
வணக்கம்...
நம்முடைய நாட்டுப்புற, கிராமியப் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உங்களுக்குப் பிடித்த பழைய திரைப்பாடல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் இந்த வலைக்குடில்..
உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்... முடிந்தவரை எடுத்துத் தருகிறேன்... இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
தொடர்புக்கு: moganan@gmail.com
ட்விட்டரில் தொடர
Saturday, 27 November 2010
சமரசம் உலாவும் இடமே..! - பழைய திரைப்படப் பாடல்
''சமரசம் உலாவும் இடமே... நம் வாழ்வில் காணா... சமரசம் உலாவும் இடமே...'' என்ற பாடலை என் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன்.
28.09.1956-அன்று, கல்பனா பிக்சர்ஸ் தயாரிப்பில், திரு. ஆர்.ஆர், சந்திரன் இயக்கதில் வெளியான திரைப்படம் ரம்பையின் காதல்.
இப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் அமரகாவியப் பாடலாக இன்று மட்டுமல்ல... என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும். எல்லோருடைய மரணத்திற்குப் பிறகு இருக்கும், வசிக்கும், உறங்கும் இடம் எதுவெனில் அது சுடுகாடுதான்.
இங்கு ஆண்டி ஆனாலும் சரி, அரசன் ஆனாலும் சரி... மேலோர் ஆனாலும் சரி, கீழோர் ஆனாலும் சரி... எல்லோரும் இங்கு சமம் என்பதை அமர கவிஞர் திரு. மருதகாசி தனது மந்திர வரிகளில் கோடிட்டுக் காட்டியிருப்பார்...
இந்த வரிகளுக்கு இசையரசர் டி.ஆர். பாப்பா இசையமைத்திருக்க... வெண்கலக் குரலோன் திரு சீர்காழி கோவிந்தராஜன் குரல் கொடுத்திருப்பார்... கேட்டுப் பாருங்கள் இப்பாடலை... நாம் பிறந்து என்ன சாதித்திருக்கிறோம்... இறப்பின் பின் எங்கு சாந்தமாவோம் என்று இப்பாடல் நன்கு உணர்த்தும்...
உங்களுக்குப் பிடித்திருப்பின் இப்பாடலை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்கள் இயன்றவரை தேடி எடுத்துத் தருகிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பகிர்வுக்கு நன்றி
தங்களின் பதிலுரைக்கு எனது நன்றிகள் தோழா...
அடிக்கடி கேட்க வாங்க..!
Post a Comment