ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, 6 January 2011

பாமாலை அவர் படிக்க..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)


பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க என்ற பாடல் இன்றைய நேயர் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது.

1970-ல் வெளியான கண்மலர் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது... இத்திரைப்படத்தை பட்டு என்பவர் இயக்கியுள்ளார். திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் வெளிவந்த பாடல் இது...

இப்படத்தில் திரைக்கவித் திலகம் மருதகாசி, கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, தஞ்சை வாணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இப்பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளார். (வானதி பதிப்பகம் வெளியிட்ட கவியரசரின் திரைப்பாடல்கள் வரிசையில் மூன்றாவது தொகுதியில் (1997-ம் ஆண்டு பதிப்பு) பக்கம் 263-ல் 284-ம் பாடலாகக் காணலாம். - ஆதார உதவி: பின்னூட்டத்தில் பதிலளித்த வ. வடிவேலனுக்கு எனது நன்றிகள்)

இந்திய இசைத்துறையில் சகாப்தம் படைத்த, இசைமேதை திரு. பாலமுரளி கிருஷ்ணாவும், பி. சுசீலா இணைந்து பாடிய பாடல் இது...

'அம்பலத்து நடராஜா உன் பலத்தை காட்டுதற்கு
என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனைய்யா
உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனைய்யா..!' என ஆரம்பிக்கும் இப்பாடல் நடராஜரைப் பற்றி பாடப்படுவது அமைந்திருக்கும்... இந்த முதல் நான்கு வரி (தொகையறா )யை இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடியிருப்பார்...

அடுத்து வரம் சரணம், பல்லவிகளை பி.சுசீலா பாடுவார்... இப்பாடலைக் நேயர் விருப்பப் பாடலாகக் கேட்ட, வயதில் பெரியவரான திரு. வி. ஆர். சுப்ரமணியன் அவர்களுக்கு எனது நன்றிகள்... (இவர் சொல்லிய பிறகுதான்,  இப்பாடலை முதன் முதலாக நானே கேட்டேன்). அவருக்குப் பிடித்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


----------

Anonymous Subramanian V R said...

Dear Moganan.


PAZHAMAI INIMAI

Congratulations for your noble venture.

I am a senior citizen and i am in search of a melodious song
beginning lines Pamalai Avar Padikka Poo Malai Nan Thodukka
Vazhnal nadandaya Nataraja. Can you advise me the name of the film
this song appears and whether you will be able to in your list
of old songs so that i can enjoy it.

apologies for writing in english, as senoir citizen i am not
well versed in computer knowledge

thank you from V R Subramanian
23 December 2010 15:35
--------------------------------
இப்படம் பற்றிய சில சுவாரசியத் தகவல்கள்

@ பழம்பெரும் நகைச்சுவை நடிகரான வி.கே.ராமசாமியும், அவரது சகோதரரான வி.கே. முத்துராமலிங்கம் ஆகியோரின் தயாரிப்பில் இப்படம் வெளிவந்தது.

@நடிகர் வி.கே.ராமசாமி 15 படங்களைத் தயாரித்துள்ளார்.

@இப்படத்தில் ஜெமினி கணேசனும், சரோஜா தேவியும் இணைந்து நடித்துள்ளனர்.

@இப்படத்தில் ஓதுவாராக பழம்பெரும் நடிகர் திரு. நாகைய்யா நடித்திருப்பார். இவரது மகளாக சரோஜா தேவி நடித்திருப்பார். இவர்தான் இப்பாடலைப் பாடுவதாக காட்சி அமைக்கப்பட்டது. ஓதுவாராக பாடுவதாக நடிக்கும் இவருக்கு யாருடைய குரலில் பாட வைக்கலாம் என்று சந்தேகம் வந்ததுள்ளது திரையிசைத் திலகம். கே.வி. மகாதேவன் அவர்களுக்கு... நிறைய பாடகர்களை யோசித்துப் பார்த்தாலும், நடராஜன் சார்ந்த தொகையறா என்பதால் இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா இப்பாடலைப் பாடினால் நன்றாக இருக்கும் என முடிவு செய்தார். பிறகு அவரையே இப்பாடலைப் பாட வைத்தார். சரோஜா தேவிக்கு பி.சுசீலா குரல் கொடுத்தார்.

@மெல்லிசை மன்னரான எம்.எஸ். விஸ்வநாதனின் மானசீக இசை குருக்களில் இசைமேதை. பால முரளி கிருஷ்ணாவும் ஒருவர்.

@இப்படத்தின் இயக்க மேற்பார்வை கிருஷ்ணன் - பஞ்சு.
22 comments:

கக்கு - மாணிக்கம் said...

// இசைமேதை திரு. பாலமுரளி கிருஷ்ணாவும், பி. சுசீலா இணைந்து பாடிய பாடல் இது...//

பால முரளியும், எஸ். ஜானகியும் சேர்ந்து பாடியது.

கே.ரவிஷங்கர் said...

நான் பள்ளி படிக்கும்போது பார்த்தபடம்.
பாடலும் ரொம்ப பிடிக்கும்.


பகிர்விற்கு நன்றி.

V R SUBRAMANIAN said...

dear Moganan

God krishna bless you.

Million thanks for your efforts to fulfil my 2 decades old wishes
to hear this beatiful song. Unfortunately i am unable to
tell you who penned this song.

What you is social service as one reaches God thru music.
Continue your good work.

yours sincerely

V R SUBRAMANIAN

மோகனன் said...

அனபு நண்பர் கக்கு மாணிக்கம் அவர்களே..

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...

இப்பாடலைப் பாடியது பி.சுசீலாதான்...

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

அன்பர் ரவிஷங்கர்...

தங்களின் பள்ளிப்பருவ ஞாகங்களைப் மீட்டெடுத்தது எனில் மகிழ்ச்சியான சம்பவமே...

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

உயர் திரு சுப்ரமணியன் அவர்களுக்கு...

உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசி ஒன்று போதும்... கடவுள் என்னை ஆசிர்வதிக்கத் தேவை இல்லை..!

நான் ஒன்றும் பெரிதாகச் செய்து விடவில்லை ஐயா... என்னாலான சிறு உதவி மட்டுமே...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி... அடிக்கடி கேட்க வாங்க..!

தமிழன்பன் said...

திரு மோகனன் அவர்களுக்கு

பாதை தெரியுது பார் என்னும் திரைப்படத்திற்காக
பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ்.ஜானகி இணைந்து பாடிய
தென்னங் கீற்று என்று தொடங்கும் பாடலை
தரவேற்றம் செய்ய முடியுமா???
நன்றி

அன்புடன் அருணா said...

எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்....எத்தனை வருடங்களுக்குப் பிறகு கேட்கக் கிடைத்திருக்கிறது.நன்றி!

மோகனன் said...

வாங்க தமிழன்பன்...

விரைவில் நிறைவேற்ற இயலாமல் போயினும் (நிறைய நேயர் விருப்பங்கள் உள்ளதால்) கண்டீப்பாக நிறைவேற்றுகிறேன்... அதுவரை காத்திருக்கவும்... நன்றி..!

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

அன்பு அருணா அவர்களே...

இப்பாடலை கேட்ட சுப்பிரமணியனாருக்குதான் நீங்கள் நன்றி நவில வேண்டும்...

அடிக்கடி கேட்க வாங்க..!

Palanivelu Krishnasamy said...

Mr. Moganan,

I was able to visit your blogspot because of Ananda Vikatan. I find your blogspot interesting.
I am ar ardent fan of old songs. Recently, while travelling by a bus, I happened to hear a song sung by SP Balasubramaniam. That impressed me very much. I tried in the net to find and get it downloaded but in vain. Will you please get it for me?
The song is AASAIYE ALAI POLE NAMELLAM ADHAN MELE (Resung of the old popular song)
Thank you.

K. Palanivelu

மோகனன் said...

வாங்க பழனிவேல்...

தாங்கள் கேட்ட பாடலை கண்டீப்பாக பதிவிலிடுகிறேன்... அதுவரை காத்திருக்கவும்... நன்றி..!

அடிக்கடி கேட்க வாங்க..!

வ.வடிவேலன் said...

அன்பு நண்பருக்கு,

மேற்கண்ட பாடல் எனக்கும் பிடித்த பாடல்தான்.பதிவிட்டதற்கு மிக்க நன்றி. பாடலை இயற்றியவர் கவியரசர் கண்ணதாசனேதான்.வானதி பதிப்பகம் வெளியிட்ட கவியரசரின் திரைப்பாடல்கள் வரிசையில் மூன்றாவது தொகுதியில் (1997-ம் ஆண்டு பதிப்பு) பக்கம் 263-ல் 284-ம் பாடலாகக் காணலாம். ஜானகி சேர்ந்து பாடிய பாடல்.
சுசீலா அன்று!.

நூல்வேலி படத்தில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய "மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே" என்ற பாடலைப் பதிவிட முடியுமா?

நன்றியுடன்,

அன்பன்

வ.வடிவேலன்
21.01.2011

மோகனன் said...

அன்பு வடிவேலருக்கு...

அப்பாடலை சுசீலா பாடியதாகத்தான் அறிகிறேன்... ஜானகிதான் பாடினார் என்பதற்கு ஆதாரம் தாருங்கள்...

இப்பாடலை கண்ணதாசன்தான் இயற்றினார் என்ற தகவலை தந்து உதவியமைக்கு மிக்க நன்றி...

நீங்கள் கேட்ட பாடலை தேடி எடுத்துத் தர முயல்கிறேன்..

அடிக்கடி கேட்க வாங்க..!

sathiyabal said...

இந்தப் பாடலைக் கேட்டவுடன்,அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே!நண்பனே!! என்று பாடத் தோன்றுகின்றது.என் போன்ற முதிய நண்பர்கட்க்கு இந்தத் தளம் ஓர் இனிய வரப்பிரசாதம்.நன்றி
இர. சத்தியபால்,மதுரை

Anonymous said...

இந்த பாடலை பாடியவர் ஜானகி அவர்கள்....

Anonymous said...

hey MUndangala/ gnasuniyangala,

It Is S.JANAKI who with Bala MuraliKrishna and not P.Susheela.

you can feel the crying voice which only S.Janaki can do

Anonymous said...

திரு மோகனக்ருஷ்ணன் அவர்களே, பழைய பாடல்கள் எனக்கு மிக மிக பிடிக்கும், மிக நீண்ட நாட்களாக இந்த பாடலை (பாமாலை அவர் படிக்க....)கேட்க வேண்டுமென்ற ஒரு தாகம் இன்று ஓரளவுக்கு தணிந்தது. என்றோ ஒரு நாள் வானொலியில் இரவு நேர அரை தூக்கத்தில் கேட்ட பாடல் இது.மிக்க நன்றி அய்யா .....ஸ்ரீதரன்

மோகனன் said...

சத்தியபால் அவர்களுக்கு எனது நன்றிகள் பல...

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்... அவ்வளவே ஐயா...

மோகனன் said...

அன்பு அனானிக்கு...

ஆதாரம் கேட்கிறேனே... சுசீலா பாடவில்லை ஜானகிதான் என்பதற்கு ஆதாரம் கேட்கிறேன்...

நன்றி

மோகனன் said...

அன்பு அனானிக்கு...


நான் முண்டமாகவே இருக்கிறேன். மறுக்கவில்லை. இப்பாடலுக்கு
ஆதாரம் கேட்கிறேனே... சுசீலா பாடவில்லை ஜானகிதான் என்பதற்கு ஆதாரம் கேட்கிறேன்...

நன்றி

மோகனன் said...

அன்பு ஸ்ரீதரன் அவர்களே...

நான் மோகன கிருஷ்ணன் இல்லை... மோகனன் மட்டுமே...

தங்களின் ஆசை தீர்ந்தது கண்டு மகிழ்கிறேன்...