கவிஞர் கண்ணதாசனின் காதல் கவித்திறமைக்கு இந்த ஒரு பாடல் அவரின் மணிமகுடத்தில்... மாணிக்கக் கல் போன்றதாகும்...
'காலங்களில் அவள் வசந்தம்... கலைகளிலே அவள் ஓவியம்...' என தனது காதலியை ஒவ்வொன்றிலும் எது தலையாயமானதும், சிறப்பானதும் எது இருக்கிறதோ... அதோடு ஒப்பிட்டுக் கூறுவார்... இப்பாடல் அன்று, இன்று மட்டுமல்ல.. என்றும் மறையாக் காதல் காவியம் ஆகும்...
பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு மிகவும் இனிமையாக இசையமைத்திருப்பது எம்.எஸ்.விஸ்வநாதன்& ராமமூர்த்தி அவர்கள். குரல் வழியே இவ்வரிகளுக்கு உயிரூட்டியவர் திரு. பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள்...
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் வரிசையில் இப்பாடலும் ஒன்று... என் காதல் தேவதைக்காகவும் இப்பாடலை இங்கே பதிவிலிடுகிறேன்.... கேட்டு மகிழுங்கள்... தேவையெனில் தரவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
என்னவள் என்னருகே இல்லாத நிலையில்... இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம், என்னவளின் நினைவை மீட்கும் இப்பாடல்...
காலங்களில் அவள் வசந்தம்..! | Upload Music
இப்பாடலின் திரை வடிவம் இதோ..!
4 comments:
இப்போது வரும் தரமற்ற படல்களுக்கிடையில் இதையெல்லாம் கேட்கும் வாய்ப்பே குறைந்து விட்டது. நல்ல பாடல்.
http://www.virutcham.com
மிக்க நன்றி தோழரே...
இது போன்ற வருத்தங்களை நம்மாலானவரை போக்குவோம்...
அடிக்கடி கேட்க வாங்க..!
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. பாடல் வரிகள் மிக அருமை. தேடி எடுத்தாலும் கிட்டாத மாணிக்கக் கல்..
உமா
மிக்க நன்றி தோழி...
அடிக்கடி கேட்க வாங்க..!
Post a Comment