ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, 16 February 2011

வரான் வரான் பூச்சாண்டி..! - திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

இரண்டுபேர் படத்தில் குஷ்பு, ரோஜா

'வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே..!' என்ற பாடலை இன்றைய நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்...

2003-ல் வெளிவர இருந்த 'இரண்டு பேர்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அருமையான துள்ளலிசைப் பாடல் இது...

இப்பாடலை எழுதி, பாடியவர் ஆபாவாணன். இசை சுனில் வர்மா. பாட்டைக் கேட்டுப் பாருங்க... அட்டகாசமாய் எழுதியது மட்டுமின்றி... அருமையாகவும் பாடியிருக்கிறார்.

இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட திரு ராமச்சந்திரன் அவர்களுக்கு எனது நன்றிகள். அவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேளுங்கள்.. பிடித்திருப்பின் இலவசமாய் பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!

-----------------------------------------------
Anonymous Ramachandran said...


dear moganan,


i appreciate your interest of songs

thanks for your old tamil songs while listening that i forget surroundings regrds

request to post one song "vaaran vaaran poochandi mattu vandiyile" i heard this song in sun tv asatha povadhu yaaru programme. whether this is film song or folk song please post

ramachandran, kgf
23 December 2010 18:21
------------------------------------
இப்படம் குறித்த தகவல்கள்..!

@இப்படத்தின் இஞை அமைப்பாளர் சுனில் வர்மா. இவர் க்யான் வர்மாவின் மகன். க்யான் வர்மா, மனோஜ்-க்யான் என்ற பெயரில் இசை அமைத்த இரட்டையரில் ஒருவர். ஊமை விழிகளில் இவர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் ஆபாவாணன்.


@ 'இரண்டு பேர்' திரைப்படக் குழு


நடிக நடிகையர்: ராம்கி, குஷ்பு, ரோஜா, சங்கவி, நாசர், செந்தில், பிரதாப் போத்தன் மற்றும் பலர்

கதை - இந்துமதி, ஒளிப்பதிவு - சுரேஷ் குமார், தயாரிப்பு - தேன்மொழி ஆபாவாணன், திரைக்கதை, பாடல்கள் மற்றும் இணை இசை - ஆபாவாணன்

இசை - சுனில் வர்மா (இசையமைப்பாளர் கியான் வர்மாவின் புதல்வர் - மனோஜ்-கியான் இரட்டையர்கள்), இயக்கம் - எஸ்.டி.சபாபதி


@2003ல் அந்தப் படம் வந்திருக்க வேண்டும்.வந்த மாதிரி தெரியவில்லை.ஆபாவாணன் ஒரு படம் எடுத்து பெரும் நஷ்டம் அடைந்தார்.அந்தப் படத்திற்கு வசனம் எழுதிய இந்துமதி படத்தின் தயாரிப்பிற்கு உதவியதால் நஷ்டமடைந்தார்.பின்னர் கங்கா-யமுனா-சரஸ்வதி என்ற சீரியலை எடுத்தார்.


@ ஆபாவாணன் படம் இது. பாடலைப்பாடியவரும் அவரே. இந்த நிமிடம் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி லேபில் தூங்கிக் கொண்டிருக்கிறது படம்! உலகத்திரைக்காட்சிகளில் இன்னும் வெளிவராத படம் இது!! இனியும் வருமா என்பதும் சந்தேகமே. காரணம்.. படத்தில் நடித்தபோது குஷ்பு, ரோஜாவுக்கெல்லாம் கல்யாணமே ஆகியிருக்கவில்லை. பாக்கியிருக்கும் காட்சிகளை இப்போது எடுப்பதானால் கண்டினியுட்டி கழுதை உதைக்கும்.


@படைப்பாளியின் அனுமதியோ அல்லது பெயர் மரியாதையோ இன்றி பாடலைச் சுட்டு, அதற்கான காட்சிகளையும் ஆங்கில அனிமேஷன் படங்களில் இருந்து சுட்டெடுத்து வெட்டி ஒட்டி புத்தம்புதிய காப்பியாக்கியிருக்கிறார்கள்! அது இணையத்தில் 2008 - லேயே சூப்பர் ஹிட் ஆனது..!


@கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் முதல் காட்சியில் இந்தப் பாடல் நான்கு வரிகள் வரும்.


(நான் நன்கு விசாரித்து, எனக்குத் தெரிந்த வரையில் இப்படத்தின் தகவல்களைத் தொகுத்திருக்கிறேன். இதில் தவறு இருப்பின் தக்க ஆதாரத்துடன் இணைய வாசகர்களை சுட்ட வேண்டுகிறேன்...)
6 comments:

தமிழன்பன் said...

கையில் பிரம்புடன் முதல் ஆளாக வந்துவிட்டேன்.
பதிவில் கீழுள்ள பத்தியை முழுமையாக நீக்கிவிடுங்கள். அது தேவையற்றது...

//இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட அவர்களுக்கு எனது நன்றிகள். அவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேளுங்கள்.. பிடித்திருப்பின் இலவசமாய் பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!//

மோகனன் said...

ஹி... ஹி... ஹி... நீக்கிட்டேனுங்கே...

பிரம்பு வேண்டாம்...


அடிக்கடி கேட்க வாங்க..!

Ramachandran K said...

dear moganan..

thanks a lot for your hardwork i like this song very much its rhythm. in asathapovadhu yaaru programme has done in a double role at the end he shows that only one man have you seen that programme. one more request of film : annai velanganni song: neela kadalin orathil endra padalai thedavum please.

regards

ramachandran
kolar gold fields

மோகனன் said...

நன்றி ராமச்சந்திரன்...

நான் கடவுள் மறுப்பாளன்...) இப்பாடலை உங்களுக்காக தேடிப் பார்க்கிறேன்...

அடிக்கடி கேட்க வாங்க...

jothi said...

இந்த‌ பாட‌லை கேட்டிருக்கிறேன். ஆனால் இத்த‌னை விப‌ர‌ங்க‌ள் தெரியாது. ப‌கிர்விற்கு மிக்க‌ ந‌ன்றி.

உங்களை அறிமுக‌ம் செய்த‌ த‌மிழ்ச‌ர‌த்திற்கும் (எஸ் கே) ந‌ன்றி

மோகனன் said...

வருகைக்கு மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!