அன்பு நண்பர் சிங்கப்பூர் பனசை நடராஜன் கேட்ட மற்றொரு பாடல் இது... 1950-ல் வெளிவந்த, மந்திரி குமாரி படத்தில் இடம்பெற்ற அற்புதமான பாடல்தான்... ' எருமை கன்னுகுட்டி.. என்னெருமை கன்னுகுட்டி..!'
இப்பாடலை எழுதியவர் கா.மூ.ஷெரீப் ஆக இருக்க வேண்டும், இல்லையெனில் மருதகாசியாக இருக்க வேண்டும்.
இசையமைப்பாளர் ஜி.ராமனாதன் அவர்களின் இசையமைப்பில் இப்பாடலுக்கு குரல் கெடுத்தது பி.எஸ்.சுப்பையா எனும் சிறுவன் ஆவான்...
குரலில் அவன் சிறுவன் என்றோ.. அக்குரல் ஒரு ஆணின் குரல் என்றோ கண்டுபிடித்தார்களேயானால் உங்களுக்கு 1000 பொற்காசுகள் பரிசு...
நீண்ட தேடல்களுக்குப் பிறகு இப்பாடல் இரைச்சல்களோடும், சில வெட்டல்களோடும்தான் கிடைத்திருக்கிறது... தெளிவான, முழுமையான ஒலிப்பேழை கிடைக்கவில்லை.. அதற்கு மன்னிக்கவும்... பிற நணபர்கள் யாரேனும் இப்பாடலினை இரைச்சல் இல்லாமல், முழுமையாக வைத்திருப்பின் கொடுத்து உதவும்படி அன்புடன் வேண்டுகிறேன்...

இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் அவர்களின் இசையமைப்பில் இப்பாடலுக்கு குரல் கெடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்கள்...
நீண்ட நாள் தாமத்திறகு எனை மன்னிக்க வேண்டுகிறேன்... வேலூப்பளு மற்றும் பாடல் கிடைக்காமல் போன சோர்வு... இவைகளே தாமதத்திற்கான காரணம்... எருமைக் கன்னுகுட்டி பாடல் அடுத்த பதிவில் இடம்பெறும்...