தஞ்சாவூர் மாவட்டத்தில் 1967ல் கீழ வெண்மணியில் தலித் சமுதாயத்திற்கு எதிராக நடந்த கொடூரமான சம்பவத்தை முன் வைத்து இந்திரா பார்த்தசாரதி ‘குருதிப்புனல்’ என்ற ஒரு முக்கியமான நாவலை எழுதினார். இது 1983 -ல் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்ற ஒரு திரைப்படமாக உருவானது.
இப்படத்தை இயக்கியவர் ஸ்ரீதர் ராஜன். இப்படத்திற்கு கதை வசனம் எழுதியவர் யார் தெரியுமா..? கூத்துப்பட்டறையை நடத்தி வரும் நா. முத்துசாமி அவர்கள். தென்னாட்டு ஜேம்ஸ்பாண்ட் என வர்ணிக்கப்பட்ட ஜெய்சங்கர்தான் இப்படத்தின் கதை நாயகன்.
வர்க்கப் போராட்டத்தை முன்னிறுத்திய இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருக்கும். கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு இசைஞானி இளையாராஜா இசையமைப்பில், கான தேவன் கே.ஜே. யேசுதாஸ் உணர்ச்சி பொங்க பாடியிருப்பார்...
இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட லெனின்அவர்களுக்கு எனது நன்றிகள்... அவருக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேளுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்...