ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, 31 December 2010

நல்லோர்கள் வாழ்வைக் காக்க..! - புத்தாண்டு சிறப்புப் பாடல்..!


'நல்லோர்கள் வாழ்வைக் காக்க... நமக்காக நம்மைக் காக்க... ஹேப்பி நியு இயர்..!' என்ற புத்தாண்டு பாடலை சிறப்புப் பதிவாக இன்று இடுகின்றேன்

1982 -ம் வருடம் தமிழ்ப்புத்தாண்டு அன்று, சி.வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான சங்கிலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை, தெரிந்திருப்பின் தகவல் தரவும். இசையமைப்பு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, பாடியவர் நமது டி.எம்.சௌந்திரராஜன் அவர்கள்...

இந்த தளத்திற்கு பேராதரவு தரும் எனதருமை இணைய வாசகர்களுக்கு... எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைக் கூறி இப்பாடலைப் பதிவிலிடுகிறேன்... கேட்டு மகிழுங்கள்.. பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


நல்லோர்கள் வாழ்வைக் காக்க..! | Upload Music

இனி இப்பாடலைப் பற்றிய சுவாரசியத் தகவல்கள்


@ 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசனின் இளைய மகனான, 'இளையதிலகம்' பிரபு அறிமுகமான படம்தான் இந்த சங்கிலி. 

@ 'இளைய திலகம்' பிரபுவின் பிறந்த நாள் இன்று (31.12.1956).

@ 1970களிலும் 80களிலும் தென் மாவட்ட மக்களின் மிகப்பெரிய பொழுது போக்காக இருந்தது இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை. அப்துல் ஹமீது போன்ற பல அறிவிப்பாளர்களின் கவர்ச்சியான குரல் வளம் மற்றும் (ஆல் இந்தியா ரேடியோவில் கேட்கமுடியாத) புதிய திரைப்படப் பாடல்களால் தென் மாவட்ட மக்களின் மனம் கவர்ந்தது இலங்கை வானொலி. அதில் ஒவ்வொரு வாரமும் (ஞாயிறு மதியம்) பாடல்கள் ரசிகர்களின் வாக்குகள் ( அஞ்சலட்டையில் அனுப்பலாம்) அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும். 

10 வது பாடலில் தொடங்கி வாக்குகளின் எண்ணிக்கையோடு ஒவ்வோரு பாடலும் அறிவிக்கப்படுவதைக் கேட்க வீடுகளிலும், டீக்கடைகளிலும் பெரும் திரளான மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்களாம். 

இந்தப் போட்டியில் மிக அதிகமான வாரங்கள் ( 50க்கு மேல் இருக்கக்கூடும்) முதலிடத்திலேயே இருந்த பாடல்களில் ஒன்றுதான் இந்த சங்கிலி படத்தில் வரும் " நல்லோர்கள் வாழ்வைக் காக்க"  பாடல்.

*******

@ சிவாஜிகணேசனின் 223வது படம் "சங்கிலி",  பிரபுவிற்கு முதல் படம். இப்படத்தில் பிரபு முக்கிய குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

இந்தப் படத்தை "அருண் சுஜாதா கம்பைன்ஸ்" பட நிறுவனம் தயாரித்தது. வசனத்தை ஏ.எல்.நாராயணன் எழுதினார். இந்தியில் வெளியான "காளிச்சரண்" என்ற படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது இப்படம். பிரபு நடிகரானது பற்றி பிற்காலத்தில் சிவாஜிகணேசன் கூறியதாவது:-

"பிரபு என் மகன். அவனைப்பற்றி நானே கூறுவது அவ்வளவு நன்றாக இருக்காது. எனினும், அவன் பெரிய ஸ்போர்ட்ஸ்மேன். "ஜாவலின் த்ரோ" என்ற விளையாட்டில் சேம்பியன். ஜாவலின் எறிந்தான் என்றால், கிரவுண்டை விட்டு வெளியே தூக்கி எறிந்து விடுவான்.

மிக வேகமாக ஓடுவான். டிராக்கில் ஓடினான் என்றால், ஒரு வெள்ளைக் குதிரை ஸ்லோ மோஷனில் ஓடி வருவது போல இருக்கும். அவனை மிகச் சிறப்பாக படிக்க வைத்து, ஒரு நல்ல போலீஸ் ஆபீசராக உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். என் ஆசை நிறைவேறவில்லை.

எனக்குத் தெரியாமலேயே என் தம்பி சண்முகமும், டைரக்டர் சி.வி.ராஜேந்திரனும் திடீரென்று ஒரு நாள் வந்து, "இந்தப் புதுமுக நடிகனைப் பாருங்கள்" என்று கூறி பிரபுவை என் பக்கத்தில் நிறுத்திவிட்டார்கள். அதுவும் எனக்கு வில்லனாக! அந்தப்படம் தான் "சங்கிலி."

@ முதன் முதலாக மதுரை - அலங்கார் திரையரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த படம் - சங்கிலி. 

@ 14.04.1982 அன்று வெளியாகி 80 நாட்களை கடந்து ஓடிய சங்கிலி இலங்கையில் 100 நாட்கள் ஓடி வெற்றி விழா கண்டது. 
6 comments:

யூர்கன் க்ருகியர் said...

ஹாப்பி நியூ இயர் !!

யூர்கன் க்ருகியர் said...

ஹாப்பி நியூ இயர் !!

மோகனன் said...

நன்றி யூர்கன்..!

மோகனன் said...

தங்களிக்கும் உரித்ததாகட்டும்..!

nellai அண்ணாச்சி said...

happy new year

மோகனன் said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் தோழரே..!