ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, 17 August 2010

மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா..! - பழைய திரைப்படப் பாடல்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் 1956-ல் வெளிவந்த 'தாய்க்குப் பின் தாரம்' என்ற படத்தில் இடம் பெற்ற ''மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே..!'' என்ற பாடல்தான் இன்று நான் பதிவிலிடப் போகும் பாடலாகும்.

திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசையமைப்பில், கவிஞர் மருதகாசியின் வைர வரிகளில், டி.எம்.சௌந்திரராஜன் குரலில் இப்பாடல் உயிர் பெற்றது.

மருதகாசியினால் படைக்கபட்ட இப்பாடல்களில் உள்ள வரிகள் அத்துனையும் வைரம் என்றே சொல்லலாம்... இப்பாடலில் மூன்று சரணங்கள் உள்ளன.. ஒவ்வொர் சரணத்திலும்... சமூகத்திற்கான கருத்துக்களை உள்ளடக்கி, மிக எளிமையாகக் கொடுத்திருப்பார்...

முதல் சரணத்தில்...


''வானம் பொழியுது... பூமி விளையுது தம்பிப் பயலே..!''
நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே..!
ஆனா தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே..!

இரண்டாவது சரணத்தில்...

''தரையைப் பாத்து நிக்குது நல்ல கதிரு..!
தன் குறையை மறந்து மேல பாக்குது பதரு..!
அதுபோல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே..!
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது வெளியிலே..!''

மூன்றாவது சரணத்தில்...
''ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே..!
எதுக்கும் ஆமாஞ் சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே..!''


எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! இயன்றவரை நான் தருகிறேன்..!மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா..! | Musicians Available


இப்பாடலின் திரை வடிவம் இங்கே...நன்றி: யூ டியூப்9 comments:

Anonymous said...

நல்ல பாடல் நண்பரே.

நான் 1967 இல் வெளி வந்த "காதல் பறவை" என்ற படத்தில் வரும் "பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பாப்பா" என்ற பாடலை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் கொடுங்கள். நன்றி.

-- குமார்

மோகனன் said...

வருகைக்கு நன்றி தோழரே...

கண்டீப்பாக என்னால் இயன்றவரை தேடி எடுத்துத் தருகிறேன்...

அடிக்கடி கேட்க வாங்க..!

Kalaiarasi said...

Can you please provide 'Intha pachchai kilikku sevvandhi poovil thotilai katti vaipen' song from 'Needhikku thalai vanangu' movie which was sung by varalakshmi ?

kalaiarasi

மோகனன் said...

வருகைக்கு நன்றி தோழி...

கண்டீப்பாக தேடி எடுத்துத் தருகிறேன்...

அடிக்கடி கேட்க வாங்க..!

சர்ஹூன் said...

மருதகாசியின் இன்னொரு முத்து.. அந்தக்காலத்தில் எனது தந்தையார் இப்பாடல்களினை மேற்கோள்காட்டி கதைப்பார், பாடவும் செய்வார். அதன் பின்னர் இன்றுதான் இப்பாடலினை கேட்கின்றேன். மிக்க நன்றி அன்பரே!

முடியுமானால், வீடியோ காட்சிகளினை பதிவேற்ற முடியுமானால் இன்னும் சிறப்பு,,

வாழ்த்துக்கள்

மோகனன் said...

மிக்க நன்றி தோழரே...

உங்கள் நினைவுகளை மீட்டச் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு அமைந்தது கண்டு மகிழ்ச்சியடைகிறேன்...

பணிப்பளு காரணம் அதை செய்ய முடிவதில்லை.. இனி முயற்சிதுப் பார்க்கிறேன்..

அடிக்கடி கேட்க வாங்க..!

ram said...

Dear Mohanan,

You doing a good job, thanks a lot, i cannot find the download links , how to download the songs?

Thanks
Regards
Ramesh

மோகனன் said...

அன்பு நண்பருக்கு

பாடலை ஒலிக்க விடும் கறுப்பு பெட்டியில் பச்சை நிற வட்டத்தில் வெள்ளை நிறத்தில் கீழ் நோக்கிய அம்புக் குறி இருக்கிறதல்லவா... அதுதான் தரவிறக்கம் செய்து கொள்ளும் வழி...

முயற்சியுங்கள்... வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி...

அடிக்கடி கேட்க வாங்க..!

Meeraa said...

நான் அதிகம் விரும்பும் பாடல்களுள் ஒரு பாடல். பதிவேற்றியமைக்கு நன்றி.

அன்புக்கோர் அண்ணி படத்தில் இடம்பெற்ற “சத்தியமே துணையானபோது சஞ்சலமே அணுகாது” என்ற பாடலை நீண்ட நாளாக தேடிக்கொண்டிருக்கிறேன் தருவீர்களா?