெல்க இந்தியா வெல்க..!

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


நாடே இதயம்..! | Upload Music

சிறப்புத் தகவல்கள்

@பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் வீரராக இருந்தவர். 


@இந்த பாடல் 1999 உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணியை உற்சாகப் படுத்த, ஜெயா தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது.




Wednesday, 16 February 2011

வரான் வரான் பூச்சாண்டி..! - திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

இரண்டுபேர் படத்தில் குஷ்பு, ரோஜா

'வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே..!' என்ற பாடலை இன்றைய நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்...

2003-ல் வெளிவர இருந்த 'இரண்டு பேர்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அருமையான துள்ளலிசைப் பாடல் இது...

இப்பாடலை எழுதி, பாடியவர் ஆபாவாணன். இசை சுனில் வர்மா. பாட்டைக் கேட்டுப் பாருங்க... அட்டகாசமாய் எழுதியது மட்டுமின்றி... அருமையாகவும் பாடியிருக்கிறார்.

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட திரு ராமச்சந்திரன் அவர்களுக்கு எனது நன்றிகள். அவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேளுங்கள்.. பிடித்திருப்பின் இலவசமாய் பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!

-----------------------------------------------
Anonymous Ramachandran said...


dear moganan,


i appreciate your interest of songs

thanks for your old tamil songs while listening that i forget surroundings regrds

request to post one song "vaaran vaaran poochandi mattu vandiyile" i heard this song in sun tv asatha povadhu yaaru programme. whether this is film song or folk song please post

ramachandran, kgf
23 December 2010 18:21
------------------------------------
இப்படம் குறித்த தகவல்கள்..!

@இப்படத்தின் இஞை அமைப்பாளர் சுனில் வர்மா. இவர் க்யான் வர்மாவின் மகன். க்யான் வர்மா, மனோஜ்-க்யான் என்ற பெயரில் இசை அமைத்த இரட்டையரில் ஒருவர். ஊமை விழிகளில் இவர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் ஆபாவாணன்.


@ 'இரண்டு பேர்' திரைப்படக் குழு


நடிக நடிகையர்: ராம்கி, குஷ்பு, ரோஜா, சங்கவி, நாசர், செந்தில், பிரதாப் போத்தன் மற்றும் பலர்

கதை - இந்துமதி, ஒளிப்பதிவு - சுரேஷ் குமார், தயாரிப்பு - தேன்மொழி ஆபாவாணன், திரைக்கதை, பாடல்கள் மற்றும் இணை இசை - ஆபாவாணன்

இசை - சுனில் வர்மா (இசையமைப்பாளர் கியான் வர்மாவின் புதல்வர் - மனோஜ்-கியான் இரட்டையர்கள்), இயக்கம் - எஸ்.டி.சபாபதி


@2003ல் அந்தப் படம் வந்திருக்க வேண்டும்.வந்த மாதிரி தெரியவில்லை.ஆபாவாணன் ஒரு படம் எடுத்து பெரும் நஷ்டம் அடைந்தார்.அந்தப் படத்திற்கு வசனம் எழுதிய இந்துமதி படத்தின் தயாரிப்பிற்கு உதவியதால் நஷ்டமடைந்தார்.பின்னர் கங்கா-யமுனா-சரஸ்வதி என்ற சீரியலை எடுத்தார்.


@ ஆபாவாணன் படம் இது. பாடலைப்பாடியவரும் அவரே. இந்த நிமிடம் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி லேபில் தூங்கிக் கொண்டிருக்கிறது படம்! உலகத்திரைக்காட்சிகளில் இன்னும் வெளிவராத படம் இது!! இனியும் வருமா என்பதும் சந்தேகமே. காரணம்.. படத்தில் நடித்தபோது குஷ்பு, ரோஜாவுக்கெல்லாம் கல்யாணமே ஆகியிருக்கவில்லை. பாக்கியிருக்கும் காட்சிகளை இப்போது எடுப்பதானால் கண்டினியுட்டி கழுதை உதைக்கும்.


@படைப்பாளியின் அனுமதியோ அல்லது பெயர் மரியாதையோ இன்றி பாடலைச் சுட்டு, அதற்கான காட்சிகளையும் ஆங்கில அனிமேஷன் படங்களில் இருந்து சுட்டெடுத்து வெட்டி ஒட்டி புத்தம்புதிய காப்பியாக்கியிருக்கிறார்கள்! அது இணையத்தில் 2008 - லேயே சூப்பர் ஹிட் ஆனது..!


@கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் முதல் காட்சியில் இந்தப் பாடல் நான்கு வரிகள் வரும்.


(நான் நன்கு விசாரித்து, எனக்குத் தெரிந்த வரையில் இப்படத்தின் தகவல்களைத் தொகுத்திருக்கிறேன். இதில் தவறு இருப்பின் தக்க ஆதாரத்துடன் இணைய வாசகர்களை சுட்ட வேண்டுகிறேன்...)