நாடோடி மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் இந்த 'தூங்காதே தம்பி தூங்காதே..!' பாடல்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் சொந்த தயாரிப்பில், அவரின் இயக்கத்தில், அவர் இரட்டை வேடமேற்று நடித்த படம்தான் இந்த நாடோடி மன்னன்.
1958- தீபாவளி அன்று வெளியான, இப்படத்தின் பாடல்களை எல்லாம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். இப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்கள். பாடியவர் நமது டி.எம்.எஸ்.
(S.M. சுப்பையா நாயுடு. தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களுள் குறிப்பிடத் தகுந்தவர். மலைக்கள்ளன் படத்திற்கு அவர் அமைத்திருந்த இசை, அந்தப் படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், எம்.ஜி.ஆர்., S.M. சுப்பையா நாயுடு என்ற வெற்றிக் கூட்டணி மீண்டும் நாடோடி மன்னன் படத்தில் இணைந்தது.)
எம்.ஜி.ஆர் தனது அனைத்து சொத்துக்களையும் அடமானம் வைத்தும், சிலவற்றை விற்றும் இப்படத்தை எடுத்து முடித்தார். 'இப்படம் வெற்றி பெற்றால் நான் மன்னனாவேன்... இல்லையெனில் நாடோடி ஆவேன்' என இப்படத்தை வெளியிடும் போது எம்.ஜி.ஆரே சொன்னார். படம் வெளியாகி வெள்ளி விழா கண்டது மட்டுமின்றி பல சாதனைகளையும் படைத்தது.
எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
5 comments:
i like MGR.
அப்படியா தோழரே..!
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி..!
அரிய பல செய்திகளை கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.
க.ச.குமார்
தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் எனது நன்றிகள் தோழரே..!
நண்பா நல்லா வரிகள்
Post a Comment