ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, 11 May 2010

பசுமை நிறைந்த நினைவுகளே..! - பழைய திரைப்பாடல் (நேயர் விருப்பம்)

'பசுமை நிறைந்த நினைவுகளே..பாடித் திரிந்த பறவைகளே..!' என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா..? கல்லூரிப் படிப்பை முடித்துச் செல்லும் நண்பர்களின் பிரிவை இப்பாடலில் கேட்கலாம்.

1963-ல் வெளிவந்த ரத்தத் திலகம் படத்தில் இடம்பெற்ற இப்பாடலை இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன் ஆவார். இசையமைத்தவர் திரையிசைத் திலகம். திரு. கே.வி. மகாதேவன் அவர்கள். டி.எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா ஆகியோரின் கானக் குரல்களில் இப்பாடலைக் கேட்பது ஒரு தனி சுகம்.

இந்த பாடல் பழைய பாடலாக இருந்தாலும், இன்று கேட்டால் கூட எல்லோருக்கும் அவரவர்களின் கல்லூரிக் காலத்து பழைய நினைவுகளைக் கொண்டுவரும்

''பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளேபழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்'' என்ற பாடலைக் கேட்ட அன்பு நண்பர் கிறுக்கல் கிறுக்கனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

அவரோடு சேர்ந்து நீங்களும் இப்பாடலை கேட்டு மகிழுங்கள். வேண்டுமெனில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..! உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..!


பசுமை நிறைந்த நினைவுகளே..! | Musicians Available


---------------

//Blogger கிறுக்கல் கிறுக்கன் said...
உமது சேவை அருமை தோழரே, உமது கடமை உணர்வு வாழ்க.

என்க்காக ஒரு பாடல் வெளியிடுவீர்களா. எனக்கு அந்த பாடலின் முதல் வரி ஞாபகத்தில் இல்லை. ஒரு கருப்பு வெள்ளை படம் , கல்லூரி பிரிவினை குறித்த பாடல், நடுவே “குரங்குகள் போல மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே” என்ற வரிகள் வரும்
4 May 2010 18:54 //
6 comments:

கிறுக்கல் கிறுக்கன் said...

நன்றிகள் பல நண்பரே,எனக்காகவே பாடலை வெளியிட்டமைக்கு.

மேலும் ஒரு பாடல் தேவை, அது ”வசந்த ஊஞ்சலிலே...,இசைந்த பூங்கொடியே” என துவங்கும் பாடல்

ஆனந்தபாலன் said...

அருமையான பாடல் பகிர்வுகள்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடல்கள் கிடைக்குமா

நண்பரே

Anonymous said...

நண்பரே, உங்கள் அருமையான சேவை தொடரட்டும். எனக்கு யேசுதாஸ் பாடிய "கேட்டது கிடைத்தது கோடிக்கணக்கில், போட்டது முளைத்தது கொத்துக்கொத்தாய் பூத்தது, நான் இந்த நாட்டிலே இன்னும் ராஜாதான்" என்ற பாடல் கிடைக்குமா? திரைப்படம் : "சொல்லாதே யாரும் கேட்டால் "

--- க. ச. குமார்.

மோகனன் said...

அன்பு நண்பர் கிறுக்கல் கிறுக்கன் அவர்களே...

தங்களின் ஆசையை பூர்த்தி செய்ய வாய்ப்பளித்த உமக்கு எனது நன்றிகள்...


தாங்கள் கேட்ட அடுத்த பாடலையும் விரைவில் கொடுக்கிறேன்... காத்திருக்கவும்..!

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

அன்பு நண்பர் ஆனந்தபாலன் அவர்களே...

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடல்கள் கிடைக்குமா என்றிருக்கிறீர்கள்..

உமது அவா விரைவில் நிறைவேறும்... அதுவரை காத்திருக்கவும்..!

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

அன்பு நண்பர் க. ச. குமார் அவர்களே...

தாங்கள் கேட்ட பாடலை விரைவில் கொடுக்கிறேன்... அதுவரை காத்திருக்கவும்..!

அடிக்கடி கேட்க வாங்க..!