இப்படத்தில் நடிகை விஜயஸ்ரீ ஒரு சாப்பாட்டு கூடைக்காரியாக நடித்திருப்பார். அலுவலகங்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, மிச்சமிருப்பதை கைரிக்ஷா ஸ்டாண்டில் உள்ள ரிக்ஷா தொழிலாளர்களுக்கு கொடுப்பவர். அதனால் ரிக்ஷாக்காரர்கள் அனைவரும், மதிய நேரத்தில் அந்தப்பெண்ணை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பர். அந்த நேரத்தில் அவரைக்கண்டதும்தான் அந்தப்பாடல்...
இப்பாட்டிற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் குத்தாட்டம் போட்டிருப்பார்... இவர் குத்தாட்டம் ஆடிய ஒரே ஒரு பாடல் இதுதான் என நினைக்கிறேன்... ஆட்டம் போல பாட்டும் கலக்கலாக இருக்கும்...
இபபாடலின் வரிகளில் வாலி சமத்துவத்தை சாதம் வடிவத்தில் கொடுத்திருப்பார்...
'குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது
அது அனுமந்தராவ்............................
அது அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது
மேரியம்மா கேரியரில் எறா(ல்) இருக்குது
அது பத்மநாப ஐயர் வீட்டு குழம்பில் கிடக்குது
சமையல் எல்லாம் கலக்குது...........
அது சமத்துவத்தை வள(ர்)க்குது .......
சாதி சமய பேதமெல்லாம் சோத்தைக்கண்டா(ல்) பறக்குது'
நண்பர் மணிகண்டனுக்கு பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்... உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள்...
வணக்கம் தோழர் மோகனன் ,
ஒரு சிறிய உதவி செய்ய வேண்டும். எனக்கு "வருதப்பா.. வருதப்பா ... கஞ்சி வருதப்பா... இந்த கஞ்சி கலயம் கொண்டுகிட்டு வஞ்சி வருதப்பா... என்ற பாடல் வேண்டும். அல்லது அந்த படத்தின் பெயர் வேண்டும். பதில் அனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். நன்றி....
அன்புடன்,
சு. மணிகண்டன்