பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க என்ற பாடல் இன்றைய நேயர் விருப்பப் பாடலாக இடம்பெறுகிறது.
1970-ல் வெளியான கண்மலர் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது... இத்திரைப்படத்தை பட்டு என்பவர் இயக்கியுள்ளார். திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் வெளிவந்த பாடல் இது...
இப்படத்தில் திரைக்கவித் திலகம் மருதகாசி, கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, தஞ்சை வாணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
இப்பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளார். (வானதி பதிப்பகம் வெளியிட்ட கவியரசரின் திரைப்பாடல்கள் வரிசையில் மூன்றாவது தொகுதியில் (1997-ம் ஆண்டு பதிப்பு) பக்கம் 263-ல் 284-ம் பாடலாகக் காணலாம். - ஆதார உதவி: பின்னூட்டத்தில் பதிலளித்த வ. வடிவேலனுக்கு எனது நன்றிகள்)
இந்திய இசைத்துறையில் சகாப்தம் படைத்த, இசைமேதை திரு. பாலமுரளி கிருஷ்ணாவும், பி. சுசீலா இணைந்து பாடிய பாடல் இது...
என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனைய்யா
உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனைய்யா..!' என ஆரம்பிக்கும் இப்பாடல் நடராஜரைப் பற்றி பாடப்படுவது அமைந்திருக்கும்... இந்த முதல் நான்கு வரி (தொகையறா )யை இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடியிருப்பார்...
----------
Subramanian V R said...
Dear Moganan.
PAZHAMAI INIMAI
Congratulations for your noble venture.
I am a senior citizen and i am in search of a melodious song
beginning lines Pamalai Avar Padikka Poo Malai Nan Thodukka
Vazhnal nadandaya Nataraja. Can you advise me the name of the film
this song appears and whether you will be able to in your list
of old songs so that i can enjoy it.
apologies for writing in english, as senoir citizen i am not
well versed in computer knowledge
thank you from V R Subramanian
@ பழம்பெரும் நகைச்சுவை நடிகரான வி.கே.ராமசாமியும், அவரது சகோதரரான வி.கே. முத்துராமலிங்கம் ஆகியோரின் தயாரிப்பில் இப்படம் வெளிவந்தது.
@நடிகர் வி.கே.ராமசாமி 15 படங்களைத் தயாரித்துள்ளார்.
@இப்படத்தில் ஜெமினி கணேசனும், சரோஜா தேவியும் இணைந்து நடித்துள்ளனர்.
@இப்படத்தில் ஓதுவாராக பழம்பெரும் நடிகர் திரு. நாகைய்யா நடித்திருப்பார். இவரது மகளாக சரோஜா தேவி நடித்திருப்பார். இவர்தான் இப்பாடலைப் பாடுவதாக காட்சி அமைக்கப்பட்டது. ஓதுவாராக பாடுவதாக நடிக்கும் இவருக்கு யாருடைய குரலில் பாட வைக்கலாம் என்று சந்தேகம் வந்ததுள்ளது திரையிசைத் திலகம். கே.வி. மகாதேவன் அவர்களுக்கு... நிறைய பாடகர்களை யோசித்துப் பார்த்தாலும், நடராஜன் சார்ந்த தொகையறா என்பதால் இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா இப்பாடலைப் பாடினால் நன்றாக இருக்கும் என முடிவு செய்தார். பிறகு அவரையே இப்பாடலைப் பாட வைத்தார். சரோஜா தேவிக்கு பி.சுசீலா குரல் கொடுத்தார்.
@மெல்லிசை மன்னரான எம்.எஸ். விஸ்வநாதனின் மானசீக இசை குருக்களில் இசைமேதை. பால முரளி கிருஷ்ணாவும் ஒருவர்.
@இப்படத்தின் இயக்க மேற்பார்வை கிருஷ்ணன் - பஞ்சு.