ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, 12 January 2010

மணப்பாறை மாடு கட்டி.. மாயவரம் ஏரு பூட்டி..! - பழைய திரைப்படப் பாடல்


'திரைக்கவித் திலகம்' என அழைக்கப்பட்ட கவிஞர் மருதகாசியின் வரிகளில் மின்னிய அருமையான விவசாயம் சார்ந்த சினிமாப் பாடல்தான்... இந்த
''மணப்பாறை மாடு கட்டி.. மாயவரம் ஏரு பூட்டி.. வயக்காட்டை உழுது போடு செல்லக்கண்ணு!'' பாடல்

ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து “லட்சுமி பிக்சர்ஸ்” என்ற படக்கம்பெனியை தொடங்கி, “மக்களைப் பெற்ற மகராசி” படத்தைத் தயாரித்தனர். இதில் சிவாஜிகணேசனும், பானுமதியும் இணைந்து நடித்தனர்.

இந்தப்படத்தில் இடம் பெற்ற பெரும்பாலான பாடல்களை மருதகாசி எழுதினார். குறிப்பாக, “மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏரு பூட்டி” என்ற பாட்டு, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது.

1957-ல் வெளியான இப்படத்திற்கு இசையமைத்தவர், திரை இசைத் திலகம் கே.வி. 
மகா தேவன் அவர்கள். பாடியிருப்பவர் நமது டி.எம் சௌந்திர ராஜன்தான்.
இப்பாடலில் வரும் வரிகள் அனைத்தும் வைரம்... உதாரணத்திற்கு

''ஆத்தூரு கிச்சடி சம்பா...
பாத்து வாங்கி வெதை வெதச்சி'
' நான் பிறந்த ஊர் இது என்பதில் எனக்கு ஒரு தனி சந்தோசம் 

"சேத்த பணத்தை சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக்கண்ணு" என்பார் மருதகாசி.
             


மணப்பாறை மாடு கட்டி..! | Upload Music

கேட்டுப் பாருங்க.. உங்க கருத்தைச் சொல்லுங்க..! 


(இப்பாடலை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியதாக தவறுதலாக இப்பதிவில் இட்டிருந்தேன்... இன்றுதான் அதன் உண்மை நிலை 30.11.2010 தெரிந்தது... மாற்றி விட்டேன்... தவறுக்கு மன்னிக்க வேண்டுகிறேன் தோழர்களே...)


இப்பாடலின் திரை வடிவம் இதோ..!






8 comments:

Elangovan singapore said...

ithu maruthakaasi padal

ராஷா said...

நன்பரே பட்டுக்கோட்டையார பற்றி நீங்க சொன்னது 100 சதவீதம் உண்மை, சமுதாய கருத்துக்கள எளிமையான தமிழ்ல சொன்ன மக்கள் கவிஞர், ஆனா இந்த பாடல் மருதகாசி

Venkat.M said...

give downloaded link bass

Venkat.M said...

u r song collections r nice, if u give a download link means nice

மோகனன் said...

அன்பான ருத்ராபதி அவர்களுக்கு

தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் பணிவான நன்றிகள்...

இப்பாடலை ழுதியது பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்தான்..

இல்லை என்று ஆதாரத்தோடு நிரூபிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்..

மோகனன் said...

அன்பான ராஷா அவர்களுக்கு...

தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் என் பணிவான நன்றிகள்...

இப்பாடலை எழுதியது பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்தான்..

இல்லை என்று ஆதாரத்தோடு நிரூபிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்..

மோகனன் said...

அன்பின் தோழர் வெங்கட் அவர்களுக்கு...

வணக்கம்... தங்களின் வருகைக்கும், கருத்திற்கும்... என் அன்பு கலந்த நன்றிகள்...

அந்த ஒலி இணைப்புப் பலகையில் கீழ்நோக்கிய அம்புக் குறி ஒன்று இருக்கும்... அதுதான் பதிவிறக்கம் செய்வதற்க்கான இணைப்பு ஆகும்...

பதிவிறக்கம் செய்து.. கேட்டு மகிழுங்கள்...

மோகனன் said...

திரு ராஷா அவர்களே...

தாங்கள் சொல்லியது போல் இப்பாடலை மருதகாசிதான் எழுதியுள்ளார் என்று இன்றுதான் அறிந்து கொண்டேன்...

தவறை திருத்திக் கொண்டேன்... மிகத் தாமதமாக திருத்தியமைக்கு தங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்..

அடிக்கடி கேட்க வாங்க...