ஜூலை 14, 1962 -ல் வெளியான பாதகாணிக்கை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலிது. இப்படத்தினை இயக்கியவர் கே. சங்கர். மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில், கவியரசு கண்ணதாசனின் அமர வரிகளில், டி.எம்.எஸ்ஸின் உணர்ச்சிய மயமான குரலில் ஒலிக்கிறது இப்பாடல்.
இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசனின் அண்ணனாக வரும் அசோகன் அவர்கள் ஒரு கால் இல்லாமல், இரு கை கட்டைகளை ஊன்றிக் கொண்டு, தற்கொலை செய்து கொள்ளப் போகும் போது பாடும் பாடலாக இப்பாடல் அமைந்திருக்கும்... இப்பாடலின் வரிகளை நான் சொல்லத்தான் வேண்டுமா என்ன..?
எனக்குப் பிடித்த இப்பாடலை நேயர் விருப்பப் பாடலாக கேட்ட நண்பர் டான் சமுசா அவர்களுக்கு எனது நன்றி. எங்களுக்குப் பிடித்த இந்த தத்துவப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்.
வீடு வரை உறவு...! | Online Karaoke
---------
Don Samusa said...
எனக்கு பிடித்த பாடல் ஒன்று, அதன் வரிகள் எனக்கு நினைவில்லை...
அதில் அசோகன் அவர்கள் ஊனமுற்ற வேடத்தில் கடலை நோக்கி
அந்த பாடலை எப்படியாவது அனுப்புங்கள்...