ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday 14 December 2010

மனிதா.. மனிதா... இனி உன் விழிகள்...! - திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

மனிதா.. மனிதா... இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்...! என்ற பாடலை இன்று நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1967ல் கீழ வெண்மணியில் தலித் சமுதாயத்திற்கு எதிராக நடந்த கொடூரமான சம்பவத்தை முன் வைத்து இந்திரா பார்த்தசாரதி ‘குருதிப்புனல்’ என்ற ஒரு முக்கியமான நாவலை எழுதினார். இது 1983 -ல் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்ற ஒரு திரைப்படமாக உருவானது.

இப்படத்தை இயக்கியவர் ஸ்ரீதர் ராஜன். இப்படத்திற்கு கதை வசனம் எழுதியவர் யார் தெரியுமா..? கூத்துப்பட்டறையை நடத்தி வரும் நா. முத்துசாமி அவர்கள். தென்னாட்டு ஜேம்ஸ்பாண்ட் என வர்ணிக்கப்பட்ட ஜெய்சங்கர்தான் இப்படத்தின் கதை நாயகன்.

வர்க்கப் போராட்டத்தை முன்னிறுத்திய இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருக்கும். கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு இசைஞானி இளையாராஜா இசையமைப்பில், கான தேவன் கே.ஜே. யேசுதாஸ் உணர்ச்சி பொங்க பாடியிருப்பார்...


இந்த பாடல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்
பாடலின் ஆரம்பத்தில் வயலின் இசை மெல்ல ஆரம்பமாகும், அதுவே அரை நிமிடங்கள் ஓடியதால் அதை நீக்கிவிட்டு இங்கு கொடுத்திருக்கிறேன்...


இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட லெனின்அவர்களுக்கு எனது நன்றிகள்... அவருக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேளுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்...


மனிதா... மனிதா..! | Upload Music

--------
Anonymous Lenin k said...





வைரமுத்து பாடல்” மனிதா மனிதா இனி உண் விழிகள் சிவந்தால்” அனுப்பவும்.

நன்றி
14 December 2010 11:28




8 comments:

Govindaraj. N said...

i have interest to the Tamil song of film "pattana pravesam" Vaan
Nila. Pls send to me for the mobile

thank you.
with regards
Govindaraj.N

karunanidhi Periasamy said...

pls sent THANNER THANNER Film song

மோகனன் said...

அன்பான கோவிந்தராஜன் அவர்களுக்கு...

நீங்கள் கேட்ட பாடலை... இணையத்தில் உள்ள எனது வலைப்பக்கத்தில் வலையேற்றி விடுகிறேன்...

அலைபேசிக்கு அனுப்ப முடியாது... ஆனால் உங்களது அலைபேசியில் இணையதள வசதி இருக்குமென்றால்... அதன் வழியே தளத்திற்குள் வந்து பாடலை கேட்டுக் கொள்ளலாம்...

நன்றி...

மோகனன் said...

அன்பர் பெரியசாமிக்கு...

பாடல்கள் கேட்டு நிறைய வேண்டுகோள்கள் இருக்கின்றன ...

விரைவில் தேடி எடுத்துத் தருகிறேன்... அதுவரை காத்திருக்கவும்...

நன்றி

Sundaram Singaram said...

dear sir
I want to download pattukottai kalyanasundaram thathuva padalgal, especially a song form m.r.radha film in which he acts like a barbor sang that song.kindly guide me to download that song.

மோகனன் said...

அன்புத் தோழருக்கு....

தாங்கள் கேட்ட பாடலை வலையேற்ற வேண்டும் என்ற ஆவல் எனக்கும் இருக்கிறது...

விரைவில் நீங்கள் கேட்ட பாடலை வலையேற்றுகிறேன்... அந்த பாடல் எனக்கும் பிடித்த பாடலாகும்...

நாங்க மன்னருமில்லே... மந்திரியில்லே என தொடங்கும் அந்த பாடல்...

விரைவில் பதிவிலிடுகிறேன்...

காத்திருக்கவும்... நன்றி..!

Anonymous said...

இந்த பாடல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.

மோகனன் said...

அப்படியா தோழரே...

புதிய தகவல் இது... இதையும் பதிவில் சேர்த்து விடலாம்...

வருகைக்கு நன்றி... பெயரைக் குறிப்பிட்டிருக்கலாமே தோழா..?

அடிக்கடி கேட்க வாங்க..!