ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, 13 January 2011

நாடு ரொம்ப கெட்டுப் போச்சு..! - பரவை முனியம்மாவின் கிராமியப் பாடல்


பரவை முனியம்மா அவர்களின் கிராமியப் பாடலை, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் சிறப்புப் பாடலாக இப்பாடலைப் பதிவிலிடுகிறேன்

''நாடு ரொம்ப கெட்டுப் போச்சு...
நாகரீகம் முத்திப் போச்சு..!''
'கோலம் போட்ட பெண்களெல்லாம் கவர்ச்சி காட்டுது..!
கிராப் வைத்துக் கொள்ளுது' என்று பெண்களையும்..
சின்னஞ்சிறு வயதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் இளம் பிராயத்தினரையும், சினிமா உலகைப் பார்த்து, ஆண், பெண் தடம் மாறுவது... என அனைத்து சீர்கேடுகளையும் ஒரு பிடிபிடிக்கிறார் பரவை முனியம்மா..!

இப்பாடலில் தவில், நாதஸ்வரம், நையாண்டி மேளம் ஏன கிராமிய இசை பின்னியெடுக்கிறது. இப்பாடலின் பின்னணி இசையை பருத்தி வீரன் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் (திருநங்கைகள் உடன் பாடும் பாடலில் வரும் நையாண்டி மேளம் மற்றும் நாதஸ்வர இசை)

பரவை முனியம்மா வெண்கலக் குரலில் இப்பாடலைக் கேட்டு மகிழுங்கள். பிடித்திருப்பின் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!


நாடு ரொம்ப கெட்டுப் போச்சு..! | Upload Music

இனிய தமிழ்ப்பாடல்கள் வலைத் தளத்தின் அன்பு நேயர்களுக்கு அடியவனின்
இனிய தமிழர் திருநாள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!
7 comments:

தமிழன்பன் said...

உங்களுக்கும் எனது மனம்கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

மோகனன் said...

வருகைக்கும், வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி தோழரே..!

அடிக்கடி கேட்க வாங்க..!

Manickam Nadeson said...

பாடல் சூப்பர் சார்..,

பறவ முனியம்மாவா கொக்கா...

மோகனன் said...

மிக்க நன்றி நடேசன் அவர்களே...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!

Thaufeeq Ali said...

Vanakkam,

Please post song from the movie "Ethirneechal","Avalku Enna",

Thanking you ,

Thaufeeq
kuwait.

மோகனன் said...

வாங்க தவ்பீக்...

நிறைய வேண்டுகோள்கள் உள்ளன...

அவற்றை முடித்து விட்டு, தங்களது வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன்...

அதுவரை காத்திருக்கவும்...

நன்றி..!

ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/05/blog-post_10.html?showComment=1399677140300#c8026519943068079763

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-