ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, 31 May 2010

நூலுமில்லை வாலுமில்லை..! - திரைப்படப்பாடல் (நேயர் விருப்பம்)

'' நூலுமில்லை வாலுமில்லை..? வானில் பட்டம் விடுவேனா..?'' என்ற பாடல் இன்று நேயர் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது...

டி. ராஜேந்தரின் இயக்கத்தில், 1981-ல் வெளிவந்த 'இரயில் பயணங்களில்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் இந்த பாடல்...

சோகப்பாடலாக இடம்பெற்ற இப்பாடலைப் பாடியவர். திரு. டி.எம். சௌந்தரராஜன் அவர்கள். இப்பாடலை இயற்றியதும், இசையமைத்ததும் யார் தெரியுமா..? இப்படத்தின் இயக்குனரான டி. ராஜேந்தரேதான்.

காதல் தோல்வியின் வலியினை வரிகளிலே வடித்திருப்பார் டி. ராஜேந்தர்...

''பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை
காடுதன்னில் பாவி உயிர் வேகும்வரை பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும் தேவி உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே
..''

''வசந்த ஊஞ்சலிலே...,இசைந்த பூங்கொடியே'' என்ற பாடலைக் கேட்ட அன்பு நண்பர் கிறுக்கல் கிறுக்கனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

அவரோடு சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!




நூலுமில்லை வாலுமில்லை..! | Music Codes


--------

கிறுக்கல் கிறுக்கன் said...
நன்றிகள் பல நண்பரே,எனக்காகவே பாடலை வெளியிட்டமைக்கு. மேலும் ஒரு பாடல் தேவை, அது ”வசந்த ஊஞ்சலிலே...,இசைந்த பூங்கொடியே” என துவங்கும் பாடல்




6 comments:

அ.சந்தர் சிங். said...

vanakkam sir,

malairani munthanai sariya sariya

endra padalai dhayavu seithu oli

parappungal ayya.

மோகனன் said...

அன்பு நண்பருக்கு...

தாங்கள் கேட்ட பாடல் குறித்த மேலதிக விபரங்கள் தேவை... என்ன படம் என்றாவாது தெரிந்தால்தான் எடுத்துத் தர இயலும்..!

தங்களின் வருகைக்கு நன்றி.. தகவலைத் தாருங்கள்... பாடலைத் தேடித் தருகிறேன்..!

அ.சந்தர் சிங். said...

vanakkam sir.

antha padal idam petra padam

ore vaanam ore boomi endru

ninaikkiren.irunthal enathu

mugavarikku anuppi vaikkavum.

arjunchandarsingh@gmail.com.

nandri.vanakkam.

மோகனன் said...

அன்பு நண்பருக்கு... நன்றி..!

இந்த தகவல்கள் போதும்...

விரைவில் நீங்கள் கேட்ட பாடலை தேடி எடுத்துத் தருகிறேன் தோழரே..!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

பாடலுக்கு நன்றி.

அடுத்து நேயர் விருப்பத்தில் “வைகைக் கரை காற்றே நில்லு, வஞ்சிதனை பார்த்தால் சொல்லு” என்னும் வரிகள் வரும் பாடல்.

நண்பரே இந்த நேயர் விருப்பம் இன்னும் வரும்

மோகனன் said...

அன்பு நண்பருக்கு...

தாங்கள் விருப்பமே...எனது விருப்பம்... யாமிருக்க பயமேன்..!

அடிக்கடி கேட்க வாங்க..!