
வணக்கம்...
நம்முடைய நாட்டுப்புற, கிராமியப் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உங்களுக்குப் பிடித்த பழைய திரைப்பாடல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் இந்த வலைக்குடில்..
உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்... முடிந்தவரை எடுத்துத் தருகிறேன்... இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
தொடர்புக்கு: moganan@gmail.com
ட்விட்டரில் தொடர
Tuesday, 9 February 2010
புது ரூட்டுலதான்..! - கே.ஜே யேசுதாசின் சூப்பர் ஹிட் பாடல்..!
ஏழிசை மன்னர், கான தேவன் கே.ஜே யேசுதாசின் சூப்பர் ஹிட் பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல் வரிசையில் இப்பாடலும் ஒன்று ..!
சீயான் என்று அழைக்கப்படும் விக்ரம் அறிமுகமான முதல் படம் மீரா, அப்படத்தில் இடம்பிடித்த பாடல் தான் 'புது ரூட்டுலதான்..!' பாடல்
பாடலின் வரிகள் அத்தனையும் முத்துக்கள்தான்... இசைஞானி இளையராஜாவின் இசைத் தாலாட்டில், கான தேவனின் மயக்கும் குரலில் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்...
யேசுதாஸ் மற்றும் அவரது குழுவினரும் இப்பாடலில் தனி ஆவர்த்தனமே செய்திருப்பார்கள்... கேட்டுப் பாருங்க..!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நண்பருக்கு...
மீரா படத்தில் வரும் ‘புது ரோட்டுலதான்’ கேட்க கேட்க திகட்டாத பாடல். அந்த படம் விக்ரமுக்கு முதல் படமல்ல. அவர் அறிமுகமானது ஸ்ரீதரின் படத்தில்னு நினைக்கிறேன். அப்புறம் நான் கேட்ட ’பராசக்தி’ படத்தில் வரும் ‘ஓ ரசிக்கு சீமானே’ பாடல் பதிவிட முடியுமா? - பனசை நடராஜன், சிங்கப்பூர்
அன்பான பனசை நடராஜன் அவர்களுக்கு...
தங்களின் வருகைக்கும், ரசிப்பிற்கும் எனது நன்றிகள்...
தாங்கள் கேட்ட பாடலை விரைவில் உங்களுக்குத் தருகிறேன்... காத்திருக்கவும்... தங்களின் பேராதவிற்கு எனது நன்றிகள்..!
அடிக்கடி கேட்க வாங்க..!
என் காதல் கண்மணி படம் மூலமாக திரையுலகில் சீயான் அறிமுகமானர்.
Post a Comment