ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, 17 August 2010

மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா..! - பழைய திரைப்படப் பாடல்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் 1956-ல் வெளிவந்த 'தாய்க்குப் பின் தாரம்' என்ற படத்தில் இடம் பெற்ற ''மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே..!'' என்ற பாடல்தான் இன்று நான் பதிவிலிடப் போகும் பாடலாகும்.

திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசையமைப்பில், கவிஞர் மருதகாசியின் வைர வரிகளில், டி.எம்.சௌந்திரராஜன் குரலில் இப்பாடல் உயிர் பெற்றது.

மருதகாசியினால் படைக்கபட்ட இப்பாடல்களில் உள்ள வரிகள் அத்துனையும் வைரம் என்றே சொல்லலாம்... இப்பாடலில் மூன்று சரணங்கள் உள்ளன.. ஒவ்வொர் சரணத்திலும்... சமூகத்திற்கான கருத்துக்களை உள்ளடக்கி, மிக எளிமையாகக் கொடுத்திருப்பார்...

முதல் சரணத்தில்...


''வானம் பொழியுது... பூமி விளையுது தம்பிப் பயலே..!''
நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே..!
ஆனா தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே..!

இரண்டாவது சரணத்தில்...

''தரையைப் பாத்து நிக்குது நல்ல கதிரு..!
தன் குறையை மறந்து மேல பாக்குது பதரு..!
அதுபோல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே..!
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது வெளியிலே..!''

மூன்றாவது சரணத்தில்...
''ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே..!
எதுக்கும் ஆமாஞ் சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே..!''


எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! இயன்றவரை நான் தருகிறேன்..!மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா..! | Musicians Available


இப்பாடலின் திரை வடிவம் இங்கே...நன்றி: யூ டியூப்Wednesday, 11 August 2010

சந்தைக்கி வந்த கிளி..! - திரைப்படப் பாடல்

தர்மதுரை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற அட்டகாசமான துள்ளலிசை பாடல்தான் இந்த "சந்தைக்கி வந்த கிளி..! சாடை சொல்லி பேசுதடி" பாடல்.

1991-ல் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் ராஜசேகர். (இவர் மலையூர் மம்பட்டியான், மாவீரன், காக்கிச் சட்டை, விக்ரம், படிக்காதவன், தம்பிக்கு எந்த ஊரு.. போன்ற படங்களை இயக்கியவர். தர்மதுரை படத்தின் நூறாவது நாளன்று மாரடைப்பால் இவர் அமரராகிவிட்டார்)

இப்பாடலுக்கு இசையமைத்தவர் நம் இசைஞானி இளையராஜா அவர்கள். பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி ஆகியோர். இப்பாடலை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. ஆனால் இப்படத்திற்கு பாடல் எழுதியவர்கள் இரண்டு பேர். பஞ்சு அருணாசலம், கங்கை அமரன் ஆகியோர். சரியான தகவல் இருப்பின் கொடுத்து உதவும்...

இப்பாடலில் இளையராஜாவின் துள்ளலிசை அட்டகாசமாக இருக்கும்... அதற்கு இணையாக பாடகர்களும் இணைந்து கலக்கியிருப்பார்கள்...

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... பிடிச்சிருந்தா இலவசமா பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க..! உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க...சந்தைக்கி வந்த கிளி..! | Music CodesWednesday, 4 August 2010

தாமரை தெப்பத்துல..! - புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்.!

'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ளலிசைப் பாடல்...

ஆரம்பத்திலிருந்தே துள்ளலிசை உங்க காதை ஆட வைக்கும்... நையாண்டி மேளம்.. உருமி மேளம் என கிராமிய இசை பின்னியெடுக்கும்...  அடடா... தமிழிசைன்னா... தமிழிசைதான்...

தாமரை தெப்பத்துல... தலைமுழுகி போற புள்ள.. நீ குளிக்கும் தெப்பத்தில நான் குளிச்சா ஆகாதோ..? என தலைவன் கேட்க பதிலிருக்கிறாள் தலைவி... எசப்பாட்டு வடிவத்தில் இப்பாடல் ஒலிக்கிறது...

எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...


தாமரை தெப்பத்துல..! | Musicians Available

நன்றி: 'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமி & குழுவினர்Monday, 2 August 2010

சின்ன பாப்பா... எங்க செல்ல பாப்பா..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

வண்ணக்கிளி என்ற படத்தில் இடம் பெற்ற அற்புதமான பாடல்தான் இந்த 'சின்ன பாப்பா... எங்க செல்ல பாப்பா..!'.. இன்று இப்பாடல் நேயர் விருப்பப் பாடலாக இடம் பெறுகிறது.

1959-ல் வெளிவந்த இப்படத்தினை இயக்கியவர் டி.ஆர். ரகுநாத், தயாரிப்பு: டி.ஆர்.சுந்தரம்(சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்). நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர்தான் இப்படத்தின் கதாநாயகர். (பல படங்களில் வில்லனாக நடித்தவர்). இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மிகவும் அட்டகாசமான பாடல்களாகும்.

இப்பாடலை எழுதியவர் அநேகமாக மருதாகாசியாகத்தான் இருக்கவேண்டும்..! (தவறெனில் சரியான கவிஞர் யார் எனத் தெரிவிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்..!) திரை இசைத் திலகம் கே.வி. மகாதவன் இசையமைப்பில், குரலில் பி. சுசீலாவின் தேனினும் இடிய குரலில் மழலைகளைத் தாலாட்டிக் கொஞ்ச வருகிறது இப்பாடல்...

இப்பாடலினை நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட தோழி கலையரசிக்கு எனது நன்றிகள்... இவருடன் சேர்ந்து நீங்களும் இப்பாடலைக் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவாசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! நன்றி..!


சின்ன பாப்பா... எங்க செல்ல பாப்பா..! | Upload Music

இப்பாடலின் திரை வடிவம் நன்றி: யூ டியூப்
---------------------
Blogger kalaiarasi said...
Hi, Can you please upload 'Chinna pappa, enga chella pappa Sonna pechcha kettadhan nalla pappa' song for my daughter ? Thanks Kalai
1 July 2010 11:22
Delete