
வணக்கம்...
நம்முடைய நாட்டுப்புற, கிராமியப் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உங்களுக்குப் பிடித்த பழைய திரைப்பாடல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் இந்த வலைக்குடில்..
உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்... முடிந்தவரை எடுத்துத் தருகிறேன்... இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
தொடர்புக்கு: moganan@gmail.com
ட்விட்டரில் தொடர
Tuesday, 16 February 2010
தமிழா... நீ பேசுவது தமிழா..! - தமிழிசைப் பாடல்!
தமிழா... நீ பேசுவது தமிழா..! என்ற பாடல்தான் இது. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய பாடல் இது, இசையமைத்து, பாடியிருப்பவர் நம் கலைமாமணி திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்...
இப்பாடலில் ஆங்கில வார்த்தைகள் எப்படி நம் தமிழை சிதைத்து ஊடுருவியுள்ளன என்பதை கவிஞர் கோபத்துடன் எழுதியுள்ளார், அதை அப்படியே தம் குரலில் பிரதிபலித்துக் காட்டியுள்ளார் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்..!
அன்பு நண்பர் அமுதநேசன் அவர்கள் மின்னஞ்சல் மூலம் என்னிடம் வேண்டுகோள் விடுத்த பாடல்தான் இந்த 'தமிழா... நீ பேசுவது தமிழா..! எனும் பாடல்.
இந்த பாடலை மிகத் தாமதமாக வழங்குவதற்கு மன்னிக்க வேண்டும் அமுதநேசன்... எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய உங்களுக்கும், இப்பாடலை எனக்கு வழங்கிய நண்பர் தமிழ் சாந்த குமார் அவர்களுக்கும் எனது நன்றிகள்...
இப்படலை கேட்டுப் பாருங்கள்... வேண்டுவோர் தரவிறக்கிக் கொள்ளுங்கள்..!
இதோ அப்பாடல்...
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கேட்டமுங்கோ
மிக்க நன்றி தோழரே...
அடிக்கடி கேட்க வாங்க..!
நன்றி!
மிக்க நன்றி தோழரே...
அடிக்கடி கேட்க வாங்க..!
Post a Comment