சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் 1961-ல் வெளிவந்த 'திருடாதே' என்ற படத்தில் இடம் பெற்ற ''திருடாதே... பாப்பா திருடாதே...'' என்ற பாடல்தான் இன்று நான் பதிவிலிடுவது.
மலைக்கள்ளன், நாடோடி மன்னன் படங்களின் வெற்றிக் கூட்டணியான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,எம்.ஜி.ஆர்,எஸ். எம். சுப்பையா நாயுடு கூட்டணிதான் இப்படத்திலும் இடம்பெற்றது.
இப்படத்தின் பாடல்களை எல்லாம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். இப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்கள். பாடியவர் நமது டி.எம்.எஸ். இப்படத்தை இயக்கியவர். ப. நீலகண்டன். இப்படத்தில் ஒரு சிறப்பு உண்டு. கவிஞர் கண்ணதாசன் இப்படத்திற்கு கதை வசனம் எழுதியிருக்கிறார். பாடல் ஏதும் எழுதவில்லை என்று நினைக்கிறேன்...
பட்டுக் கோட்டையாரின் இப்பாடல் வரிகள் அத்துனையும் வைரம்...
''திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே..!''
''இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா
பதுக்குற வேலையும் இருக்காது ..!''
''உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது..!''
எனக்குப் பிடித்த இப்பாடலை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்... பிடித்திருந்தால் இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..! மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்..! இயன்றவரை நான் தருகிறேன்..!
1 comment:
திருடாதே படத்தில் ஏழு பாடல்களை ஏழு கவிஞர்கள் எழுதியிருந்தனர். அதில் கவியரசும் ஒருவர்.
எல்லோரும் ஒரேயொரு பாடலை எழுதினர்.
யாரந்த ஏழுபேர்? மற்றும் பல தகவல்களைக் காண இந்த இழையில் சொடுக்குக.
https://youtu.be/B63WcI8iYp4?si=05GHDfoZ_2p1FqJu
Post a Comment