ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, 17 December 2010

வரதப்பா... வரதப்பா... கஞ்சி வருதப்பா...! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)

"வரதப்பா... வரதப்பா...  கஞ்சி வருதப்பா... " என்ற பாடலை இன்று நேயர் விருப்பப் பாடலாக பதிவிலிடுகிறேன்...

1971 ஆண்டு, ஏ.சி. திரிலோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்த பாபு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அருமையான துள்ளலிசைப் பாடல் இது.

வாலிபக் கவிஞர் வாலியின் வரிகளைகளுக்கு... மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க... அதற்கு தன் குரல் மூலம் உயிர் கொடுத்தவர் டி.எம். சௌந்திர்ராஜன் அவர்கள்...

இப்படத்தில் நடிகை விஜயஸ்ரீ ஒரு சாப்பாட்டு கூடைக்காரியாக நடித்திருப்பார். அலுவலகங்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, மிச்சமிருப்பதை கைரிக்ஷா ஸ்டாண்டில் உள்ள ரிக்ஷா தொழிலாளர்களுக்கு கொடுப்பவர். அதனால் ரிக்ஷாக்காரர்கள் அனைவரும், மதிய நேரத்தில் அந்தப்பெண்ணை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பர். அந்த நேரத்தில் அவரைக்கண்டதும்தான் அந்தப்பாடல்... 

இப்பாட்டிற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் குத்தாட்டம் போட்டிருப்பார்... இவர் குத்தாட்டம் ஆடிய ஒரே ஒரு பாடல் இதுதான் என நினைக்கிறேன்... ஆட்டம் போல பாட்டும் கலக்கலாக இருக்கும்...
இபபாடலின் வரிகளில் வாலி சமத்துவத்தை சாதம் வடிவத்தில் கொடுத்திருப்பார்...


'குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது 

அது அனுமந்தராவ்............................
அது அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது 

மேரியம்மா கேரியரில் எறா(ல்) இருக்குது 
அது பத்மநாப ஐயர் வீட்டு குழம்பில் கிடக்குது 
சமையல் எல்லாம் கலக்குது...........
அது சமத்துவத்தை வள(ர்)க்குது .......

சாதி சமய பேதமெல்லாம் சோத்தைக்கண்டா(ல்) பறக்குது' 

நண்பர் மணிகண்டனுக்கு பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்...  உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள்...

--------

Anonymous Mani kandan said...

வணக்கம் தோழர் மோகனன் ,

ஒரு சிறிய உதவி செய்ய வேண்டும். எனக்கு "வருதப்பா.. வருதப்பா ... கஞ்சி வருதப்பா... இந்த கஞ்சி கலயம் கொண்டுகிட்டு வஞ்சி வருதப்பா... என்ற பாடல் வேண்டும். அல்லது அந்த படத்தின் பெயர் வேண்டும். பதில் அனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். நன்றி....


அன்புடன்,

சு. மணிகண்டன்
11 December 2010 10:31
8 comments:

யூர்கன் க்ருகியர் said...

ஹைங் ஆ ..ஹைங்
ஹைங் ஆ ..ஹைங்

கோரஸ் சூப்பர் !!

மோகனன் said...

மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி கேட்க வாங்க..!

palanisamy sellappan said...

Respected sir I want old THANGAPPADUMAI film (stared by sivaji -padmini) all songs
especialy Indru namathullmay pongum puduvellamay (TMS-JIKKI) and kodutthavaney paritthukkondandi &mugatthil mugam parkkalam etc.

Thanks.

Palanisamy Namakkal

மோகனன் said...

காத்திருங்கள் தோழரே...

தேடி எடுத்துத் தருகிறேன்...

நன்றி..!

சு. மணிகண்டன் said...

தோழர் மோகனன் அவர்களுக்கு,

வணக்கம். எனக்காக போதிய நேரம் ஒதுக்கி கண்டுபிடித்து கொடுத்ததற்கு நன்றி..... நன்றி..... நன்றி..... நன்றி..... நன்றி.....

இப்படிக்கு,
சு. மணிகண்டன்

மோகனன் said...

நன்றிகள் தேவையில்லை...

நட்பு ஒன்றே போதும்...

அடிக்கிட கேட்க வாங்க மணிகண்டன்..!

Noorul said...

Hello Sir...

I'm new to ur blog...

I read that AANANDA VIKATAN article and seen this blog...

I'm Having Some Old Songs... I sign-in ur blog... but It is restricted only one upload for one day...

If it is not like that and If i'm wrong, please help me to upload more songs...

Thanks...

மோகனன் said...

வணக்கம் நூருல்...

விகடன் கண்டு எனது தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் பஆடல் கொடுக்கும் தளத்தில் ஒரு நாளைக்கு ஒரு பாடல் வீதம், ஒரு மாதத்தில் 5 பாடல்தான் பதிவேற்ற முடியும்... இலவச சேவை என்பதால் இப்படித்தான் தருகிறார்கள்... இதற்காக நீங்கள் மூன்று அல்லது நான்கு லாகின்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு மாதத்திற்கு 20 பாடல்களை பதிவேற்றம் செய்து விடலாம்...

தாங்கள் வைத்திருக்கும் பாடல்கள் குறித்து, தனி மின்னஞ்சல் அனுப்புங்களேன்... நேயர்கள் கேட்டால் பதிவிட0 வசதியாக இருக்குமல்லவா...

நன்றி நூருல்...

அடிக்கடி கேட்க வாங்க..!