'வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி...' என்ற காலத்தால் அழிக்க முடியா தத்துவப் பாடலை இன்றைய நேயர் விருப்பப் பாடலாகப் பதிவிலிடுகிறேன்.
ஜூலை 14, 1962 -ல் வெளியான பாதகாணிக்கை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலிது. இப்படத்தினை இயக்கியவர் கே. சங்கர். மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில், கவியரசு கண்ணதாசனின் அமர வரிகளில், டி.எம்.எஸ்ஸின் உணர்ச்சிய மயமான குரலில் ஒலிக்கிறது இப்பாடல்.
இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசனின் அண்ணனாக வரும் அசோகன் அவர்கள் ஒரு கால் இல்லாமல், இரு கை கட்டைகளை ஊன்றிக் கொண்டு, தற்கொலை செய்து கொள்ளப் போகும் போது பாடும் பாடலாக இப்பாடல் அமைந்திருக்கும்... இப்பாடலின் வரிகளை நான் சொல்லத்தான் வேண்டுமா என்ன..?
எனக்குப் பிடித்த இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட நண்பர் டான் சமுசா அவர்களுக்கு எனது நன்றி. எங்களுக்குப் பிடித்த இந்த தத்துவப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.

10 comments:
தங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_4203.html
அந்தளவிற்கு நான் பெரியவனல்ல தோழரே...
இருப்பினும் எனை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி தோழரே..!
அடிக்கடி கேட்க வாங்க..!
பெரியவர் சிறியவர் என்ன நண்பரே!
நாமெல்லாம் பதிவர்கள் அவ்வளவுதான்!:-)
பாடல்களை தொகுத்து அளிக்கும் உங்கள் தளம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதுவும் மற்றவர் விருப்பத்திற்கேற்ப பாடல்களை கஷ்டப்பட்டு தேடி அளிக்கிறீர்கள் மிக்க நன்றி! தங்கள் பணி பலரை சென்று சேர வேண்டும் என்றே வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தினேன்.
தங்கள் பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெறட்டும்.!
பதிவர்கள் என்றாலும் இந்த பரந்த பதிவுலகில் அடியவன் ஒரு சிறுவனே என்கிறேன்...
தங்களின் வாழ்த்திற்கு எனது நன்றிகள்..!
காலத்தால் அழியா நல்ல பல பாடல்களை கொடுத்ததற்கு நன்றி. 1960- இல் வெளி வந்த "கைராசி" என்ற படத்தில் வரும் "அன்புள்ள அத்தான் வணக்கம். உங்கள் ஆயிழை கொண்டால் மயக்கம்" என்ற பாடலை தேடிக்கொண்டிருக்கிறேன். முடிந்தால் கொடுத்து உதவவும்.
க. ச. குமார்
வாங்க தோழா...
தாங்கள் அளித்த நன்றிக்கு என் பதில் நன்றி...
காத்திருங்கள் தேடி எடுத்துத் தருகிறேன்..!
எவ்வளவு அர்த்தம் பொதிந்த வாக்கியங்கள் ??!!
ஒவ்வொரு வாகியதிற்கும் ஒவ்வொரு பீலிங் வருதே...
ச்சே என்னடா வாழ்கை இது நாராயணா? !!!!!
வாங்க யூர்கன்...
அதுதான் பட்டினத்தார்... அவர் வழி வந்தவர்தான் நம் கவிஞர் கண்ணதாசனும்... பின் அர்த்தமில்லாமல் இருக்குமா..?
வாழ்க்கையை பிறருக்காக வாழ்ந்து பழகு... வேறென்ன நான் சொல்ல யூர்கன்...
அடிக்கடி கேட்க வாங்க..!
Post a Comment