வண்ணக்கிளி என்ற படத்தில் இடம் பெற்ற அற்புதமான பாடல்தான் இந்த 'சின்ன பாப்பா... எங்க செல்ல பாப்பா..!'.. இன்று இப்பாடல் நேயர் விருப்பப் பாடலாக இடம் பெறுகிறது.
1959-ல் வெளிவந்த இப்படத்தினை இயக்கியவர் டி.ஆர். ரகுநாத், தயாரிப்பு: டி.ஆர்.சுந்தரம்(சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்). நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர்தான் இப்படத்தின் கதாநாயகர். (பல படங்களில் வில்லனாக நடித்தவர்). இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மிகவும் அட்டகாசமான பாடல்களாகும்.
இப்பாடலை எழுதியவர் அநேகமாக மருதாகாசியாகத்தான் இருக்கவேண்டும்..! (தவறெனில் சரியான கவிஞர் யார் எனத் தெரிவிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்..!) திரை இசைத் திலகம் கே.வி. மகாதவன் இசையமைப்பில், குரலில் பி. சுசீலாவின் தேனினும் இடிய குரலில் மழலைகளைத் தாலாட்டிக் கொஞ்ச வருகிறது இப்பாடல்...
இப்பாடலினை நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட தோழி கலையரசிக்கு எனது நன்றிகள்... இவருடன் சேர்ந்து நீங்களும் இப்பாடலைக் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவாசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! நன்றி..!
8 comments:
எந்திரன் பாடல்களை விட அட்டகாசமாய் இருக்கு ...
அதுதான் தோழரே பழமைக்கு இருக்கும் பெருமை...
தங்களின் வருகைக்கும்... கருத்துரைக்கும் இனிய நன்றிகள்...
அடிக்கடி கேட்க வாங்க..!
Hi,
Thank you very much. I sing this song for my daughter everyday. This is my daughter's bedtime song.
அட வாங்க கலையரசி... உங்க விருப்பம் நிறைவேற்றியது கண்டு மகிழ்கிறேன்...
தாங்கள் சொல்லியதை நான் நன்கறிவேன் தோழி...
தங்களைப் போன்றோரின் மகிழ்விற்கு, இந்த சிறுவனும் உதவுகிறான் என்றால் அதை விட பெருமகிழ்ச்சி அவனுக்கு கிடையாது...
அடிக்கடி கேட்க வாங்க..!
நல்ல பாடல், நன்றி. எனக்கு "நீ ஒரு மகாராணி" என்ற படத்தில் வரும் "அவள் ஒரு பச்சை குழந்தை பாடும் பறவை" என்ற பாடல் கிடைக்குமா?
க ச குமார்
வாங்க குமார்...
தாங்கள் கேட்ட பாடலை தேடிக் கொடுக்கிறேன்... அதுவரை சற்று காத்திருக்கவும்...
அடிக்கடி கேட்க வாங்க..!
என் 3 வயது கண்மணிக்கு மிகவும் பிடித்த பாடல். தரவிரக்கம் செய்ய உதவியதற்கு மிக்க நன்றி.
அப்படியா... மகிழ்ச்சியும் நன்றியும் உங்களுக்கு உரித்ததாகட்டும் தோழரே...
அடிக்கடி கேட்க வாங்க..!
Post a Comment