
வணக்கம்...
நம்முடைய நாட்டுப்புற, கிராமியப் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உங்களுக்குப் பிடித்த பழைய திரைப்பாடல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் இந்த வலைக்குடில்..
உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்... முடிந்தவரை எடுத்துத் தருகிறேன்... இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
தொடர்புக்கு: moganan@gmail.com
ட்விட்டரில் தொடர
Tuesday, 1 December 2009
கொல்லையிலே கம்பெடுத்து..! - கிராமியப் பாடல்
'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமியும் அவரது மனைவி திருமதி அனிதா குப்புசாமி அவர்களும் சேர்ந்து பாடும் எசப்பாட்டுதான் இந்த 'கொல்லையிலே கம்பெடுத்து' பாடல்... தேமதுரத் தமிழின் தேனினும் இனிய குரலில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் எசப்பாட்டு பாடல்...
கணவனிடம் வயல் காட்டில் பணி செய்யலாம் வாங்க என மனைவி அழைக்க... கணவனோ...சில காரணங்களை சொல்லி வரமுடியாது என்கிறான்... ஏட்டிக்குப் போட்டியாக பாடலில் இருவரும் விளையாடும் அழகு... அசத்தல் போங்க...
ஆரம்பத்தில் பழைய சினிமாவில் வரும் இசையைப் போல் வரும்..பிறகு துள்ளலிசையாக மாறும்... கேட்டுப் பாருங்க... கருத்தைச் சொல்லுங்க...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
i like puspavanamkupusami songs. i want all songs from p.k.sami can u sent the website to download his all songs.My email id:akilmd@gmail.com
very nice song
Post a Comment